அவன் வாசலிலே பிடிக்கப்பட்டான், முச்சந்தியில் கொல்லப்பட்டான
தெருக்களில் எல்லாம் ஒரே அமளிதுமளி.
ஓ! ஹமிரியோ இன்னும் இங்கு வரவில்லை.

இப்பாடல் 200 வருடங்களை தாண்டிய பழமை கொண்டது. கட்ச்சி நாட்டுப்புறக் கதை ஒன்றை அடிப்படையாகக் கொண்டது. ஹமிர் மற்றும் ஹம்லி ஆகிய இரு இளம் காதலர்கள் பற்றிய கதையை இது சொல்கிறது. அவர்களின் குடும்பங்கள் காதலை ஏற்கவில்லை. எனவே இருவரும் ரகசியமாக புஜ்ஜின் ஹமிசார் நதிக்கரையில் சந்திக்கின்றனர். ஒருநாள் காதலரை சந்திக்க செல்லும்போது குடும்ப உறுப்பினர் ஒருவர், ஹமிரை பார்த்து விடுகிறார். தப்பிக்க முயலும் அவரை விரட்டுகின்றனர். பின் தொடரும் யுத்தத்தில் அவர் கொல்லப்படுகிறார். வரவே முடியாத காதலருக்காக நதியருகே காத்திருக்கும் ஹம்லியை பற்றி பாடப்படும் துயரப்பாடல் இது.

ஏன் குடும்பங்கள் காதலை ஏற்கவில்லை?

பாடலின் முழுமை - ரசுதா என அழைக்கப்படும் வடிவம் - இளைஞன் கொல்லப்பட்டதற்கு சாதியும் முக்கிய காரணமாக இருக்கலாம் என்கிற ஐயத்தை வெளிப்படுத்துகிறது. ஆனால் பெரும்பாலான கட்ச்சி அறிஞர்கள், காதலனை இழந்த பெண்ணின் துயரத்தை வெளிப்படுத்தும் பாடலாக இப்பாடலை குறிப்பிடவே விரும்புகின்றனர். ஆனால் அது வாசல், முச்சந்தி பிறகு தொடர்ந்த குழப்பம் ஆகியவற்றை பற்றிய குறிப்புகளை புறக்கணித்து விடுகிறது.

கட்ச் மகிளா விகாஸ் சங்காதன் (KMVS) 2008ம் ஆண்டில் தொடங்கிய சூர்வானி என்கிற ரேடியோ பதிவு செய்த 341 பாடல்களில் இதுவும் ஒன்று. KMVS-ன் வழியாக பாரிக்கு கிடைத்த பாடல் தொகுப்பில், இப்பாடல்கள் அப்பகுதியின் பலதரப்பட்ட இசையையும் கலாசார செறிவையும் மொழியியலையும் பிரதிபலிக்கின்றன. பாலைவன மணலில் தோய்ந்து சரிந்து கொண்டிருக்கும் கட்ச்சின் பாடல் மரபை பாதுகாக்க இத்தொகுப்பு உதவுகிறது.

இங்கு அளிக்கப்பட்டிருக்கும் பாடலை கச்சின் பச்சாவ் தாலுகாவிலிருக்கும் பாவ்னா பில். இப்பகுதியின் திருமணங்களில் இசைக்கப்படும் வடிவம் ரசுதா. தோல் என்ற பெரிய மேளத்தை வாசிப்பவரை சுற்றியபடி பெண்கள் பாடி ஆடும் வடிவம்தான் ரசுதா வடிவம் ஆகும். ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆகும்போது, அவரின் குடும்பம் தேவையான நகை வாங்க பெருமளவில் கடன்படுகிறது. ஹமிரியோ இறந்ததால், ஹம்லி அந்த நகைகளை அணிய முடியாமல் போகிறது. இங்குள்ள பாடல் அவரின் இழப்பையும் கடனையும் குறிப்பிடுகிறது.

