அரசாங்க அதிகாரி அவருக்கு அன்னமிடுபவர் எனப் பெயர் வைத்தார். இப்போது அவர் அப்பெயருக்குள் மாட்டிக் கொண்டார். அரசாங்க அதிகாரி, ‘விதை போட’ சொன்னால், அவர் வயலில் விதைப்பார். அரசாங்க அதிகாரி ‘உரமிட’ சொன்னால், அவர் மண்ணுக்கு உரமிடுவார். பயிர் விளைந்ததும் அரசாங்க அதிகாரி நிர்ணயித்த விலையில் அவர் விற்பார். பிறகு பெருமையுடன் அந்த அரசாங்க அதிகாரி விளைச்சலை உலகுக்கு விற்பார். ஆனால் அன்னமிடுபவர் அதே உணவை மீண்டும் சந்தையிலிருந்து விலைக்கு வாங்கி வயிற்றை நிரப்பிக் கொள்வார். வருடம் முழுக்க இதுவே பாணியாக இருந்தது. இதே பாணியில் தொடர்ந்த அவர், கடனில் சிக்கிக் கொண்டதை ஒருநாள் உணர்ந்தார். அவரின் காலுக்கு அடியிலிருந்து நிலம் நழுவியது. அவர் இருந்த கூடு இன்னும் பெரிதானது. சிறையிலிருந்து வெளியேறிவிட முடியுமென அவர் நம்பினார். ஆனால் அவரது மனமும் கூட அரசாங்கத்துக்கு அடிமைப்பட்டிருந்தது. அவரின் இருப்பு வெகுகாலத்துக்கு முன்பே சம்மன் நிதி திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட பளபளக்கும் பணத்துக்கு அடியில் புதைக்கப்பட்டுவிட்டது.
मौत के बाद उन्हें कौन गिनता
ख़ुद के खेत में
ख़ुद का आलू
फिर भी सोचूं
क्या मैं खालूं
कौन सुनेगा
किसे मना लूं
फ़सल के बदले
नकदी पा लूं
अपने मन की
किसे बता लूं
अपना रोना
किधर को गा लूं
ज़मीन पट्टे पर थी
हज़ारों ख़र्च किए थे बीज पर
खाद जब मिला
बुआई का टाइम निकल गया था
लेकिन, खेती की.
खेती की और फ़सल काटी
फ़सल के बदले मिला चेक इतना हल्का था
कि साहूकार ने भरे बाज़ार गिरेबान थाम लिया.
इस गुंडई को रोकने
कोई बुलडोज़र नहीं आया
रपट में पुलिस ने आत्महत्या का कारण
बीवी से झगड़े को बताया.
उसका होना
खेतों में निराई का होना था
उसका होना
बैलों सी जुताई का होना था
उसके होने से
मिट्टी में बीज फूटते थे
कर्जे की रोटी में बच्चे पलते थे
उसका होना
खेतों में मेड़ का होना था
शहराती दुनिया में पेड़ का होना था
पर जब उसकी बारी आई
हैसियत इतनी नहीं थी
कि किसान कही जाती.
जिनकी गिनती न रैलियों में थी
न मुफ़्त की थैलियों में
न होर्डिंगों में
न बिल्डिंगों में
न विज्ञापनों के ठेलों में
न मॉल में लगी सेलों में
न संसद की सीढ़ियों पर
न गाड़ियों में
न काग़ज़ी पेड़ों में
न रुपए के ढेरों में
न आसमान के तारों में
न साहेब के कुमारों में
मौत के बाद
उन्हें कौन गिनता
हे नाथ!
श्लोक पढूं या निर्गुण सुनाऊं
सुंदरकांड का पाठ करूं
तुलसी की चौपाई गाऊं
या फिर मैं हठ योग करूं
गोरख के दर पर खिचड़ी चढ़ाऊं
हिन्दी बोलूं या भोजपुरी
कैसे कहूं
जो आपको सुनाई दे महाराज…
मैं इसी सूबे का किसान हूं
जिसके आप महंत हैं
और मेरे बाप ने फांसी लगाकर जान दे दी है.
இறந்தோரை தவிர அவர்கள் யாருமில்லை
வயல் எனக்கு சொந்தம்
உருளைக்கிழங்குகள் நான் வளர்த்தவை
ஆனாலும் எனக்கு தெரியவில்லை
எதை உண்ணுவது என.
