கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் பந்திப்பூர் தேசிய பூங்கா அருகே உள்ள மங்களா கிராமத்தைச் சேர்ந்தவர் எம்.இந்திரகுமார். அவரது குடும்பத்திற்கு ஒரு காலத்தில் நிலம் இருந்தது. இப்போது சொந்தமாக எதுவும் இல்லை. 38 வயதாகும் இந்திரா தனது மனைவி மற்றும் 19 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குண்டுலுபேட்டையில் உள்ள பள்ளிக்குச் செல்லும் இரண்டு பிள்ளைகள் ஆகியோருடன் வசிக்கிறார்.
இந்திரா தனது கிராமத்தில் உள்ள மாரியம்மா அறக்கட்டளையின் நலப்பணிகளுக்கு ஆதரவளிக்கும் ஒரு வனவிலங்கு நினைவுப் பொருட்கள் விற்பனை கடையில் மேலாளராக உள்ளார். கால்நடைகள் மீதான காட்டு விலங்குகளின் தாக்குதல்களை ஆவணப்படுத்துவதன் மூலம் அவர் அறக்கட்டளைக்கு உதவி வருகிறார். புலிகள், சிறுத்தைகள் மற்றும் மர நாய்கள் போன்ற வேட்டை விலங்குகளிடம் தங்கள் கால்நடைகளை இழந்து பாதிக்கப்படும் காப்பகத்தைச் சுற்றியுள்ள கிராமவாசிகளுக்கு நிதி இழப்பீடு வழங்குவதும் அறக்கட்டளையின் பணியில் ஒன்று.












