2023ம் ஆண்டில் கிராமப்புற இந்தியாவை சார்ந்த பல முக்கியமான  காணொளிகள், ஆவணப்படங்கள், குறுங்காணொளிகள், திரைப்படங்கள் போன்றவற்றை பாரியின் திரைப்படப் பிரிவில் கிடைக்கப் பெற்றோம்.

இணைய வழி பத்திரிகையகா நாங்கள், நம்மை சுற்றி இருக்கும் நிகழ்வுகளையும் செய்திகளையும் ஆராயும் படங்கள் எடுக்கப்பட ஊக்குவிக்கிறோம். பிகாரில் மதவாதத்தால் எரிக்கப்பட்ட 113 வருடப் பழமையான மதராசாவை ப் பற்றிய எங்களின் படம் மதவாதத்தின் விளைவுகளை ஆராய்கிறது. ஒரான் எனப்படும் புனிதத் தோப்புகள், புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்காக கையகப்படுத்தப்படுவதை சுட்டிக் காட்டியிருக்கும் எங்களின் படம் , இந்த புதர்க்காடுகளை ‘புறம்போக்கு’ நிலங்களாக வகைப்படுத்துவதை கேள்விக்குட்படுத்தியிருக்கிறது.

இந்த வருடத்தை நாங்கள் அசாமின் பிரம்மபுத்திராவில், வாழ்க்கை மற்றும் காதல் பற்றி பாடும் எருமை மேய்ப்பவரின் பாடலிலிருந்து தொடங்கினோம். வருடம் முழுக்க, நாங்கள் மேற்கு வங்கம், சட்டீஸ்கர், கர்நாடகா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலிருந்து பாடல்களையும் நடனங்களையும் சேர்த்திருக்கிறோம்.

பல பத்தாண்டுகளாக நடந்து வந்த அற்புதமான பணியான பாரியின் க்ரைண்ட்மில் பாடல்கள் பற்றிய படத்துடன் இந்த வருடத்தை முடித்திருக்கிறோம்.

இந்த வருடம் ஒரு முக்கியமான படத்தையும் இணைத்தோம். புனேவில் குப்பை சேகரிக்கும் பெண்களின் குரல்களை கொண்ட மதிப்பு என்கிற படம். “குப்பைகளை உருவாக்குவதே நீங்கள்தான் என்றபோது, நாங்கள் எப்படி குப்பை பெண்கள் என அழைக்கப்படுவோம்?” என கேள்வி கேட்கிறார்கள். காலநிலை மாற்றத்தின் தாக்கம் பற்றிய அல்ஃபோன்சா மாம்பழ படம், அந்த பழங்களை விளைவிப்பவர்கள் சந்திக்கும் காலநிலை நெருக்கடியை பேசுகிறது.

சமூகத்தின் பல பிரிவுகள் குறித்த படங்களையும் வருடம் முழுக்க நாங்கள் தொடர்ந்து சேர்த்து வருகிறோம். மேடபுரத்தின் மடிகா சமூக மக்கள் கடைபிடிக்கும் புதிய தலித் பாரம்பரியத்தின் வண்ணம் மற்றும் ஒலி நிறைந்த உகாதி கொண்டாட்டத்தை இப்படம் காட்டுகிறது. மலபார் பகுதியின் பல சாதிகளும் சமூகங்களும் பங்கெடுக்கும் தோல்பாவைக்கூத்து சந்திக்கும் இடர்களை இப்படம் காட்டுகிறது. அண்டை மாநிலமான கர்நாடகாவின் துளு நாட்டில் நடைபெறும் பூத வழிபாட்டில் முக்கிய பங்காற்றும் நாதஸ்வர கலைஞரின் வாழ்க்கை விரிவாக விளக்கப்படுகிறது. மேற்கு வங்கத்தில் அழிவை சந்தித்துக் கொண்டிருக்கும் மெழுகு வார்ப்பு கலையான தோக்ரா வை இப்படம் விவரிக்கிறது.

