24. பிரேம் பாடியா நினைவு அறக்கட்டளை, புதுடெல்லி, 2020
சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி விவகாரங்களில் ஊடகத்தின் பங்கிற்காக பாரி குழு பிரேம் பாடியா விருதினை வென்றது. “பருவநிலை தாக்கம், கிராமப்புற இந்தியாவில் தொற்றின் தாக்கம் உள்ளிட்ட பரவலான கள செய்தி சேகரிப்பிற்காக” அளிக்கப்பட்டுள்ளது.
23. இந்திய மக்கள் தொடர்புக் குழு, பெங்களூரூ, 2020
தமிழ்நாட்டின் ஆழ்கடல் பகுதிகளில் கடல்பாசி எடுப்பவர்கள் குறித்து செய்தி சேகரித்த நமது பாரி செய்தியாளர் எம். பழனிக்குமார் ஆண்டின் சிறந்த செய்தித் தொடர்பாளர் விருதை வென்றார். புகைப்பட தொகுப்பாக வெளிவந்த இக்கட்டுரை படகில் இருப்பதைவிட நீரில் அதிகநேரம் மூழ்கும் தமிழ்நாட்டின் பாரதி நகர் மீனவப் பெண்களின் அசாதாரண செயல்களை பற்றிப் பேசுகிறது. பருவநிலை மாற்றமும், கடல் வளங்கள் அதிகளவில் சுரண்டப்படுவதும், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
22. இந்திய மக்கள் தொடர்பு குழு, பெங்களூரூ, 2020
நெடுஞ்சாலையை வளப்படுத்த பர்தி பள்ளி இடிக்கப்பட்டது குறித்து செய்தி அளித்த பாரி செய்தியாளர் ஜோதி ஷினோலி ஆண்டின் செய்தித் தொடர்பாளர் - ஆண்டின் சிறந்த கருத்துள்ள செய்திக்கான விருதை வென்றுள்ளார். மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் உள்ள இப்பள்ளி நீண்டகாலமாக ஒதுக்கப்பட்ட, வறுமையில் வாடும் சமூக குழந்தைகளுக்காக ஆசிரியர் பன்சே பர்தியால் தொடங்கப்பட்டது. இப்பள்ளி 2019, ஜூன் 6ஆம் தேதி இடிக்கப்பட்டது அவர்களை கவலை, நிச்சயமற்ற தன்மையில் விட்டுள்ளது.
21. இந்திய ஊடக நிறுவனம், சர்வதேச செஞ்சிலுவை சங்கம், புதுடெல்லி, 2019
பாரியின் ஊர்வஷி சர்கார் எழுதிய ‘எங்கள் வீடுகள் மறைகின்றன. யாருக்கும் அக்கறையில்லை’ என்ற கட்டுரை, சிறந்த கட்டுரைப் பிரிவில் முதல் பரிசை வென்றது. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இடப்பெயர்வு, மேற்குவங்கத்தின் சாகர், கோராமாரா தீவுகளுக்கு இடையேயான மக்களின் புலம்பெயர்வு, மூழ்கும் தீவுகள், வீடுகள் மற்றும் வாழ்வாதாரம் பற்றி இக்கட்டுரை பேசுகிறது.
20. ஜியோ மமி மும்பை திரைப்படத் திருவிழா 2019 (அக்டோபர் 17-24)
பாரியின் யாஷாஸ்வினி ரகுநந்தனின் ‘அந்த மேகம் ஒருபோதும் மறைவதில்லை’ (தட் க்ளவுட் நெவர் லெஃப்ட்) என்ற திரைப்படம் இவ்விழாவில் இந்தியா கோல்ட் பிரிவில் தேர்வு செய்யப்பட்டது.
19. FILAF திரைப்படத் திருவிழா, பெர்பிஞான், ஃபிரான்ஸ்: சர்வதேச கலை புத்தகம் மற்றும் திரைப்பட விழா
பாரியின் யாஷாஸ்வினி ரகுநந்தனின் ‘அந்த மேகம் ஒருபோதும் மறைவதில்லை’ (தட் க்ளவுட் நெவர் லெஃப்ட்) என்ற திரைப்படம் கோல்ட் ஃபிரான்சின் FILAF திரைப்பட திருவிழாவில் (சர்வதேச கலை புத்தகம் மற்றும் திரைப்பட திருவிழா) GOLD FILAF வென்றது.
