வடக்கு பீகாரில் மழைக்காலம் என்றால் கொண்டாட்ட காலம். இரவு முழுவதும் மழை கொட்டித் தீர்த்த பிறகு, பெண்கள் படகுகளில் பாடியபடி வெளியே வந்து வெள்ளத்தை கொண்டாடுவர். அவ்வப்போது வெள்ளம் ஏற்பட்டாலும் மக்கள் நேர்மறையான ஒரு பிணைப்பையே ஆறுகளின் மீது கொண்டிருந்தனர். வெள்ளங்களின் ஆழம், காலம், தீவிரம் போன்ற ஒவ்வொரு அம்சங்களையும் உணர்ந்து அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். காலப் போக்கில் இதெல்லாம் மாறியது. வட பீகாரி மக்கள் வெள்ளத்தை ‘வழிபடுபவர்கள்‘ என்பது மறைந்து வெள்ளத்தால் ‘பாதிக்கப்படுபவர்கள்‘ என்ற நிலை உருவாகிவிட்டது.
2015 ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டது. இது 2015 பாரி ஃபெல்லோஷிப்பின் சயந்தோனி பல்சவுதுரியின் அங்கமாக இருந்தது.
ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் சுயமாக கற்ற ஒளிப்பதிவாளரும், படத்தொகுப்பாளருமான சம்பித் தத்தாசவுதுரியால் செய்யப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் விவசாயம், பொது சுகாதாரம், கல்வி சார்ந்த செய்திகளில் இணைந்து வேலை செய்து வருகிறார்.
தமிழில்: சவிதா