“முன்புபோல் கிடையாது. தற்போதெல்லாம் பெண்களுக்கு புழக்கத்தில் உள்ள கருத்தடை முறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த  விழிப்புணர்வும் உள்ளது“ என்று கல் மற்றும் காரையாலான வீட்டின் திண்ணையில் உள்ள சூரிய ஒளியில் நின்றுகொண்டிருக்கும் சாலா காட்டூன்  கூறுகிறார். கடல் பச்சை நிறத்தில் அந்த வீட்டின் சுவருக்கு வர்ணம் தீட்டப்பட்டுள்ளது.

அவர் தனது அனுபவத்தில் இருந்து பேசுகிறார். பத்தாண்டுகளுக்கும் மேலாக, அவரும், அவரது அண்ணன் மகனின் மனைவி ஷாமா பர்வீனும்  அதிகாரப்பூர்வமின்றி அமர்த்தப்பட்ட சுகாதார ஊழியர்கள். அவர்கள் பிகாரின் மதுபானி மாவட்டத்தில் உள்ள ஹசன்பூர் கிராமத்தில் உள்ள பெண்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு மற்றும் மாதவிடாய் சுகாதாரம் குறித்து அறிவுரை வழங்கி வந்தார்கள்.

பெண்கள் அடிக்கடி, கருத்தடை குறித்த கேள்விகள் மற்றும் கோரிக்கைகளுடன் அவர்களை அணுகிவந்தனர். அவர்கள் அடுத்த கர்ப்பத்திற்கு எவ்வாறு இடைவெளியை பராமரிப்பது, நோய்தடுப்புகள் உள்ளிட்டவை குறித்து அறிவுரை பெற்றார்கள். சிலர் ஹார்மோன் கருத்தடை ஊசிகளையும் மறைமுகமாக கேட்டனர்.

ஷாமாவின் வீட்டில் ஓரத்தில் உள்ள ஒரு அறையில்  உள்ள தனிமையை பயன்படுத்தி பெண்கள் அவர்களிடன் ரகசிய அறிவுரையோ அல்லது ஊசி செலுத்திக்கொள்ளவோ வருவார்கள். அந்த சிறிய சிசிக்சையகத்தில் உள்ள அலமாரியில் மருந்து குப்பிகளும், அட்டைகளும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. 40 வயதுகளின் துவக்கித்தில் உள்ள ஷாமா மற்றும் 50 வயதுகளின் துவக்கித்தில் உள்ள சாலா இருவரும் முறையான பயிற்சி பெற்ற செவிலியரோ அல்லது தசையில் ஊசி செலுத்தும் பயிற்சி பெற்றவர்களோ கிடையாது. “அவர்களின் வீட்டில் உள்ளவர்களுக்கு எதுவும் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக சில நேரங்களில் பெண்கள் தனியாக வந்து, ஊசியை எடுத்துக்கொண்டு, விரைவாக கிளம்பிவிடுவார்கள். மற்ற பெண்கள் தங்கள் கணவருடனோ அல்லது பெண் உறவினர்களுடனோ வருவார்கள்“ என்று சாலா கூறுகிறார்.

ஹசன்பூரில் உள்ள குடும்பங்கள் அரிதாகவே குடும்ப கட்டுப்பாடு திட்டங்களைப்பயன்படுத்திய கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் இருந்ததைவிட, தற்போது வியத்தகு மாற்றம் ஏற்பட்டுள்ளது. பல்பராஸ் வட்டத்தில் உள்ள சைனி ஊராட்சியில் உள்ள ஒரு கிராமம். இங்கு தோராயமாக 2,500 குடும்பத்தினர் உள்ளனர்.

இந்த மாற்றத்தை கொண்டு வந்தது எது? “அதற்கு உள்ளே ஒரு கதை உள்ளது“ என்று ஷாமா கூறுகிறார்.

In the privacy of a little home-clinic, Salah Khatun (left) and Shama Parveen administer the intra-muscular injection
PHOTO • Kavitha Iyer

வீட்டில் உள்ள சிகிச்சையகத்தின் தனிமையில், சாலா கட்டூன் (இடது), ஷாமா பர்வீன் தசையில் ஊசி மருந்து செலுத்துவார்கள்.

