இரும்பு தகடை தயார் செய்ய, ரகுவீர் விஸ்வர்கர்மா, நீண்ட சுத்தியல் கொண்டு தாள லயத்துடன் அடிக்கிறார்: ‘தட் தட் தட் தட்.’ தொடரும் சிறு சுத்தியலின் ‘தப் தப் தப்’ சத்தத்துக்கு பிறகு அக்கலைஞர், இரும்புத்தாளில் மேடு பள்ளம் வேறு இல்லை என்பதை உறுதி செய்து கொள்கிறார். பிறகு அந்த தாளை கொண்டு மணி செய்யவிருக்கிறார் அவர்.
”கால்நடைகளின் ஆபரணங்கள் இவை,” என்கிறார் ரகுவீர் பெருமிதக் குரலில். “மக்களுக்கு ஆபரணம் தயாரிக்கும் பொற்கொல்லர் போல, நாங்கள் கால்நடைகளுக்கு ஆபரணம் தயாரிக்கிறோம்.”
ஜார்க்கணின் பலாமு மாவட்டத்தின் பரான் கிராமத்தை சேர்ந்த 76 வயது ராம்காத் தொலா, கால்நடை மணிகள் தயாரிக்கும் மூத்த கைவினைஞர்களில் ஒருவர் ஆவார். தொலா (கிராமத்தில் கொல்லர்கள் அதிகம் வசிக்கும் பகுதி) ஒரு பெரிய ஆலையைப் போன்றது என்கிறார் ரகுவீர். இங்குள்ள அனைவரும் மணி தயாரிப்பார்கள்.
“என் தந்தை, தாத்தா எல்லாரும் இந்த வேலையை பார்த்தார்கள். நான் படிக்கவில்லை. கைநாட்டுதான். ஆனால் உங்களால் நம்ப முடியாது,” என்கிறார் ஐந்தாம் தலைமுறை கலைஞரான அவர்.
இந்த குளிர்கால காலையில், தன்னுடைய வீட்டுக்கு வெளியே ஒரு சணல் சாக்கின் மீது ரகுவீர் அமர்ந்திருக்கிறார். இடதுகையில் அவர் உலோகத்தாளை பிடித்துக் கொண்டு, வலது கையில் சுத்தியலை சுழற்றுகிறார்.
கால்நடை மணிகள், கால்நடைகளின் ஆபரணங்களாக கருதப்பட்டு வருகிறது. உலகளவில், கிராமப்புற சமூகங்கள், மணியை ஆபரணம் என்கிற பயன்பாட்டையும் தாண்டியதாக கருதுகின்றன. அடர்காடுகளுக்குள் விவசாயிகள் தம் கால்நடைகளை கண்டுபிடிக்க இந்த மணிகள் உதவுகின்றன.
வளமான கிராம வாழ்க்கையான அடையாளமாக இருந்த மணிகளின் சத்தம், இயந்திரங்களின் வரவுக்கு பிறகு மங்கிவிட்டது.



