யார் கவனிப்பார்?
யார் நம்புவார்?
நான் விளைவித்த தங்கத்தை கொடுத்து
எப்படி பணமீட்டுவது?
யார்
கேட்பார்
என் துயரக்கதையை
எங்கு வெளியிட
என் கோப ஓலத்தை?
நிலம் குத்தகைக்கெடுக்கப்பட்டது
லட்சக்கணக்கில் விதைகளுக்கு செலவழிக்கப்பட்டது
உரம் வந்து சேர்ந்தது
ஆனால் விதைப்பு காலம் சென்றுவிட்டது
ஆனாலும் நாங்கள்
கையில் கொஞ்சம் காசு சேர்க்க
விதைத்து, அறுவடை செய்து, விற்று உழைத்தோம்
சந்தை என்னவோ கடன்காரர்களிடம் இருக்கிறது.
ஊழலை ஒழிக்க
எவரும் வரவில்லை
தற்கொலைக்கான காரணமாக
‘மனைவியுடன் சண்டை’ என எழுதியது காவல்துறை
அவள்தான்
நிலத்தில் விதைத்தாள்
அவள்தான்
மண்ணை தயார் செய்தாள்
அவள்தான்
விதைகள் முளைவிடச் செய்தாள்
அவள்தான்
நாங்கள் கடனிலிருந்தபோதும் குழந்தைகளுக்கு உணவளித்தாள்.
அவள்தான் வயல்களுக்கு இடையிலான இணைப்பு
அவள்தான் நகரத்தின் மையத்தில்
இருந்த பசுமையான மரம்.
ஆனால் அவளும் ஒரு
விவசாயி என அழைக்கப்பட
மட்டும் வாய்ப்பு ஏற்படவே இல்லை.
ஊர்வலங்களிலும்
இலவச உணவுப் பொருட்களுக்கான பைகளிலும்
விளம்பரப் பலகைகளிலும்
கட்டடங்களிலும்
விளம்பர கடைகளிலும்
பெருவணிக அங்காடிகளிலும்
நாடாளுமன்ற கூடங்களின் படிகளிலும்
கார்களிலும்
காகித மரங்களிலும்
ரூபாய் தாள்களிலும்
வானின் நட்சத்திரங்களிலும்
சாகிப்களின் மகன்களிடமும்
அவர்கள் பொருட்படுத்தப்படுவதில்லை.
யார் அவர்களை எண்ணுவார்கள்?
அவர்கள் இறந்திருந்தார்கள்.
நாதனே! என்னை ஆளுபவனே!
மந்திரங்கள் சொல்லவா
அல்லது நிர்குணம் பிரார்த்திக்கவா?
சுந்தரகாண்டம் ஒப்பிக்கவா
அல்லது துளசியின் செய்யுள் பாடவா?
அல்லது ஹத யோகம் செய்யவா
கோரக்கின் காலடியில் கிச்சடி சேர்க்கவா?
இந்தியில் பேசவா போஜ்பூரியில் பேசவா?
உனக்கு என் குரல் கேட்கும் வகையில்
எப்படி நான் பேசுவது மகாராஜா?
நீங்கள்
ஆட்சி செலுத்தி
என் தந்தை தற்கொலை செய்து கொண்ட
அதே மாவட்டத்தை சேர்ந்த விவசாயிதான் நானும்.
தற்கொலை எண்ணம் உங்களுக்கு இருந்தாலோ அல்லது இருக்கும் யாரையேனும் நீங்கள் அறிந்திருந்தாலோ 1800-599-0019 (24/7 இலவச சேவை) என்ற தேசிய உதவி எண்ணில் தொடர்பு கொள்ளவும். அல்லது உங்களுக்கு அருகே இருக்கும் எண்ணை
இவற்றிலிருந்து
தொடர்பு கொள்ளவும். உளவியல் சுகாதார வல்லுனர்கள் மற்றும் சேவைகளை தொடர்பு கொள்ள
SPIF-ன் உளவியல் ஆரோக்கிய விவரப்புத்தகத்துக்கு
செல்லவும்.
தமிழில்: ராஜசங்கீதன்