கடந்த காலங்களில் ஹசன்பூரின் குறைந்தளவிலான கருத்தடை உபகரணங்கள் பயன்படுத்துவது, மாநில அளவிலான நிலையை உயர்த்தியது, பிகாரின் மொத்த கருவுறுதல் விகிதம் 3.4ஆக ( தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு 2015-16ல் குறிப்பிட்டது) இருந்தது. அகில இந்திய அளவிலான 2.2 என்ற விகிதத்தைவிட இது அதிகமானது. (மொத்த கருவுறுதல் விகிதம் என்பது, ஒரு பெண் தனக்கு குழந்தைபெறும் ஆண்டுகளில் பெற்றுக்கொள்ளும் குழுந்தைகளின் எண்ணிக்கையின் சராசரியாகும்)

தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு (2019-20) ல் மொத்த கருவுறுதல் விகிதம் 3 ஆக குறைந்துவிட்டது. இந்த குறைவு, கருத்தடை முறைகளை உபயோகிப்பது அதிகரிப்பதோடு ஒத்துப்போகிறது. 4வது மற்றும் 5வது சுற்று கணக்கெடுப்பில், கருத்தடை முறைகளின் உபயோகம் 24.1 சதவீதத்தில் இருந்து 55.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.

குழாய் இணைப்பு எனப்படும் tubal ligation என்ற முறையே பெண்களுக்கான குடும்ப கட்டுப்பாட்டு முறைகளில் ஆதிக்கம் செலுத்துகிறது. இது ஒரு கருத்தடை செய்முறையாகும். நவீன முறைகளில் இதுவே 86 சதவீதம் செய்யப்படுகிறது. (தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு 4 குறிப்பிடுகிறது). இதுகுறித்த விரிவான தகவல் தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு 5க்கு காத்திருக்கிறது. ஆனால், ஊசி செலுத்துவதன் மூலம் கருத்தடை உள்ளிட்ட குழந்தைகளுக்கு இடையில் இடைவெளியை உறுதிப்படுத்தும் புதிய முறைகள் குறித்த அழுத்தம், மாநில கொள்கையில் முக்கிய அம்சமாகும்.

ஹசன்பூரிலும், சாலாவும், ஷாமாவும் கவனித்தவகையில், பெரும்பாலான பெண்கள் கருத்தடையை வேண்டுவதாக கூறுகின்றனர் . முக்கியமாக மாத்திரைகள், depot-medroxy progesterone acetate என்ற ஹார்மோன் ஊசிகளை கேட்கின்றனர். இந்தியாவில் Depo-Provera’ and ‘Pari’ என்ற பெயரில் சந்தைப்படுத்தப்படுகிறது. அரசு மருந்தகங்கள் மற்றம் ஆரம்ப சுகாதார மையங்களில், இந்த மாத்திரை Antara’ என்ற பெயரில் வழங்கப்படுகிறது. 2017ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் வரை, இவை பிகாருக்கு அண்டை நாடான நோபாளத்தில் இருந்து லாப நோக்கற்ற குழுக்கள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் மூலம் இறக்குமதி செய்யப்பட்டது. அரசு நடத்தும் சுகாதார நிலையங்கள் தவிர மற்ற இடங்களில் இதன் விலை ரூ.245 முதல் ரூ.350 வரை உள்ளது. அரசு மையங்களில் இலவசம்.

அதன் எதிர்ப்பான்கள் இல்லாத ஊசி பல ஆண்டுகள் எதிர்ப்புத்திறன் பெற்றதாக இருந்தது. குறிப்பாக 90களில் பெண்கள் உரிமை குழு மற்றும் சுகாதார செயற்பாட்டாளர்கள் பக்கவிளைவுகளில் அக்கறை காட்டினர். அதில் வலியுடன் கூடிய ரத்தக்கசிவு, ரத்தகசிவின்மை, முகப்பரு, எடை அதிகரிப்பு, எடை இழப்பு, மாதவிடாய் ஒழுங்கின்மை இன்னும் பல இருந்தது. அதன் பாதுகாப்பு குறித்த நீண்ட போராட்டங்கள், ஒத்திகை, பல்வேறு குழுக்களிடம் இருந்து பெற்றப்பட்ட பதில்கள் மற்றும் மற்ற செயல்பாடுகள் இம்மருந்து 2017 வரை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படாமல் இருக்க செய்தது. இது தற்போது உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது.

