கிராமத்தில் உள்ள பலர் மாற்றுத்திறனாளியாக இருக்கின்றனர். பிறப்பிலிருந்து மாற்றுத்திறனாளியாக இருப்பதை போல, சமூகரீதியாகவும் அரசின் அலட்சியத்தாலும் கூட மாற்றுத்திறனாளிகள் உருவாகும் வாய்ப்பு உண்டு. உதாரணமாக ஜார்க்கண்டின் உரேனிய சுரங்கங்கள் அல்லது சரிசெய்யப்படாத மராத்வடாவின் பஞ்சங்களால் ஃபுளோரைட் இருக்கும் நிலத்தடி நீரை மக்கள் குடிக்க வேண்டிய கட்டாயம் போண்றவற்றை சொல்லலாம். சில நேரங்களில், நோய் மற்றும் மருத்துவ அலட்சியத்தாலும் மாற்றுத்திறனாளிகள் உருவாகின்றனர். லக்நவை சேர்ந்த தூய்மைப் பணியாளரான பார்வதி தேவியின் விரல்கள், தொழுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறது. மிசோரமை சேர்ந்த தேபாஹலா சக்மா, அம்மை வந்து பார்வை இழந்தார். பல்கரின் பிரதிபா ஹிலிம் கேங்க்ரீன் வந்து கை கால்களை இழந்தார். சிலர் அறிவு ரீதியாக மாற்றுத்திறனாளியாக இருக்கின்றனர். ஸ்ரீநகரை சேர்ந்த மொஹ்சினுக்கு பெருமூளைவாதம் இருக்கிறது. மகாராஷ்டிராவின் பிரதீக், மனநலிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இத்தகைய சூழல்களில், இந்த சவால்களை வறுமையும் அசமத்துவமும் மருத்துவமின்மையும் பாகுபாடும் தீவிரமாக்குகின்றன. பல மாநிலங்களில் வாழும் மாற்றுத்திறனாளிகள் பற்றிய பாரி கட்டுரைகள் இவை