இப்படங்களை பாருங்கள்!

மதராசா அசிசியாவின் நினைவில்

பிகார்ஷாரிஃப்ஃபில் 113 வருட பழமையான மதராசாவும் 4,000 புத்தகங்கள் கொண்ட அதன் நூலகமும் கலவரக்காரர்கள் எரிக்கப்பட்டது.

மே 12, 2023 | ஷ்ரேயா காத்யாயினி

ஒரான்களை காக்க ஒரு போராட்டம்

சூரிய ஆற்றல் மற்றும் காற்றாலை ஆகியவை தொடர்ந்து ராஜஸ்தானின் புல்வெளிகளில் இருக்கும் ஒரான்கள் எனப்படும் புனிதத்தோப்புகளை ஆக்கிரமித்து வருகின்றன. அந்த இடங்கள் யாவும் 'புறம்போக்கு' நிலங்களாக தவறாக அரசாங்க ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. வேகமாக வளர்ந்து வரும் ஆக்கிரமிப்புகள் சூழலையும் வாழ்வாதாரங்களையும் கடுமையாக மாற்றிக் கொண்டிருக்கின்றன

ஜூலை 25, 2023 | உர்ஜா


வாழ்க்கை மற்றும் காதல் பற்றி பாடும் எருமை மேய்ப்பவர்

சத்யஜித் மொராங் அசாமின் மிஸிங் சமூகத்தைச் சேர்ந்தவர். இந்தக் காணொளியில் அவர் ஒரு காதல் பாடலை ஒய்னிடோம் பாணியில் பாடுகிறார். பிரம்மபுத்திரா ஆற்றின் தீவுகளில் எருமை மேய்ப்பது குறித்தும் பேசுகிறார்.

ஜனவரி 2, 2023 | ஹிமான்ஷு சுட்டியா சைகியா


கிராமப்புற சமையற்கட்டுகளிலிருந்து வரும் பாடல்கள்

நூற்றுக்கணக்கான கிராமங்களை சேர்ந்த 3,000 இசைஞர்களை கொண்டு உருவான 1,00,000க்கும் அதிகமான பாடல்களை கொண்ட க்ரைண்ட்மில் சாங்க்ஸ் ப்ராஜக்ட், விவசயிகள், மீனவர்கள், மகள்கள், மனைவிகள், தாய்கள் மற்றும் சகோதரிகள் பாடிய பாடல்களை உள்ளடக்கி தனித்துவ முன்னெடுப்பாக இருக்கிறது. இந்த பணியின் கவித்துவ பாரம்பரியம் மற்றும் தொடக்கம் குறித்த பாரியின் ஆவணப்படம்.

டிசம்பர் 7, 2023 | பாரி குழு


மதிப்பு

அக்டோபர் 2ம் தேதி, குப்பை சேகரிக்கும் பெண்களை பற்றி புனேவில் ஸ்வச் பாரத் திவாஸ் திரைப்படம் திரையிடப்பட்டது.

அக்டோபர் 2, 2023 | கவிதா கர்னெய்ரோ

மாம்பழங்கள் அழிந்து விடுமா?

மஹாராஷ்டிராவின் கொங்கன் பகுதியில், அல்ஃபோன்சா மாம்பழ அறுவடை கடும் சரிவை சந்தித்திருப்பது விவசாயிகளுக்கு கவலை கொடுத்திருக்கிறது

அக்டோபர் 13, 2023 | ஜேய்சிங் சவான்

மேடாபுரத்தில் உகாதி: பாரம்பரியம், அதிகாரம் மற்றும் அடையாளம்

ஆந்திராவின் மேடாபுரத்தில் வருடந்தோறும் பிரம்மாணடமாக நடக்கும் உகாதி விழாவை, கடவுள் சிலையை ஊருக்குக் கொண்டு வந்த மடிகா சமூகத்தினர் ஒருங்கிணைக்கின்றனர்.

