பஞ்சாபில் நெல் பயிரிடுவது பல விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதித்துவிட்டது என்று பர்னாலா மாவட்டம் மற்றும் மன்சாவைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகின்றனர். அவர்களுக்கு மாநிலம் வழங்குவதாக அறிவித்த விலையையும், ஆனால், அவர்களின் விளைபொருட்கள் வாங்கப்பட்ட விலை குறித்தும் பேசுகிறார்கள். மான்சாவில் உள்ள அலிசர் கலன் கிராமத்தைச் சேர்ந்த மூத்த விவசாயி குர்ஜ்த் சிங் “விவசாயிகளின் வாழ்க்கை முற்றிலும் கவலையானது” என்று கூறுகிறார்.

இந்த வீடியோவில் உள்ள அவர்களின்  பேச்சை கேளுங்கள். விவசாயிகள் விடுதலை நடைபயண த்திற்காக 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி பஞ்சாப் விவசாயிகள் டெல்லி சென்றபோது பதிவு செய்யப்பட்டது. கடன் தள்ளுபடி, பயிர்களுக்கான குறைந்தளவு ஆதார விலை மற்றும் சுவாமிநாதன் கமிஷன் அறிக்கை யை நிறைவேற்றுவது உள்ளிட்டவை அவர்களின் தேவையாகும்.

தமிழில்: பிரியதர்சினி.R.

Subuhi Jiwani

சுபுஹி ஜிவானி, ஊரக இந்திய மக்கள் ஆவணவகம் - பேரியின் முதுநிலை ஆசிரியர்.

Other stories by Subuhi Jiwani
Translator : Priyadarshini R.

பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.

Other stories by Priyadarshini R.