அநேகமாக அவருக்கு 70 வயது இருக்கலாம். ஆனால் அவர் பாடுகையிலும் ஆடுகையிலும் வயது தெரியவில்லை. 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சட்டீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரில் நடந்த தேசியப் பழங்குடி நடன விழாவில் கலந்து கொண்டவர்களில், பஞ்சாரா (அல்லது லம்பாடி) பழங்குடி சமூகத்தை சேர்ந்த பிகாலி வள்ளிதான் மிகவும் வயதானவர்.

பஞ்சாராக்கள் எளிதில் கவனத்தை ஈர்க்கக் கூடியவர்கள். அசாதாரண நிறங்களில் உடைகள் அணிவார்கள். அவர்களை மோசமாக பிரதியெடுக்கும் இந்தி சினிமாக்கள் கூட அப்படித்தான் காட்டியிருக்கிறது. கண் கவரும் நகைகளும் வெண்ணிற வளையல்களும் அணிந்திருப்பார்கள் (ஒரு காலத்தில் விலங்கின் எலும்பு கொண்டு செய்யப்பட்டது, பிற்காலத்தில் ப்ளாஸ்டிக்காக மாறியிருக்கிறது).

அவர்கள் சிறந்த கலைஞர்கள் என்கிற உண்மையும் இருக்கிறது.

ராய்ப்பூர் விழாவில் கலந்து கொண்ட குழுவிலேயே வயதானவர் பிகாலி வள்ளிதான். அவருடன் சேர்ந்து கோர் பாலி மொழியில் புஜ்ஜியும் வள்ளியும் சாரதாவும் நமக்காக பாடிக் காட்டுகிறார்கள். குழுவில் இருந்த பலர் தெலங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்திலுள்ள தேவரகொண்டா மண்டலத்தின் பழங்குடி கிராமமான நெகுடுவை சேர்ந்தவர்கள்.

இரண்டு மகன்களையும் ஐந்து மகள்களையும் கொண்ட பிகாலி வள்ளிக்கு நல்கொண்டாவில் இரண்டு ஏக்கர் நிலம் இருக்கிறது.

வழக்கமாக ஆண்கள் வாசிக்கும் தாளத்துக்கு லம்பாடி சமூக பெண்கள் நடனமாடுவார்கள். பாடுபவர்கள் நல்ல விளைச்சல் கிடைப்பதற்கு அவர்களின் கடவுளருக்கு நன்றி தெரிவிக்கிறார்கள்.

தமிழில்: ராஜசங்கீதன்

காணொளி: பிக்காலி வள்ளியும் பிற லம்பாடி பெண்களும் கோர்-பால் மொழியில் பாடுகின்றனர்.

Purusottam Thakur

পুরুষোত্তম ঠাকুর ২০১৫ সালের পারি ফেলো। তিনি একজন সাংবাদিক এবং তথ্যচিত্র নির্মাতা। বর্তমানে আজিম প্রেমজী ফাউন্ডেশনে কর্মরত পুরুষোত্তম সমাজ বদলের গল্প লেখায় নিযুক্ত আছেন।

Other stories by পুরুষোত্তম ঠাকুর
Translator : Rajasangeethan

রাজাসংগীতন চেন্নাইবাসী লেখক। এক প্রখ্যাত তামিল খবরের চ্যানেলে সাংবাদিক হিসেবে কাজ করেন।

Other stories by Rajasangeethan