ஊசி மூலம் செலுத்தப்படும் மருந்து antara என்ற பெயரில் 2017ம் ஆண்டு பிஹாரில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2019 ஜீனில் ஊரக மற்றும் நகர்புறத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும், துணை மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. மாநில அரசு தகவலின்படி, 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் 4,24,427 மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டிலேயே அதிகபட்சமாக இங்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 48.8 சதவீதம் பெண்கள், ஒருமுறை எடுத்துக்கொண்டு இரண்டாவது தவணையையும் எடுத்துக்கொண்டனர்.

Hasanpur’s women trust Shama and Salah, who say most of them now ensure a break after two children. But this change took time

ஹசன்பூரின் பெண்கள் ஷாமாவையும், சாலாவையும் நம்புகின்றனர். பெரும்பாலான பெண்கள் இரண்டு குழந்தைகளுக்கு பின்னர் இடைவெளி இருப்பதை உறுதி செய்வதாக கூறுகின்றனர். ஆனால் இந்த மாற்றம் ஏற்பட நீண்ட நாட்களானது.

இரண்டு ஆண்டுகளுக்கு மேல் கருத்தடை ஊசிகளை பயன்படுத்துவதில் ஏற்படும் பக்கவிளைவுகளை கண்காணிப்பது குறித்து அக்கறை இருந்தது. எலும்பு அடர்த்தி குறைவை ஏற்படுத்தும் என்ற ஆபத்து இருந்ததால், (கருத்தடை மருந்து எடுத்துக்கொள்வதை நிறுத்திவிட்டால், மீண்டு விடும் என்று நம்பப்பட்டது) உலக சுகாதார நிறுவனம் இந்த மருந்தை பயன்படுத்தும் பெண்கள் இரண்டாண்டுக்கு ஒருமுறை பரிசோதிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

ஷாமா மற்றும் சாலா ஆகிய இருவரும், பாதுகாப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கின்றனர். உயர் ரத்த அழுத்தம் கொண்ட பெண்களுக்கு ஊசி மருந்துகொடுத்து செய்யப்படும் கருத்தடை முறையை பரிந்துரைப்பதில்லை. இரண்டு சுகாதார ஊழியர்களும், கருத்தடை ஊசி செலுத்தப்படுவதற்கு முன் ரத்த அழுத்தத்தை நன்றாக பரிசோதித்துக்கொள்கின்றனர். பக்க விளைவுகள் குறித்து எவ்வித குற்றச்சசாட்டும் இதுவரை வந்ததில்லை என்று அவர்கள் மேலும் கூறுகிறார்கள்.

இந்த ஊசிமருந்தை கிராமத்தில் எத்தனை பெண்கள் எடுத்துக்கொள்கிறார்கள் என்ற தகவல் இல்லை. ஆனால், இது பெரும்பாலான பெண்கள் எடுத்துக்கொள்வதாக உள்ளது. ஒருவேளை இது ரகசியத்தன்மையை வழங்குகிறது மற்றும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை பெற்றுக்கொள்ளலாம் என்ற விருப்பத்தேர்வையும் வழங்குவதால் இது பிரபலாமான ஒன்றாக இருக்கலாம். இது, ஆண்டில் சில மாதங்கள் மட்டுமே ஊருக்கு வரும், நகரங்களில் பணிபுரியும், கணவர்களை மணம் புரிந்த பெண்களுக்கு குறைந்த காலத்திற்கு பயன்படுத்துவதற்கு எளிமையான முறையாக உள்ளது. (கடைசி தவணை மருந்து செலுத்திக்கொண்டதில் இருந்து, மூன்று மாதங்கள் கழித்து, பின்னர் சில மாதங்களில் கருவுறும் திறன் திரும்பிவிடுகிறது என்று சுகாதார ஊழியர்களும், மருத்துவ ஆராய்ச்சி கட்டுரைகளும் கூறுகின்றன)

