கே.என். மகேஷா பயிற்சிப் பெற்ற இயற்கை ஆர்வலர். அவர் வணிகவியல் படித்தவர். அவரது தந்தையுடன் சேர்ந்து குனகஹள்ளி கிராமத்தில் விவசாயம் செய்கிறார். அவர் பந்திப்பூர் தேசிய பூங்காவில் வளர்ந்திருந்த ஆக்கிரமிப்பு களைகளை அரசு சாரா நிறுவனத்துடன் இணைந்து அகற்றிய போது இக்கட்டுரைக்காக புகைப்படங்களை எடுத்துள்ளார்.
வனவிலங்குகளுடன் வாழுதல் பற்றிய பெரும் பணியில் இக்கட்டுரை ஓர் அங்கம். பாரியில் ஆறு கட்டுரைகள் வெளியாகும் தொடரில் நான்காவதாக இக்கட்டுரை வெளியாகி இருக்கிறது. “முதன்முதலில் என்னிடம் கேமரா கொடுத்தபோது எதை எடுப்பது என்றே தெரியவில்லை. புகைப்படங்கள் எடுக்க மிகவும் வெட்கப்பட்டேன்,” என்கிறார் 27 வயது மகேஷா. “பிறகு புதிதாக, ஆர்வம் தரும் வகையில் கண்ணில் படும் எதையும் புகைப்படம் எடுத்தேன். இத்திட்டம் எனக்கு மிகவும் பிடித்தது, இதைக் கொண்டு கிராமங்களில் நடப்பதை நாம் அறியலாம்.“














