1949 ஆம் ஆண்டு, ஜிபன் கிருஷ்ணா போதார், தனது பதினான்கு வயதில், அவரது பெற்றோர்கள் மற்றும் பாட்டியுடன் மேற்குவங்க மாநிலம் பரிசால் மாவட்டத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து வெளியேறினார். கடந்த 1946 ஆம் ஆண்டு நடந்த நோக்ஹாலி கலவரம்தான் இடப்பெயர்வுக்கு வழிவகுத்தது. அது பல ஆண்டுகள் எதிரொலித்தது. இந்த கலவரம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், ஜிபன் குடும்பத்தினர் சுந்தர்பன் பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

தற்போது சுமார் 80 வயதினை எட்டியிருக்கும் அவர், , பதர்பிரதிமா பிளாக் பகுதியின் கிருஷ்ணதாஸ்பூர் கிராமத்தில் அமைந்துள்ள, அவரது வீட்டின் வராண்டாவில் மழைப்பொழிந்த ஒரு மாலைப்பொழுதில் அமர்ந்திருந்தவாறு, இங்கு அவரை அழைத்து வந்த பயணத்தைக் குறித்து நினைவுகூர்ந்தார்: “அங்கு வன்முறை ஏற்பட்டது. எனவே,நாங்கள் அங்கிருந்து கிளம்பினோம்.என் அம்மா,உஷா ராணி போதார், எங்கள் உடமைகள் அனைத்தையும் 14 பைகளில் தயார்படுத்தினார். நாங்கள் கப்பலின் வழியாக (அப்போது கிழக்கு வங்காளப்பகுதியில் இருந்த) குல்னா பகுதியை அடைந்தோம். ஒரு ரயில் எங்களை பினாபோல் பகுதிக்கு கொண்டு சென்றது. எண்களின் நகை மற்றும் பணத்தை உடமைகளிலும் துணிகளிலும்  மறைத்துக் கொண்டோம்” என்று குறிப்பிட்டார்.

இதனைத்தொடர்ந்து, மேற்குவங்க மாநிலத்தின் நடியா மாவட்டத்தில் இருந்த அகதிகள் மூகாமில் அவரது குடும்பம் தங்கவைக்கப்பட்டதாகவும், அங்கு 11 மாதங்கள்  20,000க்கும் மேற்பட்டவருடன் தங்கி இருந்ததாகவும் நினைவு கூர்ந்தார். இந்நிலையில், இந்த முகாமில் இருந்த அகதிகள் தண்டகாரண்யா பகுதி(மத்திய இந்தியாவின் பாஸ்டர் வனப்பகுதி), அந்தமான் பகுதி அல்லது மேற்கு வங்க மாநிலத்தின் சுந்தர்பன் பகுதியில் தங்குவதற்கு கோரப்பட்டனர்.

“என் தந்தை, சரத் சந்திர போதார், சுந்தர்பன் பகுதியைத் தேர்ந்தெடுத்தார்,” என ஜிபன் கூறினார். “இங்கு அவர் சொந்த நிலத்தைப் பெறவும். விவசாயம் செய்யவும் விரும்பினார். மாச் மற்றும் சாஷ்(பெங்காலியில் மீன் மற்றும் விவசாயம்) ஆகிய இரண்டும் அதற்கு கவர்ந்திழுத்ததில் மிகமுக்கியமானவை. தண்டகாரண்யம் மற்றும் அந்தமான் ஆகிய இரண்டும் மனிதர்கள் வசிக்காத காடுகளாக, வசிப்பதற்கு கடினமாக இருக்கும் என உணர்ந்தார்.

‘நாங்கள் விவசாயம் செய்யத் தொடங்கிய போது,அது கடினமாக இருந்தது. அந்தப் பாதி 60 சதவீதம் நீரும், 40 சதவீத பகுதி காட்டையும் கொண்டதாக இருந்தது. குடிநீரும் சுத்தமானதாக இல்லை.பலர் காலராவில் இறந்தனர். மருத்துவர் 15 நாட்களுக்கு ஒருமுறை தான் வருவார். அங்கு ஏற்பட்ட பஞ்சத்தின் காரணமாக,நாங்கள் மிகுந்த பசிக்கும் உள்ளாக நேர்ந்தது’

ஹவுராவிலிருந்து சுந்தர்பன் பகுதிக்கு கப்பலில் பயணிக்க கிளம்பிய 150 குடும்பங்களில் ஜிபினின் குடும்பமும் ஒன்று.  அவர்கள் மதுராபூர் பகுதிக்கு வந்துள்ளனர். இந்தப் பகுதியில் தான் ஒன்றிய அரசு விவசாயத்திற்காக  காடுகளை அழிக்க முடிவெடுத்துள்ளது..  ”நாங்கள் விவசாயம் செய்யத் தொடங்கிய போது,அது கடினமாக இருந்தது. அந்தப் பகுதி 60 சதவீதம் நீரும், 40 சதவீத பகுதி காட்டையும் கொண்டதாக இருந்தது. குடிநீரும் சுத்தமானதாக இல்லை.பலர் காலராவில் இறந்தனர். மருத்துவர் 15 நாட்களுக்கு ஒருமுறை தான் வருவார். அங்கு ஏற்பட்ட பஞ்சத்தின் காரணமாக,நாங்கள் மிகுந்த பசிக்கும் உள்ளாக நேர்ந்தது.”

