புது டவுனின் சிறுமிகள் நாங்கள், ஓ ராஜா
ஹேய்… எங்கு செல்கிறாய் நளின நடை போட்டு?
நாங்கள் ஏழு சகோதரர்கள் மணம் முடிக்கவில்லை
ஹேய்… எங்கு செல்கிறாய் நளின நடை போட்டு?
என்ன மாதிரி பெண்ணை விரும்புகிறாய் ஓ ராஜா
ஹேய்… எங்கு செல்கிறாய் நளின நடை போட்டு?
கறுப்பு நிற பெண்தான் எங்களுக்கு வேண்டும், ஓ ராஜா
ஹேய்… எங்கு செல்கிறாய் நளின நடை போட்டு?
கன்சாரிக்கும் ரகாயத் பபாரியாவுக்கும் இடையிலான பிரபல காதல் கதையை அடிப்படையாக வைத்து 1970-களில் எடுக்கப்பட்ட குஜராத்தி படமான சன் கன்சாரி, அந்தக் காலக்கட்டத்தில் மண நிகழ்ச்சிகளில் இடம்பெறுவது வழக்கமாக இருந்தது. கேள்வி-பதில் கேட்டு ஆடும் ஆண் மற்றும் பெண் நடனக் கலைஞர்களுக்கு இடையிலான பாடல் பரிமாற்றமாக நிகழும் இப்பாடல் அழகு, விருப்பம் மற்றும் திருமணம் குறித்த கருத்துகளை பாடுகிறது. அந்த நாட்டுப்புற பாடல், அதே வகையுடன், பாலினங்களை மாற்றி, விழிப்புணர்வு பெற்ற கிராம பெண்கள் தங்களுக்கான உரிமைகளை கேட்பது போல இங்கு பாடப்படுகிறது. மரியாதையுடனும் மதிப்புடனும் வாழவும் சொந்தமாக நிலம் மற்றும் சொத்தும் கொண்டிருக்கவும் இப்பாடல் உரிமை கேட்கிறது. சொத்துரிமையை கோர, பண்பாட்டு வழியை அவர்கள் கையில் எடுத்துக் கொள்கின்றனர்.
போராட்டக் குரலாக வெளிப்படும் பாடல்கள், ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலையில் முக்கிய பங்காற்றுவதை உலக வரலாறில் நாம் பார்த்திருக்கிறோம். நகாத்ரனா மாவட்டத்தை சேர்ந்த நந்துபா ஜடேஜாவால் பாடப்பட்டிருக்கும் இப்பாடல், 2017ம் ஆண்டில் கச்ச் மகிளா விகாஸ் சங்காத்தன் பெண்கள் விழிப்புணர்வு அடைய உதவியது.