சம்பாரிலிருந்து பாவ்னா பில் பாடும் நாட்டுப்புற பாடலை கேளுங்கள்

કરછી

હમીરસર તળાવે પાણી હાલી છોરી હામલી
પાળે ચડીને વાટ જોતી હમીરિયો છોરો હજી રે ન આયો
ઝાંપલે જલાણો છોરો શેરીએ મારાણો
આંગણામાં હેલી હેલી થાય રે હમીરિયો છોરો હજી રે ન આયો
પગ કેડા કડલા લઇ ગયો છોરો હમિરીયો
કાભીયો (પગના ઝાંઝર) મારી વ્યાજડામાં ડોલે હમીરિયો છોરો હજી રે ન આયો
ડોક કેડો હારલો (ગળા પહેરવાનો હાર) મારો લઇ ગયો છોરો હમિરીયો
હાંસડી (ગળા પહેરવાનો હારલો) મારી વ્યાજડામાં ડોલે હમીરિયો છોરો હજી રે ન આયો
નાક કેડી નથડી (નાકનો હીરો) મારી લઇ ગયો છોરો હમિરીયો
ટીલડી મારી વ્યાજડામાં ડોલે હમીરિયો છોરો હજી રે ન આયો
હમીરસર તળાવે પાણી હાલી છોરી હામલી
પાળે ચડીને વાટ જોતી હમીરિયો છોરો હજી રે ન આયો

தமிழ்

ஹமிசார் நதியருகே காத்திருக்கிறாள்; ஹம்லி காத்திருக்கிறாள்.
கரையேறி அவள் காதலன் ஹமிரியோவுக்கு காத்திருக்கிறாள்.
ஓ! அவன் இன்னும் இங்கு வரவில்லை
வாசலருகே அகப்பட்டு முச்சந்தியில் கொல்லப்பட்டான்
தெருக்களில் எல்லாம் ஒரே அமளிதுமளி.
ஓ! ஹமிரியோ இன்னும் இங்கு வரவில்லை.
காலுக்கு நான் அணிய வேண்டிய கொலுசை
அவன் கொண்டு சென்று விட்டான்,  அந்த ஹமிரியோ.
என் கொலுசுகள் ஆடுகின்றன, கடனில் இருக்கிறேன்
ஓ! ஹமிரியோ இன்னும் இங்கு வரவில்லை.
என் கழுத்தணியை எடுத்து சென்று விட்டான், அந்த ஹமிரியோ
கழுத்தணி ஆடுகிறது, கடனில் இருக்கிறேன்.
ஓ! ஹமிரியோ இன்னும் இங்கு வரவில்லை.
என் மூக்குத்தியை எடுத்துச் என்று விட்டான், அந்த ஹமிரியோ
என் மூக்குத்தியும் பொட்டும் ஆடுகின்றன, கடனில் இருக்கிறேன்.
ஓ! ஹமிரியோ இன்னும் இங்கு வரவில்லை.
ஹமிசார் நதியருகே காத்திருக்கிறாள்; ஹம்லி காத்திருக்கிறாள்.
கரையேறி அவள் காதலன் ஹமிரியோவுக்கு காத்திருக்கிறாள்.


PHOTO • Rahul Ramanathan

பாடல் வகை : பாரம்பரிய நாட்டுப்புற பாடல்

தொகுப்பு : காதல், இழப்பு, ஏக்க பாடல்கள்

பாடல் : 2

பாடல் தலைப்பு : ஹமிசார் தலாவே பானி ஹாலி சோரி ஹமாலி

இசைஞர் : தேவால் மேத்தா

பாடகர் : பச்சாவ் தாலுகாவின் சம்பார் கிராமத்தை சேர்ந்த பாவ்னா பில்

பயன்படுத்தப்பட்ட கருவிகள் : ஹார்மோனியம், மேளம்

பதிவு செய்யப்பட்ட வருடம் : 2005, KMVS ஸ்டுடியோ

குஜராத்தி மொழிபெயர்ப்பு : அமத் சமேஜா, பாரதி கோர்

ப்ரீத்தி சோனி, KMVS-ன் செயலாளர் அருணா தொலாகியா, திட்ட ஒருங்கிணைப்பாளர் அமத் சமேஜா ஆகியோருக்கும் குஜராத்தி மொழிபெயர்ப்பு செய்த பார்தி பென் கோருக்கும் நன்றி

தமிழில்: ராஜசங்கீதன்

Pratishtha Pandya

Pratishtha Pandya is a Senior Editor at PARI where she leads PARI's creative writing section. She is also a member of the PARIBhasha team and translates and edits stories in Gujarati. Pratishtha is a published poet working in Gujarati and English.

Other stories by Pratishtha Pandya
Illustration : Rahul Ramanathan

Rahul Ramanathan is a 17-year-old student from Bangalore, Karnataka. He enjoys drawing, painting, and playing chess.

Other stories by Rahul Ramanathan
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan