குடும்பத்திற்கு உணவளிப்பதில் இனி பிரச்சனை இருக்காது என்றுதான் ருக்ஸனா காட்டூன் நினைத்தார். இரண்டு ஆண்டுகளாக அலைக்கழிக்கப்பட்டு மூன்றாவது முயற்சியில்தான் அவருக்கு 2020 நவம்பர் மாதம் ரேஷன் அட்டை கிடைத்தது. திடீரென பெருந்தொற்று உருவாகி பல மாதங்களுக்கு நிலைமையை மோசமாக்கிவிட்டது.
2013 தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் (NFSA) பிரிவின் கீழ் ‘முன்னுரிமை குடும்பம்’ என்ற பிரிவில் தகுதிவாய்ந்த பயனாளிகளை மாநில அரசுகள் கண்டறிந்தன.
பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள புழுதியான நகராட்சி பகுதியுடன் அண்மையில் இணைக்கப்பட்ட கிராமத்தில் அச்சமயத்தில் அவர்கள் வசித்த இடமே சொந்த வீட்டு முகவரியாக பதிவு செய்யப்பட்டிருந்தது. ருக்ஸனா இறுதியாக ஏழு பேர் கொண்ட குடும்பத்திற்கான மானியத்தைப் பெற்றார்.
2021 ஆகஸ்ட் மாதம் அக்குடும்பம் டெல்லிக்குத் திரும்பியதும் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டபோதும் அவரது குடும்பத்திற்கு உணவு தானியங்கள் கிடைப்பதில் மீண்டும் தேக்கம் ஏற்பட்டது.
ஒன்றிய அரசின் ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை (ONORC) திட்டத்தின் கீழ், NFSA பயனாளிகள் ‘முன்னுரிமை குடும்பங்கள்,’ ‘ஏழைகளிலும் ஏழை’ என்ற பிரிவுகளின் கீழ் வகுக்கப்பட்டவர்களுக்கு எந்த நியாய விலை கடையிலும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட உணவு தானியங்களைப் பெற்றுக் கொள்ளும் உரிமைப் பெற்றுள்ளனர். பொது விநியோகத் திட்டத்தின் (PDS) கீழ் உரிமம் பெற்ற கடைகள், ஆதாருடன் இணைந்த பயோமெட்ரிக் அங்கீகாரத்தைக் கொண்டு பொருட்களை விநியோகம் செய்கின்றன. ஆனால் அருகில் உள்ள மேற்கு டெல்லியின் ஷாதிபூர் மெயின் பஜார் பகுதி நியாய விலை கடைக்கு ருக்ஸனா மாதாந்திர ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு செல்லும் போதெல்லாம், மின் விற்பனை மையத்தின் (ePOS) இயந்திரம் பின்வருமாறு சொல்கிறது: ‘உங்கள் ரேஷன் அட்டை IMPDSல் காணவில்லை’.
PDS ன் கீழ் ஒன்றிய அரசால் மாநில அரசுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் உணவு தானியங்கள் பொது விநியோக அமைப்பின் ஒருங்கிணைந்த மேலாண்மை (IMPDS) கீழ் 2018ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதனால் ONORC திட்டத்தின் கீழ் நாட்டில் எந்த பகுதியிலும் புலம்பெயர்ந்தோர் தங்களுக்கான ஒதுக்கீட்டைப் பெறும் தகுதி பெற்றவர்கள்.