ஜிபனின் தந்தை அரசு அலுவலகத்தில் பணி பெற்றுள்ளார். அங்கு பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு கையால் விசிறிவிடும் (hand fan) வேலை அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவரது தாயார் எருமை மாடுகளை வளர்த்தும், பால் மற்றும் முட்டைகளை விற்றும் உள்ளார்.

ஒருவழியாக அவர்களின் குடும்பத்திற்கு, கிருஷ்ணாதாஸ்பூர் கிராமத்தில்  10 பிகாஸ் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது( மேற்கு வங்கத்தில் ஒரு பிகாஸ் நிலம் என்பது  ஒரு ஏக்கரில் மூன்றில் ஒரு பகுதியாகும்). இந்தப் பகுதியில் அவர்கள் நெல் விதைக்கத் தொடங்கியுள்ளனர். இதன் மூலமாக கொஞ்சம் பணம் சேர்த்ததற்குப் பின்னர், அவர்கள் மேலும் நிலங்களை வாங்கியுள்ளனர். மேலும், அந்தக் கிராமத்தில் வீடொன்றையும் கட்டியுள்ளனர். தற்போது, அந்த கிராமத்தின்( 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி) 2,653  ஆகும்.

ஜிபன் அவரது மனைவியுடனும், 11 குழந்தைகளுடனும் இங்கு வசித்து வருகிறார். இவர் கடந்த 2010 வாக்கில் கிராமத்திலுள்ள அஞ்சல் நிலையத்தின் அஞ்சல் அலுவலராக பணி ஓய்வு பெற்றுள்ளார்.  இவரைப் போன்றே பிரியாரஞ்சன் தாசும் , 64,கிராமத்தில் உள்ள அஞ்சல் நிலையத்தின் உதவியாளராய் பணி ஓய்வு பெற்றுள்ளார். இவரும் கிழக்கு வங்காளத்தில் இருந்து இங்கு வந்தது குறித்து நினைவு கூர்ந்தார். இவர் 1950 களின் தொடக்கத்தில் அவர்களின் பெற்றோருடன் நோக்ஹாலியிலிருந்து  இங்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு வயது இரண்டு.. இதுகுறித்து நினைவு கூர்ந்த அவர்; “உணவு கிடைக்காத வரை தண்டை அவித்து அதனையே உட்கொண்டு வந்தோம். காலரா கடுமையான அளவில் பரவியிருந்ததால், பலரும் வெளியேறி இருந்தனர். ஆனால், நாங்கள் இங்கேயே தங்கினோம்,” என்று நினைவு கூர்ந்தார்.

வங்காளத்தில்  கிழக்கிந்திய கம்பெனி  சிவில் அதிகாரத்தைக் கைப்பற்றியப் பிறகு, குறிப்பாக 1765 ஆம் ஆண்டுக்குப் பிறகு, மேற்கு வங்கத்தின் பிற பகுதிகளில் இருந்தும், சோட்டா நாக்பூர் பீடபூமி மற்றும் ஓடிஸாவில் இருந்தும்  சுந்தர்பன் பகுதியில் பல குடும்பங்கள் இங்கு குடியேறியுள்ளது.  இதுகுறித்து எழுதியுள்ள அமித்ஸ் முகோபத்யாய்( பேரழிவுகளுடன் வாழ்தல் : இந்திய சுந்தர்பன்  காடுகளில் உள்ள  சமூகங்கள் மற்றும் வளர்ச்சி) மற்றும் அனு ஜலைஸ் (மக்கள் மற்றும் புலிகள்: மேற்கு வங்க மாநிலத்தின் சுந்தர்பன் பகுதியில் மானுடவியல் ஆய்வு), காலனிய ஆட்சியாளர்கள் தங்கள் வருவாயை அதிகப்படுத்த, இந்திய துணைக்கண்டத்தின் பல பகுதிகளில் இருந்து தொழிலாளர்களை அமர்த்தி, நிலங்களில் பயிரிட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

சுந்தர்பன் பகுதியில் பணிபுரிந்து வரக்கூடிய அரசு சாரா நிறுவனமான ஊரக மேம்பாட்டிற்கான தாகூர் சொசைட்டியைச் சேர்ந்த ராபி மெண்டல் கூறுகையில், "மீதினிபூரில் ஏற்பட்ட பஞ்சம் மற்றும் வெள்ளம் ,1947 வங்கப் பிரிவினை மற்றும் 1971 வங்காள தேச சுதந்திரப் போர் போன்றவை மக்கள் வெளியேற காரணமாக அமைந்தது. இதில் பலர் சுந்தர்பனில்  குடியேறினர்." என்று கூறினார்.