மதுபானியில் ஹார்மோன் ஊசிகள் செலுத்திக்கொள்வதை ஏற்றுக்கொள்வது வளர்ந்து வருவதற்கு, இந்தப்பணிகள், கோகர்தியா பிரகாத் ஸ்வராஜ்ய விகாஷ் சங்கத்தின் மூலம் நடைபெறுவதும் ஒரு காரணமாகும். இந்நிறுவனம் வினோபாபாவே மற்றும் ஜெய்பிரகாஷ் நாராயண் ஆகியோரின் சீடர்களால் 1970களின் இறுதியில் நிறுவப்பட்டது. பரவலாக்கப்பட்ட ஜனநாயகம் மற்றும் சமூக அடிப்படையிலான தற்சார்பு ஆகிய கருத்துகளால் கவர்ந்திழுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நிறுவனமாகும். (மாநில அரசின் நோய்தடுப்பு முன்னெடுப்புகள் மற்றும் கருத்தடை முகாம்களில் விகாஷ் சங்கமும் இணைந்து செயல்படும். 1990களின் இறுதியில் இலக்கு அணுகுமுறைக்கு அடிக்கடி விமர்சிக்கப்படும்)

2000மாவது ஆண்டில், விகாஷ் சங்கம் பெண்களை சுய உதவிக்குழுக்கள் மற்றும் மஹிளா மண்டல் போன்ற குழுக்களை இந்த கிராமம் மற்றும் மற்ற கிராமங்களில் ஒருங்கிணைத்தபோது, முக்கியமாக முஸ்லிம் கிராமமான ஹசன்பூரில், போலியோ நோய் தடுப்பு மற்றும் குடும்ப கட்டுப்பாட்டு திட்டங்கள் தடுமாற்றமடைந்தன. சாலாவும் சிறு சேமிப்பு குழுவின் உறுப்பினர் ஆனார். அவர் ஷாமாவையும் சேர்ந்துகொள்ளும்படி ஊக்கப்படுத்தினார்.

கடந்த 3 ஆண்டுகளில், அவர்கள் இருவரும் மாதவிடாய், சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் குடும்ப கட்டுப்பாடு ஆகியவை குறித்து விகாஷ் சங்கம் ஒருங்கிணைத்த பயிற்சி திட்டங்களில் கலந்துகொண்டுள்ளனர். விகாஷ் சங்கம் பணிசெய்யும் மதுபானி மாவட்டத்தில் 40 கிராமங்களில், சங்கம், மாதவிடாய் சுகாதார பொருட்கள், ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகள் கொண்ட பைகள் விற்பனை செய்யக்கூடிய அளவிற்கு பெண்களை தயார்படுத்தி அதற்கு ஒரு நட்பு வட்டத்தையும் உருவாக்கி வைத்திருந்தது. இதனால், கருத்தடை மாத்திரைகள் பெண்களுக்கு, அதுவும் சக பெண்களை வைத்து வீடுகளுக்கே கொண்டு செல்ல வழிவகுத்தது. 2019ல் ஊசி மூலம் செலுத்தும் மருந்து கிடைக்கப்பெற்றது முதல் Pari என்ற பெயரில் அதுவும் மாதவிடாய் பொருட்கள் அடங்கிய பையில் இடம்பெற்றது.

Salah with ANM Munni Kumari: She and Shama learnt how to administer injections along with a group of about 10 women trained by ANMs (auxiliary-nurse-midwives) from the nearby PHCs
PHOTO • Kavitha Iyer

செவிலியர் முன்னி குமாரியுடன் சாலா: அவரும் ஷாமாவும், 10 பெண்கள் கொண்ட குழுவினருடன் சேர்ந்து எவ்வாறு ஊசி மூலம் மருந்து செலுத்துவது என்பதை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள செவிலியர்களிடம் இருந்து கற்றுக்கொண்டனர்

“நட்பு வட்டத்தைச் சேர்ந்த 32 பெண்கள் தற்போது விற்பனை பிரிவொன்றை துவக்கியுள்ளனர். அவர்களை நாங்கள் உள்ளூர் மொத்த வியாபாரிகளுடன் இணைத்துள்ளோம். அவர்களிடம் இருந்து இந்தப்பெண்கள் மொத்தமாக மொத்த விலையில் கொள்முதல் செய்துகொள்கின்றனர்“ என ரமேஷ் குமார் சிங் கூறுகிறார். அவர் விகாஷ் சங்கத்தின் முதன்மை நிர்வாக அலுவலர், மதுபானியைச் சேர்ந்தவர். இதற்காக சங்கம், சில பெண்களுக்கு முதன்மை முதலீடும் செய்துள்ளது. “அவர்கள் விற்பனை செய்யும் ஒவ்வொரு பொருளுக்கும் ரூ.2 லாபம் பெற முடியும்“ என்று சிங் மேலும் கூறுகிறார்.

