யானை எப்போதும் தன் ஃபண்டியை (பயிற்சியாளர்) மறப்பதில்லை என்கிறார் சரத் மொரன். அவர் 90 யானைகளுக்கு மேல் பயிற்சி கொடுத்திருக்கிறார். காட்டுக்குள் தன் மந்தையுடன் இருந்தாலும் கூட தனக்கான ஃபண்டியை பார்த்தால் மந்தையை விட்டு அவரிடம் ஓடி வந்து விடும் என்கிறார் அவர்
பில்கானாவில் - தற்காலிக பயிற்சி முகாம் - யானைக் கன்று மனித ஸ்பரிசத்துக்கு பரிச்சயப்படுத்தப்படுகிறது. வழக்கமாக மாறும் வரை பல நாட்களுக்கு அந்த பயிற்சி அளிக்கப்படும். “பயிற்சியில் சிறு வலி ஏற்பட்டாலும் பெரிய விஷயமாகக் கருதப்படும்,” என்கிறார் சரத்.
நாளடைவில் யானைக் கன்றை சுற்றியிருக்கும் மக்களால் அச்சுறுத்தல் உணர்வு ஏற்படாத வரை மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
விலங்குக்கும் பயிற்சியாளருக்கும் இடையிலுள்ள நட்பை குறிக்கும் பாடல்களை சரத்தும் பிற பயிற்சியாளர்களும் யானையிடம் மென்மையாக பாடுகின்றனர்.