மேற்கொண்டு, இடப்பெயர்வு 1905 ஆம் ஆண்டு வாக்கில், ஸ்காட்டிஷ் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் டேனியல் ஹாமில்டன் , கோசாபா பிளாக்  பகுதியில் இருக்கும்  தீவுகளில் உள்ள  கூட்டுறவு இயங்கங்களின் வழியாக ஊரக  மறுக்கட்டுமானம் செய்வதற்காக நடவடிக்கைகள் மேற்கொண்ட போது நடைபெற்றது.  இவர் விவசாயத்திற்காகத் தொழிலாளர்களுக்கு நிலத்தைக் குத்தகைக்குக் கொடுத்தார்.  இந்நிலையில்,இடம்பெயர்ந்த பலரின் வழித்தோன்றல்கள் இன்னும் கோசாபா பகுதியில் வசித்து வருகிறார்கள். அவர்கள்  சுந்தர்பன் பகுதியின் மேம்பாட்டிற்காக  முயன்ற ஹாமில்டனின் பங்களிப்பை  இன்னும் நினைவுகூறுகின்றனர்.

ஜோதிராம்பூர் பகுதியில் வசித்து வரும் எண்பது வயதாகும் ரேவதி சிங், உண்மையில் ராஞ்சியை பூர்வீகமாகக் கொண்டவர். அவரது தாத்தா ,ஆனந்த் சிங், ஹாமில்டனின் கூட்டுறவு இயக்க நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்த போது, 1907 ஆம் ஆண்டு , கோசாபா பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளார். ”அவர் டிராம் வழியாக கன்னிங் பகுதியை அடைந்துள்ளார். அங்கிருந்து கோசாபா பகுதிக்கு நிச்சயமாக  அவர்கள்  நடந்தே வந்திருப்பார்கள்.   இது தற்போது 12 மணி நேரத்திற்கும் மேல் நடந்துவரும் தொலைவில் உள்ளது. பின்னாட்களில், அவர்களின் போக்குவரத்திற்காக ஹாமில்டன் சிறிய படகு தளங்களை அமைத்தார்” என்றார்.

a man and a woman
PHOTO • Urvashi Sarkar
a man whose ancestors migrated
PHOTO • Urvashi Sarkar

இடது: லகான் மற்றும் சந்தியா சர்தார். லகான்னின் தாத்தா, 1900 களின் துவக்கத்தில், ராஞ்சி பகுதியில் இருந்து கோசாபா பகுதிக்கு புலம்பெயர்ந்துள்ளார். வலது: முஹம்மது மல்ஹோர் ஷேக்கின் கொள்ளுதாத்தா சுமார் 150 வருடத்திற்கு முன்னர் மிட்னாபூரில் இருந்து சுந்தர்பன் பகுதிக்கு வந்துள்ளார்

முன்னர் மக்கள் தொகை குறைவாக இருந்ததாகவும், புலி மற்றும் முதலைகளின் தாக்குதலுக்கு உள்ளாக நேர்ந்ததாகவும், குடிநீரும் தூய்மையானதாக இல்லை என்றும் ரேவதி கூறினார். இதேவேளையில், அந்த சூழ்நிலை மாறியுள்ளதா? என்று கேட்டபோது, “தற்போது புலி தாக்குதல் குறைவாகவே உள்ளது” என்று குறிப்பிட்ட அவர், மேற்கொண்டு கூறுகையில், “அப்போது வேலைகள் கிடைக்கவில்லை. இப்போதும் கூட கிடைப்பதில் பிரச்சனை உள்ளது. நான் நெல் விதைத்திருந்தேன். ஏனென்றால், ஆறு வயல்களில் பெருக்கெடுத்து ஓடியது என்பதால் நிறுத்திவிட்டேன்”. என்று கூறினேன்.

லகான் சர்தாரின், தாத்தாவான பாகல் சர்தாரும் கூட்டுறவு இயக்க செயல்பாடுகளின் பகுதியாக ராஞ்சியிலிருந்து இங்கு புலம்பெயர்ந்து வந்தவர் தான். அவர், 1932 ஆம் ஆண்டு ஹாமில்டனின் அழைப்பை ஏற்று புகழ்பெற்ற கவிஞரும், எழுத்தாளருமான  ரவீந்திரநாத் தாகூர் கோசாபா பகுதிக்கு வந்தது குறித்து கூறினார்.