ஹசன்பூரில், குறைந்தளவு எண்ணிக்கையிலான பெண்கள், ஊசி மூலம் செலுத்திக்கொள்ளும் மருந்தை வழக்கமாக எடுத்துக்கொள்ள துவங்கியபோது, அவர்கள் மூன்று மாதம் கழித்து, இரண்டு வாரங்களுக்கு பின்னர் அடுத்த தவணை மருந்தை எடுத்துக்கொள்வதை உறுதிசெய்ய வேண்டும். இரு தவணை மருந்து செலுத்திக்கொள்வதில் இதை முறையாக கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் சாலாவும் ஷாமாவும், 10 பெண்கள் கொண்ட குழுவினருடன் சேர்ந்து எவ்வாறு ஊசி மூலம் மருந்து செலுத்துவது என்பதை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள செவிலியர்களிடம் இருந்து கற்றுக்கொண்டனர். (ஹசன்பூருக்கு என்று ஆரம்ப சுகாதார நிலையம் கிடையாது. அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்கள் என்றால் அவை பல்பராஸ் மற்றும் ஜான்ஜ்ஹர்பூரில் உள்ளதுதான். இவையிரண்டும் 16 மற்றும் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது)

பல்பராஸ் ஆரம்ப சுகாதார நிலையத்தில் antara ஊசி எடுத்துக்கொண்ட பெண்களுள், மூன்று குழந்தைகளுக்கு தாயான உஸ்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம்பெண்ணுக்கு முன்னதாகவும், உடனடியாக அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்தது. “எனது கணவர் டெல்லி அல்லது எங்காவது வேலைக்கு சென்றுவிடுவார். அவர் ஊருக்கு திரும்பி வரும்போது நாங்கள் ஊசி எடுத்துக்கொள்வதற்கு முடிவெடுத்தோம்“ என்று அவர் கூறுகிறார். “இது கடுமையான காலகட்டம். பெரிய குடும்பத்தை நம்மால் இப்போது நிர்வகிக்க முடியாது. எனவே அறுவைசிகிச்சை மூலம் நிரந்தரமான தீர்வை பெற்றுக்கொள்ள விரும்புவதாக உஸ்மா வேலும் கூறினார்.

நடாமடும் சுகாதார ஊழியர்களாக பயிற்சி பெற்ற பெண்கள், இலவசமாக antara ஊசிகள் எடுக்க விரும்பும் பெண்களுக்கு உதவினர். ஆரம்ப சுகாதார நிலையங்கள் அவர்கள் தங்கள் பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும். கிராம அளவில் உள்ள அங்கன்வாடி மையங்களில் கூட இந்த ஊசி பெண்களுக்கு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று சாலாவும், ஷாமாவும் கூறுகின்றனர். சுகாதார துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கையில், மூன்றாவது கட்டத்தில் அது துணை மையங்களிலும் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“தற்போது கிராமத்தில் பெரும்பாலான பெண்கள் இரண்டு குழந்தைகளுக்குப்பின்னர் ஒரு இடைவெளி விடுகின்றனர்“ என்று ஷாமா கூறுகிறார்.

“ஆனால், இந்த மாற்றம் ஹசன்பூரில் ஏற்படுவதற்கு சிறிது காலம் தேவைப்பட்டது. ஆனால் நாங்கள் செய்துவிட்டோம்“ என்று ஷாமா உற்சாகமாக கூறுகிறார்.

ஷாமாவின் கணவர் ரஹ்மத்துல்லா அபு, 40 வயதுகளின் இறுதியில் உள்ளார். அவர் மருத்துவத்துறையில் பயிற்சி செய்து வருகிறார். அவரிடம் எம்பிபிஎஸ் டிகிரி இல்லாவிட்டாலும் அத்துறையில் உள்ளார். அவரின் ஆதரவுடன், 15 ஆண்டுகளுக்கும் முன்னமாக, அவர் மதரஸா மன்றத்தின் அலிம் அளவிலான தேர்வு, பட்டப்படிப்பிற்கு முந்தைய இடைநிலை சான்றிதழ் படிப்பை முடித்திருந்தார். அதுவும், பெண்கள் குழுவுடன் அவர் செய்யும் பணியும், அவர் கணவருடன் செல்வதற்கு அவருக்கு உதவுகிறது. சில நேரங்களில் பிரசவத்திற்கு செல்வதற்கும், அவர்களின் வீட்டில் உள்ள சிகிச்சையகத்திற்கு வரும் நோயாளிகளை பார்த்துக்கொள்வதற்கும் கூட உதவுகிறது.

