உத்திரப் பிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள மஜௌலி கிராமத்தில், தங்களது நிலம் மற்றும் வன உரிமைகளைக் கோருவதற்கு தனது ஆதிவாசி சமூகத்தை ஒன்றிணைத்தது பற்றி, "என் வாழ்க்கையில் முதல் முறையாக நான் வலிமையாக உணர்ந்தேன்", என்று சுகலோ கோண்டு கூறுகிறார்.
அகில இந்திய வன தொழிலாளர்கள் சங்கத்தில் தனது பணியைப் பற்றி அழைப்பு விடுப்பதற்கு முன்பு கூட்டங்கள், நீதிமன்றத்தில் ஆஜர் ஆவது, (காண்க:
'அன்று நான் சிறைக்கு செல்வேன் என்று எனக்குத் தெரியும்'
) முன்னணிகள் மற்றும் பிற அயராத பணிகளையும் ஒரு ஆர்வலராக அவர் செய்ய வேண்டியிருக்கிறது, சுகலோ தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து கொள்கிறார், அவரது மாடுகளை கவனித்துக் கொள்கிறார், சமைப்பது மற்றும் சுத்தம் செய்வது ஆகியவற்றையும் செய்கிறார்.
இங்கே, அவர் ஒரு தொழிற் சங்க உறுப்பினரிடமிருந்து அழைப்பை எதிர்பார்ப்பதால் அவரது தொலைபேசியை அருகில் வைத்துக் கொண்டே வெண்டைக்காயை நறுக்கிக் கொண்டிருக்கிறார். அவரது பக்கத்து வீட்டுக் குழந்தை அவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
(ஆசிரியர், சுகலோ 2018 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பு அவரை சந்தித்தார்.)
தமிழில்: சோனியா போஸ்