அச்சுறுத்தலுக்கு எதிராக வாக்களிக்கும் திருநங்கையர்

வாரணாசியில், திருநங்கையரின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய சட்ட ஒழுங்குத் துறை தொடர்ந்து தவறி வந்திருக்கிறது. 2024ம் ஆண்டு பொதுத் தேர்தலில் அவர்கள் மாற்றத்துக்கு வாக்களிக்கின்றனர்

ஜூன் 26, 2024 | ஜிக்யாசா மிஸ்ரா

தினக்கூலி தொழிலாளர்களும், புலப்படாத எதிர்காலமும்

ஜார்க்கண்டில், பொதுத் தேர்தல் முடிவுகள் 2024 ஜூன் 4 அன்று, அறிவிக்கப்பட்ட மறுநாள் காலை. டால்டன்கஞ்சின் தொழிலாளர் சந்தையில், வேலையில்லா திண்டாட்டம் மட்டும் நீங்கவில்லை என்று தொழிலாளர்கள் கூறுகின்றனர்

ஜூன் 11, 2024 | அஸ்வினி குமார் ஷுக்லா

மாற்றத்துக்கு வாக்களிக்கும் ரோஹ்தாக் தொழிலாளர்கள்

ஹரியானாவின் இந்த தாலுகா, ஒரு நூற்றாண்டுக்கு முன் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய மைல்கல்லாக விளங்கியது. இன்று இப்பகுதியின் தொழிலாளர்கள், 2024 தேர்தல்களை பற்றி தங்களின் கருத்துகளை விவரிக்கின்றனர்

ஜூன் 9, 2024 | அமிர் மாலிக்

சுமை தூக்கும் தொழிலாளர்களின் சிரம எல்லைகள்

தங்களின் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் முன் வைக்கும் வலிமையான பிரதிநிதிதான் எல்லா வாக்காளர்களுக்கும் விருப்பம். பிரச்சினைக்குரிய இந்தியா- பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் வேலையின்றி இருக்கும் சுமை தூக்கும் தொழிலாளர்கள், 2024ம் தேர்தலில் அந்த விருப்பம் நடந்தேறும் என நம்புகிறார்கள்

ஜூன் 7, 2024 | சன்ஸ்கிருதி தல்வார்

‘இந்தப் போராட்டங்கள் எங்களுக்கு பள்ளிக்கூடம் போல’

பஞ்சாபின் மன்சா மாவட்ட கிஷான்கர் சேதா சிங் வாலாவின் முதியப் பெண்களுக்கு, 2020-2021-ல் நடந்த வரலாற்றுப் பூர்வமான விவசாயப் போராட்டங்கள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துபவையாக இருந்தன. அங்கு கற்பிக்கப்பட்ட எதிர்ப்புணர்வு, 2024ம் தேர்தல்களுக்கான அவர்களின் தேர்வுகளை முடிவு செய்வதிலும் பயன்படுகிறது

ஜூன் 5, 2024 | அர்ஷ்தீப் அர்ஷி

தேர்தல்கள், கவிதைகள் மற்றும் புகைப்படங்கள்

மேற்கு வங்க செய்தியாளரும் கவிஞரும் ஒருவர், 2024ம் ஆண்டு தேர்தல்களுக்கு முந்தைய ஐந்து வருடங்கள் மாநிலம் முழுக்க பயணித்து அவதானித்தவற்றை நமக்கு அளிக்கிறார்கள்

ஜூன் 2, 2024 | ஜோஷுவா போதிநெத்ரா மற்றும் ஸ்மிதா காடோர்

வாரணாசி மாவட்டத்தில்: MNREGA எங்கே?

இந்த தொகுதியில் இரண்டு முறை நரேந்திர மோடி வென்றுள்ளார். ஆனால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் அரசு நிதியுதவியுடன் கூடிய பணிகள் ஒதுக்கப்படாதது, வாக்காளர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது

ஜூன் 1, 2024  | அகாங்ஷா குமார்

‘அரசியல்வாதிகள் வாக்கு கேட்க வருவதோடு சரி... அதன் பின் வருவதில்லை’

ஜார்க்கண்ட்டின் தும்காவில் உள்ள பழங்குடியின கிராமங்களுக்கு, அரசின் திட்டங்கள் மற்றும் வேலைகள் பெருவாரியாக தவிர்க்கப்பட்டுள்ளன. 2024 பொதுத் தேர்தல், கடைசி கட்டத்தை நெருங்கும் வேளையில், வெளிப்படையான அதிருப்தி நிலவுகிறது

ஜூன் 1, 2024 | அஸ்வினி குமார் ஷுக்லா

போதையற்ற கிராமத்தை கோரும் நங்கல் பெண்கள்

பஞ்சாபின் மோகா மாவட்டத்தில், ஹெராயின் மற்றும் பிற போதைப்பொருட்களுக்கு இளைஞர்களும், வயோதிக ஆண்களும் பலியாகின்றனர். இதனால் அரிதாகவே கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்புகளை தேட வேண்டிய நிலைக்கு பெண்கள் தள்ளப்படுகின்றனர். 2024 பொதுத் தேர்தலில் இது மாபெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது

மே 31, 2023 | சன்ஸ்கிருதி தல்வார்

‘நாட்டை கட்டியெழுப்ப ஒரு காலத்தில் வாக்களித்தேன்… இப்போது அதை காக்க வாக்களிக்கிறேன்’

92 வயது க்வாஜா மொயினுதீன், இந்தியாவின் முதல் தேர்தலை நினைவுகூருகிறார். 2024ம் ஆண்டு தேர்தலிலும் அவர் வாக்களித்திருக்கிறார். மகாராஷ்டிராவின் பீடில் வசிக்கும் அவர், நம் மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் கடந்தகாலம், தற்காலம் மற்றும் எதிர்காலம் பற்றி பேசுகிறார்

மே 30, 2024 | பார்த் எம்.என்.

‘தூக்கத்தில் கூட தூசைதான் சுவாசித்தேன்’

மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் சந்தேஷ்காலி மற்றும் மினாகான் ஒன்றியங்களை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு சென்று உலோகம் அடிக்கும் வேலையை பார்க்கின்றனர். சில வருடங்களில் அவர்கள் சிலிகோசிஸ் நோயுடன் திரும்பி வந்தனர். 2024ம் ஆண்டு தேர்தல்கள் அவர்களுக்கு எந்த நலனையும் கொடுக்காது என்கிறார்கள்

மே 29, 2024 | ரிதாயன் முகெர்ஜி

‘ஏன் நாம் வாக்களிக்கிறோம்?’

நம் ஜனநாயகத்தில் நடத்தப்படும் மக்களவை தேர்தல்கள் எப்படி சாமானியர் உரிமைகளை தவிர்த்து வேறு பல விஷயங்களை பேசுவதாக இருக்கிறது என ஒரு கவிஞர் விவரிக்கிறார்

மே 28, 2024 | மெளமிதா ஆலம்

ஜல்கான் பெண்கள் கிருஷ்ணா பரித்தின் நட்சத்திரங்கள்

மகாராஷ்டிராவின் ஜல்கானில் 2024 பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது ஒரு உள்ளூர் உணவும், அதன் 14 பெண் சமையல்காரர்களும் கவனத்தை ஈர்க்கின்றனர்

மே 28, 2024 | கவிதா ஐயர்

பதிலடி கொடுக்கத் தயாராக இருக்கும் பஞ்சாப்

மூன்று கோடைக்காலங்களுக்கு முன், டெல்லியில் நுழைய முயன்ற போராட்ட விவசாயிகள் கொடுமையாக ஒடுக்கப்பட்டதை நாடு கண்டது. பஞ்சாபின் தேர்தல் பிரசாரங்களில், அதற்கான பதிலடியை அமைதியான முறையில் தந்து கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள்

மே 26, 2024 | விஷவ் பார்தி

‘அவர்களுக்கு [பாஜக] உரிமை கிடையாது…’

விவசாயிகளையும், தொழிலாளர்களையும் மோசமாக நடத்திவிட்டு, 2024 பொதுத் தேர்தலில் வாக்கு கேட்க பாரதிய ஜனதா கட்சிக்கு (பாஜக) உரிமை இல்லை என்று பஞ்சாப் மக்கள் கூறுகிறார்கள். இந்த வாரம் லூதியானாவில் நடைபெற்ற கிசான்-மஸ்தூர் மகாபஞ்சாயத்தில் இதுவே அவர்களின் செய்தி

மே 25, 2024 | அர்ஷ்தீப் அர்ஷி

ப்ரெய்லும் வாக்கும்

மாற்றுத்திறனாளிகளும் வாக்களிக்க அரசு வாய்ப்புகளை அளித்தும், பப்லு கைப்ரடா போன்றவர்கள் தேர்தல்களில் பங்களிக்க முடியுமா என்கிற சந்தேகத்தில் இருக்கின்றனர்

மே 24, 2024 | சர்பாஜயா பட்டாச்சார்யா

இளம் விவசாயிகள்: படித்தவர்கள், வேலையில்லாதவர்கள் மற்றும் திருமணம் முடிக்க இயலாதவர்கள்

யாவத்மாலில் மட்டுமல்ல, உண்மையில் மகாராஷ்டிராவின் கிராமப்புறம் முழுவதும், திருமணத்திற்கான நெருக்கடி உள்ளது. மணமகன்களுக்கு மணப்பெண்கள் கிடைப்பதில்லை. இளம் பெண்கள், அரசு ஊழியர்களுக்காக, ஏழ்மையான விவசாயிகளை தவிர்த்துவிடுகின்றனர். இதற்கு காரணம், குறைந்து வரும் விவசாய வருமானம் என்றும் கூறலாம். 2024 பொதுத் தேர்தல்களுக்கு முன்னதாக, வருமான வீழ்ச்சி மற்றும் கைகூடாத திருமண வாய்ப்புகள் ஆகியவை அதிக கவனத்திற்குறியதாய் உள்ளன

மே 22, 2024 | ஜெய்தீப் ஹர்திகர்

முர்ஷிதாபாத்தில் வெங்காயங்கள் உரித்தல்

மேற்கு வங்க முர்ஷிதாபாத் மாவட்ட வெங்காய வயல்களில் வேலை பார்க்கும் மால் பஹாரியா பழங்குடி பெண்கள், தங்களின் முக்கியத்துவங்களை சொல்கிறார்கள். வேலை, உணவு, பிறகு வாக்கு செலுத்துவது

மே 21, 2024 | ஸ்மிதா காடோர்

2024ல் வாக்களிக்கும் சுதந்திரப் போராட்ட வீரர் பபானி மஹாதோ

வீரஞ்செறிந்த பபானி மஹாதோ விவசாயம் செய்து, சமைத்து குடும்பத்துக்கும் பிற போராளிகளுக்கும் இந்தியாவின் வரலாற்று சிறப்பு வாய்ந்த சுதந்திரப் போராட்டத்தில் பல பத்தாண்டுகள் உணவளித்திருக்கிறார். கிட்டத்தட்ட 106 வயதில் இருக்கும் அவர், இன்னும் போராட்டத்தை, 2024ம் ஆண்டு தேர்தலில் வாக்களித்து தொடர்கிறார்

மே 20, 2024 | பார்த்த சாரதி மஹாதோ

ஜனநாயகத்துக்கு வாக்களிக்கும் டாமு நகர்

வடக்கு மும்பை தொகுதியிலுள்ள டாமு நகர் குப்பத்தில் வசிப்பவர்களுக்கு, விளிம்புநிலை மக்களின் உரிமைகளை காக்கும் வழியாக 2024ம் ஆண்டு தேர்தல் இருக்கிறது

மே 19, 2024 | ஜோதி ஷினோலி

’ஜனநாயகம் அழிந்தால், விளிம்பு நிலை சமூகங்களும் அழியும்’

பால்புதுமையர் சமூகத்தின் உறுப்பினர்கள் 2024ம் ஆண்டு தேர்தலுக்கான பிரசாரத்துக்கு சென்றபோது, ஆளுங்கட்சியினர் அவர்களை அச்சுறுத்தி மிரட்டினர். அந்த நிகழ்வை குறித்த கட்டுரை

மே 16, 2024 | ஸ்வேதா தாகா

‘சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள்’: இங்கும் இல்லை, அங்கும் இல்லை

சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள் (D) என்கிற வகை, அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டுமே காணப்படும் வகை. அங்குதான், வங்க மொழி பேசும் பல இந்துக்கள் மற்றும் இஸ்லாமியரின் வாக்குரிமை அதிகமாக நிராகரிக்கப்படுகிறது. தன் வாழ்க்கை மொத்தத்தையும் அஸ்ஸாமில் கழித்தவர் மர்ஜினா காதுன். 2024ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் அவரால் வாக்களிக்க முடியவில்லை

மே 15, 2024 | மஹிபுல் ஹோக்

நூற்றியெட்டு அடி ஊதுபத்தி

கடவுள் மற்றும் அவரது பக்தர்களின் சத்தம் கோவிலில் அடங்கிய பிறகு, ஒரு கவிஞரின் கூர்மையான, மதிநுட்பம் நிறைந்த லிமெரிக் வகைக் கவிதை, மாறி வரும் தேசத்தின் தன்மையை நோக்கி நம் பார்வையைத் திருப்புகிறது

மே 12, 2024 | ஜோஷுவா போதிநெத்ரா

எந்த அரசியல்வாதியும் வந்திராத கிராமம்

சத்புராவின் கற்கள் நிறைந்த சரிவுகளுக்கு நடுவே அமைந்திருக்கும் அம்பாபானி என்கிற கிராமத்தில் ஜனநாயகம் வந்து சேரவில்லை. அங்கிருக்கும் மக்கள் 2024 தேர்தலில் வாக்களிக்கலாம். ஆனால் அவர்களுக்கு சாலைகளோ மின்சார வசதியோ சுகாதார வசதியோ கிடையாது

மே 11, 2024 | கவிதா ஐயர்

‘எங்கள் கிராமத்திற்கு நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்?’

ஊரக வேலைவாய்ப்பு திட்டம், இலவச சமையல் எரிவாயு, சாலைகள் மற்றும் குடிநீர் இணைப்பு போன்ற அரசாங்கத் திட்டங்கள், ஜார்க்கண்ட், பலமு மாவட்டத்தின் செச்சாரியா கிராமத்தில் உள்ள பெரும்பாலான தலித் மக்களுக்கு கிடைக்கவில்லை. தங்களின் அவல நிலையால் கோபம் கொண்டுள்ளதோடு நம்பிக்கையும் இழந்துள்ள இவர்கள், 2024 பொதுத் தேர்தலில் இதற்கான பதில் கேட்க வேண்டுமென என்று கூறுகிறார்கள்

மே 10, 2024 | அஸ்வினி குமார் ஷுக்லா

‘எங்களுக்கு என்ன தேவையென முதலில் கேளுங்கள்’

மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தின் காட்டுப் பகுதிகளில் இருக்கும் இரும்புத் தாது சுரங்கங்கள், பழங்குடியினரின் வசிப்பிடங்களையும் பண்பாட்டையும் அழித்து விட்டன. பல வருடங்களாக இப்பகுதியில் அரசு பாதுகாப்பு படையினருக்கும் சிபிஐ (மாவோயிஸ்டு)களுக்கும் மோதலும் நடந்து வருகிறது. இந்த வருடத்தில் இங்குள்ள 1,450 கிராம சபைகள், 2024ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளித்திருக்கின்றன. காரணம் இதுதான்…

