மகாராஷ்டிரா பெண்களின் உறுதித்தன்மை மற்றும் கலை திறனுக்கான இந்த சான்றை எங்களது இணையதளத்தில் வெளியிட்டதில் பாரி பெருமிதம் கொள்கிறது. இது சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 8 2017 அன்று வெளியிடப்பட்டது.
திருகைப்பாடல்கள் தரவுதளத்தை சமூக ஆர்வலர்கள் மற்றும் புகழ்பெற்ற அறிஞர்களான புனேவின் சமூக அறிவியல் கூட்டுறவு ஆராய்ச்சி மையத்தை இணைந்து நிறுவிய மறைந்த ஹேமா ரெய்கர் மற்றும் கை பொய்டிவின் ஆகியோர் துவங்கினர். அவர்கள் ஒன்றாக மகாராஷ்டிராவின் 110,000க்கும் மேற்பட்ட நாட்டுப்புற பாடல்களை கடந்த 20 ஆண்டுகளாக பதிவு செய்து வருகின்றனர்.
1990களின் பிற்பகுதியில் இசைக்கலைஞரும் முன்னால் பிரான்சு தேசிய அறிவியல் ஆராய்ச்சியாளருமான பெர்னார்ட் பெல் இந்த திட்டத்தில் இணைந்து தரவுதளத்திற்கான எழுத்து மற்றும் இசைக்குறிப்புகள் மேலும் 120 மணி நேரம் பதிவு செய்திருக்கிறார். இவை ஹரியானாவின் குர்காவுனில் உள்ள இசைக்கான காப்பகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தால் பராமரிக்கப்பட்டு, பின்னர் பிரான்சின் ஆக்ஸ் என் ப்ராவின்ஸில் உள்ள பேச்சு மற்றும் மொழித்தரவு களஞ்சியத்திற்கு அனுப்பப்பட்டு பேராசிரியர் பெல் அவர்களால் நிர்வகிக்கப்பட்டது. அங்கு திருகைப் பாடல்களுக்கான தறவுதளம் பின்னர் திறந்த காப்பக தகவல் அமைப்புகளுக்கான முன்மாதிரியாக மாறியது.
1993 - 1998க்கு இடையில் திருகைப்பாடல்கள் திட்டத்திற்கு யுனெஸ்கோ, நெதர்லாந்தின் வளர்ச்சி குழு அமைச்சகம் மற்றும் சுவிட்சர்லாந்தின் மனிதகுல முன்னேற்றத்துக்கான சார்லஸ் லியோபோல்ட் மேயர் அறக்கட்டளை ஆகியவை நிதி உதவி வழங்கின.
"ஹேமா ரைக்கர் மற்றும் கை பொய்டேவின் ஆகியோருடன் திருகை பாடல்களை ஆவணப்படுத்துதல்/ பதிப்பித்து மொழிபெயர்த்து திறந்த அணுகலில் வெளியிட தனிப்பட்ட அர்ப்பணிப்பு என்னிடம் இருந்தது என்று பேராசிரியர் பெல் கூறினார். 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நான் பூனேவில் பணியாற்றி வரும் திருகைப் பாடல் நிபுணர் குழுவுக்கு உபகரணங்களை நன்கொடையாக வழங்கிய தான் மூலம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. இந்த முழுதொகுப்பிற்கான ஆரம்ப வெளியீட்டு வடிவமைப்பில் நாங்கள் ஒன்றாக பணி செய்தோம். தரவுதளத்தை மறுவடிவமைப்பு செய்வதற்கும், தேவநாகரி குறியீட்டிலிருந்து உரைகளை மொழியாக்கம் செய்வதற்கும் ஒரு தீவிர முதலீடு தேவைப்பட்டது".
பாரியின் தலையீட்டுடன் இத்திட்டம் பழைய மற்றும் புதிய ஒத்துழைப்பாளர்களுடன் சேர்ந்து புதுப்பிக்கப்பட்டது. மொழிபெயர்க்கப்படாத 70,000 பாடல்களை புனேவின் கோகலே அரசியல் மற்றும் பொருளாதார நிறுவனத்தின் முன்னாள் ஆவண அலுவலரான ஆஷா ஓகலே மற்றும் அவரது சகாக்களான ரஜனி கலத்கர் மற்றும் ஜிதேந்திர மெயிட் ஆகியோர் கையாண்டு வருகின்றனர். மராத்தி மொழி மற்றும் கிராமப்புற வாழ்க்கை குறித்த அவர்களின் அறிவு மொழிபெயர்ப்பு முயற்சிக்கு விலைமதிப்பற்றதாக இருக்கிறது.
ஹரியானாவின் சோனேபட்டில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்துடன் 2016 ஆம் ஆண்டு ஒரு கூட்டு, அந்நிறுவனத்தில் அரசியல் அறிவியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வரும் கில்லீஸ் வெர்னியர்ஸ்இன் தலைமையில் உருவானது. 2016 - 17 ஆம் ஆண்டிற்கான யங் இந்தியா பெல்லோஷிப் பெற்ற மூன்று உறுப்பினர்களான மெஹரிஷ் தேவகி, சினேகா மாதுரி மற்றும் பூர்ணபிரஜன் குல்கர்னி ஆகியோர் மொழிபெயர்ப்புகளை மதிப்பாய்வு செய்து கூடுதல் காப்பக உதவிகளை வழங்கி வருகின்றனர். பாரியின் நிர்வாக ஆசிரியரான நமீதா வைகர் பாரியின் திருகை பாடல் திட்டத்திற்கு தலைமை தாங்குகிறார், அதே வேளையில் அமெரிக்க இந்திய அரக்கட்டளையின் கிள்ண்டன் ஃபெலோவான ஒலிவியா வேரிங் தரவுதளத்தை இயங்கச் செய்வதற்கு பங்களிப்பு வழங்கினார்.
இத்திட்டத்திற்கு கணிசமான பங்களித்த பலரில் பீம்சன் நானேகர் (நேர்காணல் செய்பவர்), தத்தா ஷிண்டே (ஆராய்ச்சியாளர்), மாளவிகா தலூத்கர் (புகைப்பட கலைஞர்), லதா போரே (தரவு உள்ளீட்டாளர்) கஜராபாய் தாரேக்கர் (படியெடுப்பவர்) ஆகியோரும் அடங்குவர்.
இந்நிகழ்ச்சியில் முக்கியமானவரும் திட்டத்தில் பங்குபெற்றிருப்பவருமான கங்குபாய் அம்போரின் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து காணொலிகளும் படங்களும் ஆண்டரின் பெலின் பணி.
பாரியில் புதியதாக சேர்க்கப்பட்டிருக்கும் இதை பற்றி ஆராய உங்களை நாங்கள் அழைக்கிறோம், இதேபோல வரும் மாதங்கள் மற்றும் ஆண்டுகளில் அதிக அளவில் வெளியிடப்படும். பாரி இந்த திருகைபாடல்களை வெளியிடுவதற்கு உதவிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவிக்கிறது குறிப்பாக கிராமப்புற மகாராஷ்டிராவின் பெண்களின் வாழ்வையும் சாதனையையும் போற்றுகிறது, ஆனால் அவர்களுக்கு இப்பாடலோ தரவோ கிடைப்பதில்லை.