'யாருக்குத் தெரியும், அவசரநிலை புதிய உடையில் திரும்பும் என்று
இப்போது எதேச்சதிகாரம் ஜனநாயகம் என மறுபெயரிடப்படும் என்று
இப்போதெல்லாம் கருத்துக்களை எதிர்ப்பவர்கள் மௌனமாக்கப்படுகிறார்கள் அல்லது சிறையில் அடைக்கப்படுகிறார்கள் அல்லது இரண்டும் நடக்கிறது, விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் சிவப்பு, பச்சை, மஞ்சள் நிற கொடிகளை உயர்த்தியபடி ராம்லீலா மைதானத்திற்குள் நடந்து சென்றபோது எதிர்ப்பு பாடலின் இந்த வரிகள் மீண்டும் உண்மையாக ஒலித்தன.
AIKS (அகில இந்திய கிசான் சபா), BKU (பாரதிய கிசான் யூனியன்), AIKKMS (அகில இந்திய கிசான் கேத் மஸ்தூர் சங்கதன்) மற்றும் பிற அமைப்புகளைச் சேர்ந்த விவசாயிகள் 2024, மார்ச் 14 அன்று SKM (சம்யுக்தா கிசான் மோர்ச்சா) ஒன்றிணைக்கும் தளத்தின் கீழ் நடைபெற்ற கிசான் மஸ்தூர் மகா பஞ்சாயத்தில் பங்கேற்க வரலாற்று சிறப்புமிக்க மைதானத்தில் கூடினர்.
"மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்ட பிறகு, அரசு சில வாக்குறுதிகளை அளித்தது, ஆனால் அவை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இப்போது அவர்கள் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அவர்கள் செய்யாவிட்டால், நாங்கள் தொடர்ந்து போராடுவோம்", என்று கலான் கிராமத்தைச் சேர்ந்த பெண் விவசாயி பிரேமமதி பாரியிடம் கூறினார். விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் பண்ணை சேவைகள் சட்டம், 2020, விவசாயிகளின் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம், 2020 மற்றும் அத்தியாவசிய பொருட்கள் (திருத்தம்) சட்டம், 2020 ஆகியவற்றை அவர் குறிப்பிட்டார்.
"நாங்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போராட்டத்திற்காக இங்கு வந்தோம்," என்று அவர் மேலும் கூறினார். மகாபஞ்சாயத்துக்கு வந்த உத்தரபிரதேசத்தின் ஷாஜகான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பெண்களில் பிரேமமதியும் ஒருவர். அவர்கள் விவசாயிகள் குழுவான பாரதிய கிசான் யூனியன் (BKU) உடன் இணைந்திருந்தனர். "இந்த அரசு செழிக்கிறது, ஆனால் விவசாயிகளை அழிக்கிறது", என்று அவர் கோபத்துடன் கூறினார்.
பாரியிடம் பேசிய பெண்கள் அனைவரும் 4 - 5 ஏக்கர் நிலத்தில் வேலை செய்யும் சிறு விவசாயிகள். இந்தியாவில் பெண் விவசாயிகளும், தொழிலாளர்களில் 65 சதவீதத்திற்கும் அதிகமானோரும் விவசாய வேலைகளை செய்கிறார்கள். ஆனால் பெண் விவசாயிகளில் வெறும் 12 சதவீத பெண்கள் மட்டுமே தங்கள் பெயரில் நிலம் வைத்துள்ளனர்.
















