அது ஒரு குளிர்காலத்தின் நன்கு காற்று வீசுகின்ற காலைப் பொழுது,முலா தான் தோண்ட உதவிய, அந்த நீரற்ற குளத்தினுள் நின்றுகொண்டிருக்கிறார். பல மாதங்களாக தனது கூலியை பெற முடியாத நிலையில் ,கடைசியாக அவர் ஒரு முடிவுக்கு வந்தார். அல்லது அவ்வாறு நினைத்துக்கொண்டார். அதுகுறித்து முலா கூறுகையில்,"எனது பணத்தை ஒருவேளை அந்த போன் வைத்திருக்கலாம்" என்று பெருமூச்சு விட்டபடி கூறினார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் , சித்தாப்பூரில் உள்ள மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்ட கூடுதல் திட்ட அலுவலர் விகாஷ் சிங்கின் அலுவலகம் முன்பு விவசாயக்கூலிகள் பல போராட்டங்களை நடத்தினர். இந்த போராட்டங்களுக்கு பின்னர், ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணிபுரிந்தவர்களுக்கான ஊதியம், ஜனவரி 2017 லிருந்து தொடங்கப்பட்டுள்ள 9,877 பேரின் ஏர்டெல் பேமண்ட்ஸ் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று திட்ட அலுவலர் விகாஷ் சிங் தெரிவித்தார். இந்த வங்கிக் கணக்குகள் குறித்து விகாஷ் சிங்கின் வார்த்தைகளில் கூறவேண்டுமானால், இதற்காக புதிய சிம் கார்டு வாங்கப்படும் போது உரியவர்களிடம் "வங்கிக் கணக்கு குறித்து தெரிவிக்காமலும்,ஒப்புதல் பெறாமலும்" தொடங்கப்பட்ட கணக்குகள் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்த புதிய கணக்குகளுக்கு பணம் பரிமாற்றப்பட உரியவருக்கு தெரிவிக்காமல் ஒப்புதலின்றி,இணையவழி வாடிக்கையாளர் கையகப்படுத்தல் படிவத்தின் 'ஆதார் வழியான சிம் உறுதிப்படுத்துதலின்' போது வெறுமனே திரையில் தெரிந்த பெட்டியில் இடுகுறியை உறுதிப்படுத்த(TICK) செய்து சரிபார்க்கப்பட்டுள்ளது. இது இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் குற்றமில்லாத வழிகாட்டுதலின் நடைமுறையின் வழியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது; மேலும், அவ்வாறு கணக்கு ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட உடன் ஒருவர், நேரடி பணப்பரிமாற்றம் வழியாக வழங்கப்பட்ட எந்தவொரு பணத்தையும் பெற இயலும்.
இந்நிலையில்,விகாஷ் சிங்கின் இந்த அறிவிப்பைக் கேட்டு பசி என்கிற தலித் சமூகத்தைச் சார்ந்த 45 வயதான முலா நம்பிக்கை இழந்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டே முலா தொலைபேசி உடன் ஏர்டெல் ஒன்றையும் வாங்கியுள்ளார். ஒரு காலைப்பொழுதில் அண்டைவீட்டார் ஏர்டெல் சிம் கார்டுகள் நல்ல சலுகைகளுடன் கிடைக்கிறது என்று சொல்ல(40 ரூபாய் சிம் கார்டு வாங்கினால் 35 நிமிடம் பேசலாம்), முலாவும் அவரது மகன் நாகராஜூம் சித்தாப்பூர் மாவட்டத்தின் தாதியோரா கிராமத்தில் இருந்து, 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள, மச்சரேஹதா பகுதியின் பர்சடா முதன்மை சந்தைப்பகுதிக்கு சென்றுள்ளனர். அங்குள்ள கடையில் தொலைபேசி வாங்கியதற்கு (தற்போது நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது) பின்னர், கடை உரிமையாளர் சிம் கார்டுக்காக, முலாவிடம் ஆதார் அட்டையின் நகலைக் கேட்டுள்ளார்,அவரது மகனிடம் அப்போது ஆதார் அட்டை இல்லாததால். முலா தனது ஆதார் அட்டையை வழங்கியுள்ளார்.





