ஆந்திர பிரதேசத்தின் ஆனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள கறிக்கடைகள் மற்றும் சந்தைகளுக்கு வெள்ளாடுகளும், செம்மறியாடுகளும் வண்டிகளில் வழக்கமாக எடுத்துக்கொண்டு வரப்படுகிறது. அவற்றை வணிகர்கள் ஆடு, மாடு வளர்ப்பவர்களிடம் இருந்து கொள்முதல் செய்து, ஒரு சந்தையில் இருந்து மற்றொரு சந்தைக்கு விலையைப்பொருத்து எடுத்துச்செல்கின்றனர். கதிரியிலிருந்து ஆனந்தப்பூருக்கு டெம்போவில் விலங்குகள் கொண்டு செல்லப்பட்டபோது, இந்த படம் எடுக்கப்பட்டது.
மேலே அமர்ந்திருக்கும் நபர்தான் (அவரின் பெயரை நான் கேட்கவில்லை) இவற்றிற்கு சொந்தக்காரராக இருக்க வேண்டும் என்று நான் எண்ணிக்கொண்டேன். எனவே நான் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆனந்தப்பூரில் நடைபெறும் ஆட்டுச்சந்தைக்கு சென்று அங்கு இந்தப்படத்தை காட்டினேன். அவர் ஒரு வணிகராகவோ அல்லது வணிகரால் அனுப்பப்பட்ட பாதுகாவலராகவோ இருக்கலாம் என்று அங்கு சில வணிகர்கள் கூறினார்கள். நான் சந்தையில் சந்தித்த பி.நாராயணசாமி என்ற ஆடு, மாடுகள் வளர்க்கும் நபர், இந்த படத்தில் உள்ள நபர் அந்த விலங்குகளுக்கு சொந்தக்காராராக இருக்க முடியாது. “அவர் வெறும் தொழிலாளி மட்டுமே. அவர்கள்தான் மேலே அமர்ந்து வருவார்கள் (வெகு சாதாரணமாக அமர்ந்திருப்பார்கள்). ஆடுகளுக்கு சொந்தக்காரர்களாக இருக்கும் நபர்கள் தங்கள் கால்களை உள்ளே வைத்து அமர்ந்திருப்பார்கள். ஒவ்வொரு ஆட்டிற்கும் ரூ.6 ஆயிரம் வரை செலவு செய்யும் நபர்கள் தங்கள் கால்கள் சேதமடையும் வகையில் இவ்வாறு மெத்தனமாக அமர்ந்திருக்கமாட்டார்கள்“ என்று அவர் கூறினார்.
தமிழில்: பிரியதர்சினி. R.