PHOTO • Kavitha Iyer

மத நம்பிக்கைகள் கொண்ட முஸ்லிம்கள் அதிகமுள்ள தங்கள் கிராமத்தில் அவர்கள் பேசி புரியவைக்க வேண்டிய கருத்தடை முறைகளில் ஷாமா மற்றும் சாலாவும் நம்பிக்கையில்லாதவர்களாகத்தான் இருந்துள்ளார்கள். சமுதாயமே பின்னர் ஒரு காலத்தில் மாற்றி யோசிக்க ஆரம்பித்தது என்று அவர்கள் கூறுகிறார்கள்

1991ல் அவருக்கு திருமணம் நடைபெற்றபோது, பருவ வயதை எட்டிய ஷாமா ஒரு குழந்தை மனப்பெண். தற்போது சூபால் மாவட்டத்தில் உள்ள துபியாஹியில் இருந்து ஹசன்பூருக்கு வந்திருந்தார். “நான் முன்பெல்லாம் தவறாமல் கட்டாயமாக பர்தா அணிவேன். நான் வீதிகளைக் கூட பார்த்ததில்லை“ என்று அவர் கூறுகிறார். பெண்கள் குழுக்களுடன் இணைந்து பணியாற்றுவது அவற்றையெல்லாம் மாற்றிவிட்டது. “நான் தற்போது ஒரு குழந்தைக்கு தேவையான முழு உடல் பரிசோதனையும் செய்வேன். என்னால் ஊசி மூலம் மருந்து செலுத்த முடியும். உடலில் குளுக்கோஸ் ஏற்றுவதற்கு தேவையான நடைமுறைகளையும் செய்ய முடியும். என்னால் அந்தளவு வரை செய்ய முடியும்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.

ஷாமா மற்றும் ரஹ்மத்துல்லா தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். 28 வயதான மூத்த மகனுக்கு இன்னும் திருமணமாகவில்லை. இரண்டாவது மகள் தனது பட்டப்படிப்பை முடித்து விட்டு, பிஎட் படிக்கவுள்ளார். “அல்லாவின் அருளால் அவர் நன்முறையில் ஆசிரியராக வேண்டும்“ என்று ஷாமா கூறுகிறார். இளைய மகன் கல்லூரியில் படிக்கிறார்.

ஹசன்பூரின் பெண்கள், அவர்களின் குடும்பத்தை பெருக்கவேண்டாம் என ஷாமா சொல்வதை கேட்பார்கள். “மற்ற உடல் உபாதைகளுக்காகவும் என்னிடம் வருவார்கள். அவர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு குறித்து நான் அறிவுறுத்துவேன். சிறிய குடும்பமே மகிழ்ச்சியான குடும்பம்“ என்று அவர் கூறுகிறார்.

ஒரு காற்றோட்டமான திண்ணையில் அமர்ந்து ஷாமா பாடம் நடத்துகிறார். அங்குள்ள சுவரில் உள்ள வர்ண பூச்சுகள் பெயர்ந்துகொண்டு வரும், ஆனால், அதன் தூண்களும், வளைவுகளும் பாடம் சொல்லித்தரும் இடத்திற்கு நல்ல சூரிய ஒளியைக்கொடுக்கும். அதில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு 5 முதல் 16 வயது வரை இருக்கும். அவர்களுக்கு பள்ளி பாடங்களுடன், எம்ராய்டரி, தையல் பயிற்சி மற்றும் இசையும் கற்றுத்தருகிறார். இங்கு அந்த மாணவர்களின் கேள்விகளுக்கு ஷாமா பதில் கூறும் ஒரு வசதியும் உண்டு.

