
SANGUR, PUNJAB
|THU, JUL 20, 2023
கட்ச்சி நாட்டுப்புற பாடல்களின் பெட்டகம்
கச்ச் மகிளா விகாஸ் சங்காதனின் (KMVS) கூட்டுடனான பாரியின் இந்த பல்லூடக பெட்டகம், கச்சின் செறிவான நாட்டுப்புற பாடல் தொகுப்பை அளிக்கிறது. காதல், ஏக்கம், இழப்பு, திருமணம், பக்தி, தாய்நிலம், பாலின விழிப்புணர்வு, ஜனநாயக உரிமைகள் போன்ற கருப்பொருட்களை 341 பாடல்களும் கொண்டிருக்கின்றன. அப்பகுதியின் அபரிமிதமான பன்முகத்தன்மை புகைப்படங்கள், மொழிகள் மற்றும் இசை ஆகியவற்றினூடாக வெளிப்படுகிறது. குஜராத்தின் 305 வாத்திய இசைக்கலைஞர்களும் பாடகர்களும் பல இசைவடிவங்களை வாசித்து, கச்சில் ஒரு காலத்தில் செழிப்பாக இருந்த வாய்மொழி பாரம்பரியங்களின் மீளச் செய்கின்றனர். அவற்றின் சத்தங்கள் பாலைவன மணலில் மெதுவாக காணாமல் போய்க் கொண்டிருக்கும் சூழலில் அவற்றை பாதுகாக்க வேண்டுமென்பது மிகவும் முக்கியம்
Author
Translator
6. நெருக்கமான எதிரிகளைப் பற்றி
திருமணத்துக்கு பின் குடும்பத்தை விட்டுப் பிரிந்த ஒரு கச்ச் இளம்பெண்ணின் துயரப் பாடல்
5. நம்பிக்கைக்கும் சகோதரத்துவத்துக்குமான கச்ச் தூபிகள்
இசை, கட்டடக்கலை மற்றும் பண்பாடு ஆகியவற்றின் ஒருமித்த பாரம்பரியத்தை அரசியல் மாற்றங்களையும் மீறி தக்க வைத்திருக்கும் பகுதியை சேர்ந்த ஒரு நாட்டுப்புற பாடல். பாலைவனத்தின் தனித்துவதன்மையை இந்த பக்தி பாடல் கொண்டிருக்கிறது
4. ஒரு முற்றம், ஒரு வீடு, ஒரு கிராமம்
திருமணத்துக்கு பின் வீட்டை விட்டு கிளம்பும் ஒரு பெண்ணின் உணர்வுகளை இந்த கட்ச்சி பாடலில் கேளுங்கள்
3. பெண்கள் விடுதலையை பாடும்போது
இந்த நாட்டுப்புற பாடல் சம சொத்துரிமை கோரும் கட்ச் கிராமப் பெண்களின் புதிய எதிர்க்குரலை பதிவு செய்கிறது
2. ஒரு நதியும் ஒரு காதல் கதையும்
புஜ் பின்னணியில் பாடப்படும் கட்ச்சி நாட்டுப்புற பாடல் காதலையும் ஏக்கத்தையும் பாடுகிறது. பாரியில் வெளியாகும் கட்ச்சி நாட்டுப்புற பாடல் தொடரில் இது இரண்டாவது
1. கட்ச்சின் இனிமை தண்ணீர் பாடல்
குஜராத்தின் வடமேற்குப் பகுதியை சேர்ந்த இப்பாடல் கட்ச் மக்களையும் அவர்களின் பண்பாட்டையும் கொண்டாடுகிறது
Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]
Donate to PARI
All donors will be entitled to tax exemptions under Section-80G of the Income Tax Act. Please double check your email address before submitting.
PARI - People's Archive of Rural India
ruralindiaonline.org
https://ruralindiaonline.org/articles/songs-of-the-rann-archive-of-kutchi-folk-songs-ta