சுந்தர்பன் பகுதிக்கு இடம்பெயர்ந்த மக்கள் பெரும்பாலானோர், மேற்குவங்க மாநிலத்தின் மீதினிபூர் பகுதியில் இருந்து புலம்பெயர்ந்தவர்களே. மீதினிபூர் பகுதியில் அடிக்கடி ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பஞ்சத்தின் காரணமாக அங்கு வசித்து வந்த மக்கள், தொழிலாளராக அல்லது விவசாயியாக பணிபுரிய சுந்தர்பன் பகுதிக்கு இடம்பெயர நேர்ந்ததுள்ளது. ஜோதிராம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஜோதிர்மயி மண்டல், ஹாமில்டனின் கூட்டுறவு இயக்கம் தொடங்குவதற்கு முன்பு தனது தாத்தா, பாட்டி மீதினிபூரிலிருந்து சுந்தர்பன் காடுகளுக்கு நடந்து சென்றதை நினைவு கூர்ந்தார். “எனது தாத்தா இரவுக்காவலராக இருந்து, இறுதியில் காய்ச்சல் வந்து இறந்துவிட்டார். இந்நிலையில்,என் பாட்டி, திகம்பரி மண்டல், வாழ்வதற்காக பிறரின் எருமை மாடுகளைப் பார்த்துக் கொண்டார், நெல் விதைத்தார் மற்றும் நெய் உருவாக்கினார்.” என்று கூறினார்.

இதேபோன்று, முஹம்மது மல்ஹோர் ஷேக்கும் கோசாபாவின் அரம்பூர் பகுதியில் வசிக்க மரங்களை வெட்டிப் பிழைப்பு நடத்திவருகிறார். அவரது தாத்தா, அவரது இரண்டு தம்பிகளுடன் மீதினிபூரில் இருந்து , 150  வருடங்களுக்கு முன்னர் சுந்தர்பன் பகுதிக்கு வந்துள்ளார். “அவர்கள் எவ்வாறு இரும்புக் கம்பியில் நெருப்பை ஏற்றி , புலிகளை விரட்டினார்கள் என்பது குறித்தக் கதைகளை நாங்கள் கேட்டிருக்கிறோம். மேலும், அடிக்கடி ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பஞ்சத்தால், அவர்களின் நெல் வயல் எவ்வாறு பாதிக்கப்பட்டது என்பது பற்றியும் கேட்டிருக்கிறோம்.” என்றார்.

இதேபோன்று, 1943 ஆம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தினால், மேற்குவங்கத்தின் மீதினிபூரில் இருந்து அடுத்தக்கட்ட புலம்பெயர்வின் அடுத்த அலை ஏற்பட்டிருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் தான், எழுபத்தோரு வயதுடைய ஹரிப்ரியா கரின் கணவரின் குடும்பத்தினர், கோசாபா பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இந்நிலையில், அவர்கள் வசித்து வரும் ஜோதிராம்பூர் கிராமம், அவர்களது வருகைக்கு பின்னர், அவரது மாமா ஜோதிராம் கர் பெயரில் மாற்றப்பட்டுள்ளது. “ஜோதிராமும் கேத்ரமோகனும் சகோதரர்கள், இருவரும் மீதினிபூரிலிருந்து கோசாபாவுக்கு 27 குடும்பங்களை அழைத்து வந்தனர். இந்த குடும்பங்கள் சுற்றியுள்ள காடுகளை அழித்து இங்கு குடியேறினர், ”என்று அவர் கூறினார்.

ஹரிப்ரியா பேசும் போது அவரது வீடு இருளில் மூழ்கி இருந்தது. கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இங்கு வாழ்வாதாரங்கள் என்பது குறைவு, மருத்துவ உதவி பெறுவதும் கடினம், சாலை வசதி மற்றும் போக்குவரத்தும் பெரும் தடையாக உள்ளது. மேலும்,சுந்தர்பனில் உள்ள    குடியேறியவர்களின் சந்ததியினர் தங்கள் மூதாதையர்களைப் போல தற்போது உறுதியாக இல்லை. கடந்த கால கஷ்டங்கள் மற்றும் இழப்புகளை அவர்கள் நினைவு கூர்ந்துக் கொண்டாலும், சிறந்த வாழ்க்கையை அடைவதற்கான  போராட்டம் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது.

தமிழில்: பிரதீப் இளங்கோவன்

Urvashi Sarkar

اُروَشی سرکار ایک آزاد صحافی اور ۲۰۱۶ کی پاری فیلو ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز اُروَشی سرکار
Translator : Pradeep Elangovan

Pradeep Elangovan is a translator who holds a postgraduate degree in Geology. He is interested in independent cinema and currently works as a translator for a news portal.

کے ذریعہ دیگر اسٹوریز Pradeep Elangovan