கச்ச் மகிளா விகாஸ் சங்காதனின் (KMVS) கூட்டுடனான பாரியின் இந்த பல்லூடக பெட்டகம், கச்சின் செறிவான நாட்டுப்புற பாடல் தொகுப்பை அளிக்கிறது. காதல், ஏக்கம், இழப்பு, திருமணம், பக்தி, தாய்நிலம், பாலின விழிப்புணர்வு, ஜனநாயக உரிமைகள் போன்ற கருப்பொருட்களை 341 பாடல்களும் கொண்டிருக்கின்றன. அப்பகுதியின் அபரிமிதமான பன்முகத்தன்மை புகைப்படங்கள், மொழிகள் மற்றும் இசை ஆகியவற்றினூடாக வெளிப்படுகிறது. குஜராத்தின் 305 வாத்திய இசைக்கலைஞர்களும் பாடகர்களும் பல இசைவடிவங்களை வாசித்து, கச்சில் ஒரு காலத்தில் செழிப்பாக இருந்த வாய்மொழி பாரம்பரியங்களின் மீளச் செய்கின்றனர். அவற்றின் சத்தங்கள் பாலைவன மணலில் மெதுவாக காணாமல் போய்க் கொண்டிருக்கும் சூழலில் அவற்றை பாதுகாக்க வேண்டுமென்பது மிகவும் முக்கியம்