அக்டோபர் 27, 2023 | நாக சரண்

நிழல்களிலிருந்து வரும் கதைகள்

கேரளாவின் மலபார் பகுதி கிராமங்களில் இருக்கும் பொம்மலாட்டக் கலை பற்றிய படம்

மே 29, 2023 | சங்கீத் சங்கர்

துளுநாட்டின் ஒத்திசையும் பாரம்பரிய பூதாக்கள்

அரபிக் கடலோர கர்நாடகப் பகுதியில் பூத வழிபாட்டுக்கு பல சமூகங்கள் ஒன்றிணைகின்றனர். இந்த விழாவில் நிகழ்ச்சி நடத்தும் சையது நசீர் மற்றும் அவரது இசைக்குழு பாரம்பரியம் குறித்த படம் இது

ஏப்ரல் 26, 2023 | ஃபைசல் அகமது

தோக்ரா, மாற்றம் ஏற்படுத்தும் கலை

மெழுகு இழப்பு உத்தியின் மூலம் உலோக சிற்பங்களை பிஜுஷ் மொண்டல் செய்து வருகிறார். திறன் பெற்ற தோக்ரா கைவினைக் கலைஞரான அவர், இம்முறைக்கு அவசியமாக இருக்கும் மூலப்பொருட்கள் மற்றும் காலநிலை குறித்து கவலைப்படுகிறார்

ஆகஸ்ட் 26, 2023 | ஸ்ரெயாஷி பால்


எங்களுக்கு படமோ காணொளியோ அனுப்ப விரும்பினால் [email protected] மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எங்களின் பணியில் உங்களுக்கு ஆர்வமிருந்தாலும் பாரிக்கு பங்களிக்க நீங்கள் விரும்பினாலும் [email protected] மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். எங்களுடன் பணியாற்ற சுயாதீன எழுத்தாளர்களையும் செய்தியாளர்களையும் புகைப்படக் கலைஞர்களையும் ஆவணப்பட இயக்குநர்களையும் மொழிபெயர்ப்பாளர்களையும் கட்டுரை ஆசிரியர்களையும் விளக்கப் பட ஓவியர்களையும் ஆய்வாளர்களையும் வரவேற்கிறோம்.

லாபம் கருதி நடத்தப்படும் நிறுவனம் அல்ல, பாரி. எங்களின் பன்மொழி இணைய பத்திரிகையையும் பெட்டகத்தையும் ஆதரிக்கும் மக்களின் நன்கொடைகளை சார்ந்து நாங்கள் இயங்குகிறோம். பாரிக்கு நீங்கள் பங்களிக்க விரும்பினால் DONATE என்ற வார்த்தையில் க்ளிக் செய்யவும்.

தமிழில் : ராஜசங்கீதன்

Shreya Katyayini

شریا کاتیاینی ایک فلم ساز اور پیپلز آرکائیو آف رورل انڈیا کی سینئر ویڈیو ایڈیٹر ہیں۔ وہ پاری کے لیے تصویری خاکہ بھی بناتی ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز شریہ کتیاینی
Sinchita Parbat

سنچیتا ماجی، پیپلز آرکائیو آف رورل انڈیا کی سینئر ویڈیو ایڈیٹر ہیں۔ وہ ایک فری لانس فوٹوگرافر اور دستاویزی فلم ساز بھی ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Sinchita Parbat
Urja

اورجا، پیپلز آرکائیو آف رورل انڈیا (پاری) کی سینئر اسسٹنٹ ایڈیٹر - ویڈیوہیں۔ بطور دستاویزی فلم ساز، وہ کاریگری، معاش اور ماحولیات کو کور کرنے میں دلچسپی لیتی ہیں۔ اورجا، پاری کی سوشل میڈیا ٹیم کے ساتھ بھی کام کرتی ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Urja
Translator : Rajasangeethan

چنئی کے رہنے والے راجا سنگیتن ایک قلم کار ہیں۔ وہ ایک مشہور تمل نیوز چینل میں بطور صحافی کام کرتے ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Rajasangeethan