"நான் ஒரு தங்க நிற ஜரிகை சேர்த்து சில மடிப்புகள் தருகிறேன். கைகளில் சில கட்-அவுட்களையும் சேர்த்துக்கலாம். ஆனால் அதற்கு இன்னும் 30 ரூபா செலவாகும்."
இவை சாரதா மக்வானா தனது வாடிக்கையாளர்களுடன் நடத்தும் வழக்கமான உரையாடல்கள். அவர்களில் சிலர் சட்டை கைகளின் நீளம், சரிகை வகை மற்றும் முதுகு பக்கம் சரங்களுடன் இணைக்கப்பட்ட குஞ்சங்களின் எடை குறித்தும் கவனம் செலுத்துவதாக கூறுகிறார். "நான் துணியைக் கொண்டு அலங்காரப்பூ தைத்து ரவிக்கையில் சேர்ப்பேன்," என்று அவர் தனது திறமையைப் பற்றி பெருமிதம் கொள்கிறார். பின்னர் அவர் அதை எங்களுக்கு விளக்கிக் காட்டுகிறார்.
சாரதா மற்றும் அவரைப் போன்ற பிற உள்ளூர் ரவிக்கை தையல்காரர்கள், குஷால்கர் பெண்களின் விருப்பமான ஃபேஷன் ஆலோசகர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, புடவை அணியும் அனைத்து பெண்களுக்கும், அந்த 80 செ.மீ துணி அப்படியே தைக்கப்பட வேண்டும்.
பொதுக் கூட்டங்களில் கூட பெண்களுக்கு ஆதரவாக குரல் கிடைக்காத ஆணாதிக்க சமூகத்தில், பாலின பிறப்பு விகிதம் 1,000 ஆண்களுக்கு 879 பெண்கள் என்ற ஆபத்தான நிலையில் உள்ளது (தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு, NFHS-5), அங்கு பெண்கள் தங்கள் ஆடைகளை விருப்பப்படி வடிவமைத்துக் கொள்வது மகிழ்ச்சியளிக்கும் ஒன்று.
ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள இந்த சிறிய நகரம் தையல் கடைகளால் நிரம்பி வழிகிறது. ஆண்களுக்கான சட்டை, பேண்ட் தைப்பவர்கள், திருமண ஆடைகளுக்கான குர்தாக்கள், மணமகனுக்கான குளிர்கால கோட்டுகளை உருவாக்குபவர்கள் என பிரிக்கப்படுகிறார்கள். இரண்டுமே அமைதியானவை, ஆடைகளின் வண்ணங்கள் வெளிர் இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்தைத் தாண்டாது.