அவரின் முந்தைய மாணவர்களில் 18 வயது கசாலா கட்டூனும் ஒருவர். “தாயின் கருவறைதான் குழந்தையில் முதல் மதரஸா. அனைத்து பாடங்களும், நல்ல ஆரோக்கிமும் அங்கிருந்துதான் துவங்குகிறது“ என்று ஷாமாவிடம் இருந்து கற்றுக்கொண்டதை அப்படியே கூறுகிறார். “மாதவிடாய் சுழற்சியின்போது என்ன செய்ய வேண்டும். திருமணம் செய்துகொள்வதற்கு ஏற்ற வயது என்ன? என்பதெல்லாம் நான் கற்றுக்கொண்டேன். எனது குடும்பத்தில் இப்போது அனைத்து பெண்களும் துணி உபயோகிப்பதில்லை. சானிடரி நாப்கீன்கள் உபயோகிறார்கள். நான் சத்தான உணவு உட்கொள்வது குறித்து கவனமாக இருக்கிறேன். நான் ஆரோக்கியமாக இருந்தால், ஆரோக்கிமான குழந்தையை எதிர்காலத்தில் பெறமுடியும்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.

சாலாவும் (அவரது குடும்பம் குறித்து பேசுவது அவருக்கு பிடிக்கவில்லை) அங்குள்ள பெண்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ளார். அவர் ஹசன்பூர் மஹிளா மண்டலத்தின் 9 சிறுசேமிப்பு குழுக்களின் தலைவியாக உள்ளார். ஒவ்வொரு குழுவிலும் 12-18 பெண் உறுப்பினர்கள் உள்ளனர். மாதத்திற்கு ரூ.500 முதல் ரூ.750 வரை சேமிக்கின்றனர். அந்த குழு உறுப்பினர்கள் மாதத்தில் ஒரு நாள் சந்திக்கின்றனர். அதில் நிறைய இளம் தாய்மார்கள் உள்ளனர். அதில் குடும்ப கட்டுப்பாடு குறித்து பேசுவதை சாலா ஊக்குவிக்கிறார்.

Several young mothers often attend local mahila mandal meetings where Salah encourages discussions on birth control
PHOTO • Kavitha Iyer

நிறைய இளந்தாய்மார்கள் உள்ளூர் மஹிளா மண்டல கூட்டங்களில் அடிக்கடி பங்கேற்கிறார்கள். அவர்களுடன் குடும்ப கட்டுப்பாடு குறித்து பேசுவதை சாலா ஊக்குவிகிறார்.

ஜீத்தேந்திர குமார், மதுபானியைச் சேர்ந்தவர். விகாஷ் சங்கத்தின் முன்னாள் தலைவர். 1970களின் பிற்பகுதியில் இச்சங்கத்தை துவக்கியவர்களுள் ஒருவர். அவர் கூறுகையில், “எங்களின் 300 பெண்கள் குழு கஸ்தூர்பா மஹிளா மண்டல் என்று அழைக்கப்படுகிறது. இதுபோன்ற (ஹசன்பூர்) பழமைவாத சமுதாயத்தில் கிராமப்புற பெண்களுக்கு அதிகாரமளித்தலை உண்மையாக்குவது எங்களின் நோக்கம். போலியோ சொட்டு மருந்து எடுத்துக்கொள்வது ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்ற வதந்திகளும் இப்பகுதிகளில் உண்டு. மாற்றம் ஏற்பட கால அவகாசம் தேவைப்படும்“ என்றார். அவர்களின் அனைத்து வகையான பணிகளால், ஷாமா மற்றும் சாலா தன்னார்வலர்களை அச்சமுதாய மக்கள் நம்புகிறார்கள் என்று அவர் மேலும் கூறுகிறார்.

மத நம்பிக்கைகள் கொண்ட முஸ்லிம்கள் அதிகமுள்ள தங்கள் கிராமத்தில் அவர்கள் பேசி புரியவைக்க வேண்டிய கருத்தடை முறைகளில் ஷாமா மற்றும் சாலாவும் நம்பிக்கையில்லாதவர்களாகத்தான் இருந்துள்ளார்கள். சமுதாயமே பின்னர் ஒரு காலத்தில் மாற்றி யோசிக்க ஆரம்பித்தது என்று அவர்கள் கூறுகிறார்கள்

“நான் உங்களுக்கு ஒரு உதாரணத்தை மேற்கோள் காட்டுகிறேன்“ என்று ஷாமா கூறுகிறார். “எனது பிஏ முடித்துள்ள உறவினர் ஒருவர் கடந்தாண்டு மீண்டும் கருவுற்றார். அவருக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளனர். கடைசி குழந்தைக்கு அவர் அறுவைசிகிச்சை செய்திருந்தார். அவரது  அடிவயிறு திறந்திருக்கும் எனவே, நான் அவரை கவனமாக இருக்கும்படி எச்சரித்திருந்தேன். ஆனால், அவருக்கு கடுமையான சிக்கல் ஏற்பட்டு, கருப்பையை அகற்ற தற்போது மேலும் ஒரு அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அனைத்திற்கும் அவர்கள் 3 முதல் 4 லட்ச ரூபாய் வரை செலவு செய்தனர். இதுபோன்ற சம்பவங்களும் மற்ற பெண்கள் போதிய கருத்தடை முறைகளை தவறாமல் பின்பற்ற வைத்துவிடுகிறது“ என்று அவர் மேலும் கூறினார்.

