இந்திய கிராமங்களின் வாக்குகளை எது தீர்மானிக்கிறது? விவசாய நெருக்கடி, கடன் தள்ளுபடி, மருத்துவம், சாலை, பள்ளிகள், வேலைகள், நல்ல ஊதியம், மதிப்புமிக்க வாழ்க்கைகள் போன்றவை கிராம வாக்காளர்கள் கவனம் செலுத்தும் அம்சங்கள். ஆந்திரப்பிரதேசம், குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் உத்தரகாண்ட் கிராமங்களில் பாரி கண்டறிந்தது இதைத்தான். சில இடங்களில் கோஷ்டிகள் ஆளுகின்றன. சிலவற்றில், தொழில்துறை அல்லது மக்களின் நிலம் மற்றும் நீரை சூறையாடும் திட்டங்கள் அல்லது நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் முதலியவற்றாலான மக்களின் கோபம் நிலவுகிறது. முழு கட்டுரைகளை இங்கு வாசிக்கவும்.