“மீன் கிடைக்காமல் வீட்டுக்கு நான் செல்வது, இது ஆறாவது நாள்,” என்கிறார் அப்துல் ரஹீம் கவா, வுலார் நதியின் கரையில் நின்று கொண்டு. 65 வயது மீனவரான அவர், இங்கு மனைவி மற்றும் மகனுடன் ஒரு தள வீட்டில் வசித்து வருகிறார்.

பந்திப்போர் மாவட்டத்தின் கனி பதி பகுதியில் இருக்கும் அந்த நதி, ஜீலம் ஆற்றின் நீரையும் மதுமதி ஓடையின் நீரையும் கொண்டதாகும். 100 குடும்பங்கள் சுற்றி கரைகளில் வாழும் 18 கிராமங்களுக்கும் அந்த நதிதான் வாழ்வாதாரம்.

“முக்கியமான வாழ்வாதாரம் மீன்பிடிப்பதுதான்,” என்கிறார் அப்துல். “ஆனால் நதியில், நீரே இல்லை. எங்களால் நீருக்குள் நடக்க முடிவதற்குக் காரணம், மூலைகளில், நான்கைந்து அடி வரை நீரிறங்கி விட்டது,” என்கிறார் அவர் மூலைகளை காட்டி.

மூன்றாம் தலைமுறை மீனவரான அப்துல், வடக்கு காஷ்மீரில் உள்ள இந்த நதியில் 40 வருடங்களாக மீன் பிடித்து வருகிறார். “குழந்தையாக இருக்கும்போது என் அப்பா என்னை அவருடன் கூட்டி செல்வார். அவரைப் பார்த்து நான் மீன் பிடிக்க கற்றுக் கொண்டேன்,” என்கிறார் அவர். அப்துலின் மகனும் குடும்பத் தொழிலை தொடருகிறார்.

ஒவ்வொரு காலையும் அப்துல்லும் சக மீனவர்களும் வுலார் நதிக்குள் சென்று ஜாலை - நைலான் கயிறால் அவர்கள் உருவாக்கும் வலை - போடுவார்கள். வலையைப் போட்டுவிட்டு சில நேரங்களில் மீன் வர, கையால் செய்து கொண்டு செல்லும் மேளத்தைத் தட்டுவார்கள்

இந்தியாவிலேயே பெரிய நன்னீர் நதி வுலார்தான். ஆனால் கடந்த நான்கு வருடங்களில் நீர் மாசு, மீன்கள் வருடம் முழுக்க இருக்கும் சூழலை இல்லாமலாக்கி விட்டது. “முன்பு, வருடத்தில் ஆறு மாதங்களுக்கு நாங்கள் மீன்கள் பிடிப்போம். ஆனால் இப்போது மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மட்டும்தான் பிடிக்கிறோம்,” என்கிறார் அப்துல்.

காணொளி: காஷ்மீரில் அழிந்து போன நதி

இங்கு வரும் மாசுக்கு முக்கியமான காரணம் ஜீலம் ஆறு கொண்டு வரும் கழிவுதான். ஸ்ரீநகரில் உள்ள எல்லா கழிவையும் அடித்துக் கொண்டு வந்து இதில் சேர்க்கிறது ஜீலம். “சர்வதேச ஈரநிலத்துக்கான முக்கியத்துவத்தை” 1990ம் ஆண்டு ராம்சார் மாநாட்டில் பெற்ற இந்த நதி, தொழிற்சாலை கழிவு எல்லாமும் சேர்ந்து இப்போது சாக்கடையாகி இருக்கிறது. “நதியின் மையத்தில் நீர் மட்டம் 40-60 அடி வரை இருந்தது நினைவில் இருக்கிறது. அது தற்போது 8-10 அடியாக குறைந்து விட்டது,” என்கிறார் அந்த மீனவர்.

அவரின் நினைவு சரிதான். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் 2022ம் ஆண்டு ஆய்வு , 2008 தொடங்கி 2019ம் ஆண்டுக்குள் இந்த நதி கால்வாசி அளவு சுருங்கிப் போனதாக தெரிவிக்கிறது.

ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு கூட, காஷ்மிரி மற்றும் பஞ்சேப் என்ற இருவகை மீன்களை பிடித்து வந்ததாக அப்துல் சொல்கிறார். வுலார் சந்தைக்கு சென்று பிடித்த மீன்களை விற்பார். வுலார் மீன்கள் காஷ்மீர் முழுக்க உள்ள மக்களை சென்றடைந்தது.

“நதியில் நீர் இருக்கும்போது, மீன் பிடித்து விற்று 1,000 ரூபாய் வரை வருமானம் ஈட்டுவேன்,” என்கிறார் அப்துல். “ஆனால் இப்போது ஒருநாளுக்கு 300 ரூபாய் வரைதான் ஈட்ட முடிகிறது.” குறைவாக மீன்கள் கிடைத்தால், விற்கக் கூட மாட்டார். வீட்டுக்கு கொண்டு சென்று குடும்ப பயன்பாட்டுக்கு பயன்படுத்திக் கொள்வார்.

மாசுபாடும் குறைந்த அலவு நீரும் மீன் வளத்தை நதியில் சரித்து விட்டது. மீனவர்களும் வேறு வேலைகளுக்கு நகர்ந்து, நவம்பர் மற்றும் பிப்ரவரிக்கு இடையில் நீர் கசுக்கொட்டைகளை சேகரித்து விற்கத் தொடங்கி விட்டனர். இவற்றை உள்ளூர் ஒப்பந்தக்காரர்களுக்கு கிலோ 30-40 ரூபாய் என்கிற விலையில் விற்கின்றனர்.

வுலார் நதி மாசைப் பற்றியும் மீனவர்கள் இழக்கும் வாழ்வாதாரம் பற்றியும் படம் பேசுகிறது.

தமிழில் : ராஜசங்கீதன்

Muzamil Bhat

مزمل بھٹ، سرینگر میں مقیم ایک آزاد فوٹو جرنلسٹ اور فلم ساز ہیں۔ وہ ۲۰۲۲ کے پاری فیلو تھے۔

کے ذریعہ دیگر اسٹوریز Muzamil Bhat
Editor : Sarbajaya Bhattacharya

سربجیہ بھٹاچاریہ، پاری کی سینئر اسسٹنٹ ایڈیٹر ہیں۔ وہ ایک تجربہ کار بنگالی مترجم ہیں۔ وہ کولکاتا میں رہتی ہیں اور شہر کی تاریخ اور سیاحتی ادب میں دلچسپی رکھتی ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Sarbajaya Bhattacharya
Translator : Rajasangeethan

چنئی کے رہنے والے راجا سنگیتن ایک قلم کار ہیں۔ وہ ایک مشہور تمل نیوز چینل میں بطور صحافی کام کرتے ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Rajasangeethan