18. டுட்டி பிரெமி டெல் பிசாரோ திரைப்படத் திருவிழா, பிசாரோ, இத்தாலி 2019
பாரியின் யாஷாஸ்வினி ரகுநந்தனின் ‘அந்த மேகம் ஒருபோதும் மறைவதில்லை’ என்ற திரைப்படம் இத்தாலியின் பிசாரோ திரைப்படத் விழாவில் சிறப்புப் பிரிவில் திரையிடப்பட்டது.
17. மும்பை பிரஸ் கிளப், 2019
பாரியில் 2018ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி வெளியான ‘ஒரு நாளுக்கு 6000 இலைகளை சேகரிப்பது’ எனும் கட்டுரைக்காக மகளிர் அதிகாரமளித்தல் மற்றும் பாலின சமத்துவப் பிரிவில், பாரி செய்தியாளர் ஜோதி ஷினோலி சிவப்பு மை விருதை வென்றார்.
16. இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம், புதுடெல்லி, 2019
பாரியில் வெளியான மார்த்வாடா கட்டுரைத் தொடர்களுக்காக பாரியின் பார்த் எம்.என், ராம்நாத் கோயங்கா விருதை (மறைக்கப்படும் இந்தியாவை வெளிப்படுத்துவது என்ற பிரிவில்) வென்றார்.
15. தி ஸ்டேட்ஸ்மேன், கொல்கத்தா, 2018
பாரி எழுத்தாளர் பூஜா அவ்ஸ்தி எழுதி 2017ஆம் ஆண்டு ஜூலை 5 மற்றும் ஆகஸ்ட் 3ஆம் தேதிகளில் வெளிவந்த ‘அடித்தாலும் தலைவணங்காத சுனந்தா சாஹூவின் அமைதி போராட்டம்’ மற்றும் ‘ஊறுகாய், அப்பளத்தைக் கடந்த டிரம்சும், கனவுகளும்’ ஆகிய இரு கட்டுரைகள் கிராமப்புற செய்தி சேகரிப்பில் ஸ்டேட்ஸ்மேன் விருதை வென்றது.
14. பாப்பூலேஷன் ஃபர்ஸ்ட், புதுடெல்லி, 2018
பாரியில் 2017ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி வெளியான ஊர்வஷி சர்கார் தனது புலிகளால் கைம்பெண் ஆனவர்கள், அரசால் கைவிடப்பட்டவர்கள் என்ற கட்டுரைக்காக கலைப் பிரிவில் 2017ஆம் ஆண்டு பாலின சமத்துவத்திற்கான லாட்லி மீடியா மற்றும் விளம்பர விருதை வென்றார்.
13. ஐரோப்பிய ஆணையம், புருஸல்ஸ், பெல்ஜியம், 2018
பாரியில் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி வெளியான 2000 மணி நேரங்கள் கரும்பு அறுத்தல் கட்டுரைக்காக பாரியின் பார்த் எம்.என், லாரன்சோ நடாலியா ஊடக விருதை வென்றார்.
12. தெற்காசிய குறும்பட விழா, கொல்கத்தா, 2018
SASFF-2018க்கு பாரியின் 15 வீடியோ திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டன. ஆவணப்படப் பிரிவில் 13 திரைப்படங்களும், அதிகாரப்பூர்வ பனோரமா பிரிவில் 2 திரைப்படங்களும் தேர்வு செய்யப்பட்டன. (திரைப்படங்களின் பட்டியலை கீழ் காணலாம்.)
11. பரிகி ஹனுமந்தா ராவ் அறக்கட்டளை, ஆந்திர பிரதேசம், 2018
பாரியில் வெளியான தனது கட்டுரைகளுக்காக பாரியின் ராகுல் எம், 2017-2018ஆம் ஆண்டிற்கான பரிகி ஹனுமந்தா ராவ் ஊடகவியலாளர் விருதை வென்றார்.
10. வசந்த் வியாகியன்மாலா, புனே, மகாராஷ்டிரா, 2018
புதிய ஊடகத் துறையின் தனித்துவமான இயல்பை அங்கீகரிக்கும் வகையில் “பீப்பிள்’ஸ் ஆர்கைவ் ஆஃப் ரூரல் இந்தியா எனும் புது முயற்சிக்கு” நீதிபதி எம்.ஜி. ரனடே விருது முதன்முறையாக (அவ்விருதின் துவக்க ஆண்டு) பாரிக்கு வழங்கப்பட்டது.
