முன்னர் பி.எம்.சியில் (B.M.C) துப்புரவுப் பணியாளராக பணியாற்றியவர் - பாலப்பா தன்னை ஒரு 'கரிகார்' என்று அழைப்பதையே விரும்புகிறார் - பல தசாப்தங்களாக அவர் மும்பையின் தெருக்களில் அமர்ந்து கல் உரல்களை செதுக்கிக் கொண்டிருக்கிறார். இப்போது அந்த சட்னி அரைக்கும் உரலை பயன்படுத்துவபர்கள் அதிகம் பேர் இல்லை.