பாவம் எது என்று மக்கள் இப்போது புரிந்துகொள்கிறார்கள் என்று சாலா கூறுகிறார். “எனது மதமும் கூறுகிறது. நான் எனது குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டும், அவனுக்கு நல்ல உடல் ஆரோக்கியம், அவனுக்கு நல்ல உடைகள் எல்லாம் வழங்கி அவனை நன்றாக வளர்க்க வேண்டும். ஒரு டஜன் அல்லது அரை டஜன் குழந்தைகளை பெற்றுக்கொண்டு, அவர்களை அப்படியே அலைய விடுகிறோம். நமது மதம் நமக்கு குழந்தைகளை பெற்றுக்கொண்டு, அவர்களை அவர்களே பாதுகாத்துக்கொள்ளும்படி விட்டுவிட கட்டளையிடவில்லை“ என்று அவர் மேலும் கூறுகிறார். “

பழைய அச்சங்கள் பயந்தோடிவிட்டன. “மாமியாருக்கு வீட்டில் அதிக சுமைகள் இருப்பதில்லை. மகன் பணம் ஈட்டி, மனைவிக்கு அனுப்புகிறார். மனைவி வீட்டில் முக்கியமாக கருதப்படுகிறார். அவருக்கு குழந்தைகளிடையே இடைவெளி விடுவது குறித்து நாங்கள் அறிவுறுத்துகிறோம். கருத்தடை சாதனங்கள், மாத்திரைகள் மற்றும் ஊசி ஆகியவை குறித்து கூறுகிறோம். ஒருவருக்கு இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் இருந்தால், அவர்களுக்கு கருத்தடை அறுவைசிகிச்சையை அறிவுறுத்துகிறோம்“ என்று சாலா கூறுகிறார்.

இந்த முயற்சிக்கு ஹசன்பூர் மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. சாலாவை பொறுத்தவரை “அவர்கள் புரிந்துகொண்டார்கள்“ என்கிறார்.

பாரி மற்றும் கவுண்டர் மீடியா டிரஸ்டின் தேசிய அளவிலான கிராமப்புறத்தில் வளரிளம் பெண்கள் மற்றும் இளந்தாய்மார்கள் நிலை குறித்து, இந்தியாவின் மக்கள்தொகை அறக்கட்டளையின் உதவியுடனான முன்னெடுப்பு இது, முக்கியமான மற்றும் இந்த ஓரங்கட்டப்பட்ட குழுவின் நிலையை வெளிக்கொணர்வதற்கான முன்னெடுப்பு. சாதாரண மக்களின் அனுபவங்கள் மற்றும் அவர்களின் குரலிலே இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுரையை மறுபிரசுரம் செய்ய [email protected], [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிகளில் தொடர்புகொள்ளுங்கள்.

தமிழில்: பிரியதர்சினி. R.

Kavitha Iyer

Kavitha Iyer has been a journalist for 20 years. She is the author of ‘Landscapes Of Loss: The Story Of An Indian Drought’ (HarperCollins, 2021).

Other stories by Kavitha Iyer
Illustrations : Labani Jangi

Labani Jangi is a 2020 PARI Fellow, and a self-taught painter based in West Bengal's Nadia district. She is working towards a PhD on labour migrations at the Centre for Studies in Social Sciences, Kolkata.

Other stories by Labani Jangi
Editor and Series Editor : Sharmila Joshi

Sharmila Joshi is former Executive Editor, People's Archive of Rural India, and a writer and occasional teacher.

Other stories by Sharmila Joshi
Translator : Priyadarshini R.

Priyadarshini R. is a freelance translator and research scholar. She has previously worked as a journalist with newspapers like Dinamalar, Dinakaran and news channels like Sun TV etc.

Other stories by Priyadarshini R.