9. ஸ்ரீ முருகாமடம், விஹ்த்ரதுர்கா, கர்நாடகா, 2017
“ஊடக இயக்கத்தின் வழியாக கிராமப்புறங்களில் பீப்பிள்’ஸ் ஆர்க்கைவ் ஆஃப் ரூரல் இந்தியாவின் சேவைகளுக்காக” பசவாஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
8. அப்பன் மேனன் நினைவு குழு, புதுடெல்லி, 2017
“கிராமப்புற இந்தியாவை ஆவணப்படுத்துவதற்கு பீப்பிள்’ ஸ் ஆர்க்கைவ் ஆஃப் ரூரல் இந்தியா செய்துள்ள பணிகளுக்காக” அப்பன் மேனன் நினைவு விருது வழங்கப்பட்டது.
7. சி-ஷெல் ஊடகம் மற்றும் இலக்கிய விருதுகள், துபாய், 2017
“கிராமப்புற இந்தியா குறித்த அசாதாரண மற்றும் ஆழமான செய்திகளை அளித்து தனித்துவமான சாதனைப் படைத்த பாரிக்கு” சி-ஷெல் ஊடக பரிசு.
6. கேசரி மஹ்ரத்தா டிரஸ்ட் மற்றும் திலக் மகாராஷ்டிரா வித்யாபீடம், புனே, 2017
ஊடகத் துறையில் சிறப்பாக பணியாற்றுவதற்காக பி. சாய்நாத் / பாரி (பாரி தொடங்கியதை அங்கீகரிக்கும் வகையில்) லோகமானிய பால கங்காதர திலகர் விருது.
5. ஆனந்த் பலேராவ் ஸ்மிரிதி அறக்கட்டளை, அவுரங்காபாத், 2016
“கிராமப்புற இந்தியா குறித்த பீப்பிள்’ஸ் ஆர்க்கைவ் ஆஃப் ரூரல் இந்தியாவின் துல்லியமான செய்தி சேகரிப்பிற்காகவும், இந்திய மொழிகளில் ஊடகத் துறையை மேம்படுத்தும் அவற்றின் அணுகுமுறைக்காகவும்” ஆனந்த் பலேராவ் ஸ்மிரிதி விருது.
4. கிராந்திசின்ஹ் நானா பாடில் அறக்கட்டளை, சங்கிலி, மகாராஷ்டிரா, 2016
பி. சாய்நாத்திற்கு (பாரியின் முக்கியத்துவம் மற்றும் அங்கீகரித்தல்) கிராந்திசின்ஹ் நானா பாடில் நினைவு விருது.
3. தேசிய திரைப்பட விருதுகள், இந்திய அரசு, புதுடெல்லி, 2016
பாரியில் 2016ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் தேதி வெளியான மகேஸ்வர் நெசவாளர்கள் குறித்த திரைப்படத்திற்காக, பாரியின் நிதி காமத் மற்றும் கேயா வாஸ்வானி ஆகியோர் 63ஆவது தேசிய திரைப்பட விருதுகள் 2016க்கான வெள்ளித் தாமரை (ரஜத் கமல்) பரிசை சிறந்த விளம்பரப் படப் பிரிவிற்காக பெற்றனர்.
2. பிரஃபுல் பித்வாய் நினைவு குழு, புதுடெல்லி, 2016
“விவசாயிகளின் துன்பம் குறித்த செய்தி சேகரிப்பு மற்றும் வர்ணனைக்காகவும், ஊக்கமளிப்பது, தகவல் ஆதாரமாகத் திகழ்வதற்காகவும்” பாரிக்கு முதல் பிரஃபுல் பித்வாய் நினைவு பரிசு.
1. பாப்புலேஷன் ஃபர்ஸ்ட், மும்பை, 2015
பாரியில் 2015ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதி வெளிவந்த ‘வரலாறு படைத்து, நூறை நோக்கி’ என்ற கட்டுரைக்கு பாலின சமத்துவத்திற்கான 2014-15ஆம் ஆண்டிற்கான லாட்லி ஊடகம் மற்றும் விளம்பர விருது சிறந்த புலனாய்வுக் கட்டுரைப் பிரிவில் பாரியின் புருஷோத்தம் தாகூர் பெற்றார்.