மே 8, 2024 | ஜெய்தீப் ஹர்திகர்

தேர்தலை தவற விடும் நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள்

மத்தியப்பிரதேசத்திலிருந்து சட்டீஸ்கருக்கு வந்து வேலை பார்க்கும் இந்த தொழிலாளர்களுக்கு சொந்த ஊர்களில் தேர்தல் நடக்கும் தேதிகள் தெரியவில்லை. 2024ம் ஆண்டு தேர்தலில் இவர்கள் வாக்களிப்பதற்கான சாத்தியம் குறைவுதான்

மே 7, 2024 | புருசோத்தம் தாகூர்

பிரிவினைவாதத்தை எதிர்த்து நிற்கும் மல்காவோன்

பல வழிபாடுகளை கொண்டிருக்கும் மக்கள் பல நூற்றாண்டுகளாக வழிபட்டு வந்த பல வழிபாட்டுத் தலங்களை இந்து கும்பல்கள் தாக்கி வருகின்றன. உறுதியான ஒரு கிராமம் மட்டும் ஒத்திசைவான வாழ்க்கை முறையை எப்படி மீட்க முடியுமென்பதை காட்டியிருக்கிறது

ஏப்ரல் 28, 2024 | பார்த் எம்.என்.

தேர்தலை புறக்கணிக்கும் புறக்கணிக்கப்பட்ட கிராமம்

மகாராஷ்டிராவின் அம்ராவதி மாவட்டத்திலுள்ள காதிமால் கிராமத்தில் நீரும் மின்சாரமும் இருந்ததே கிடையாது. ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை வெற்று வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு அரசியலவாதிகள் மறைந்துவிடுவதாக கிராமவாசிகள் கூறுகின்றனர். விளைவாக, அவர்கள் கூட்டாக 2024 தேர்தலை புறக்கணிப்பதென முடிவெடுத்திருக்கின்றனர்

ஏப்ரல் 26, 2024 | ஸ்வரா கார்கே மற்றும் பிரகார் தோபல்

‘விலைவாசி உயர்வு ஒரு பிரச்சினை, இப்போது யானைகளும்’

மகாராஷ்டிராவின் பழங்குடி கிராமமான பலாஸ்காவோன் கிராமத்தினர், தங்களின் காடு சார்ந்த வாழ்வாதாரம் எதிர்கொண்டிருக்கும் சவாலால் இந்தக் கோடையில் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். வாழ்க்கையை பற்றிய கவலையில் இருக்கும் அவர்கள், தேர்தல்களை பெரிதாக பொருட்படுத்தும் நிலையில் இல்லை

ஏப்ரல் 25, 2024 | ஜெய்தீப் ஹர்திகர்

தொடரும் துர்சம்பவங்கள்

மகாராஷ்டிராவின் இந்த மாவட்டத்திலுள்ள இளையோர், கிராமங்களில் வேலைகள் இல்லாததால் புலம்பெயர வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். பொதுத் தேர்தல் 2024 அவர்களின் மனங்களில் பெரிய முக்கியத்துவம் கொண்டிருக்கவில்லை

ஏப்ரல் 23, 2024 | ஜெய்தீப் ஹர்திகர்

கோந்தியாவின் ஏழைகள் நம்பியிருக்கும் 3 விஷயங்கள்: இலுப்பைப்பூ, 100 நாள் வேலை மற்றும் இடப்பெயர்வு

இந்தியாவின் ஏழ்மையான குடும்பங்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக, இலுப்பை மற்றும் கருங்காலி இலைகள் போன்ற சிறு வனப் பொருட்களையும், உறுதியளிக்கப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தையும் (MGNREGA) நம்பியுள்ளன. 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் நாளை (ஏப்ரல் 19) வாக்களிக்கத் தயாராகும் போது, இங்குள்ள அரத்தோண்டி கிராமத்தில் உள்ள ஆதிவாசி கிராம மக்கள், கடந்த 10 ஆண்டுகளில் தங்கள் வாழ்க்கை மிகவும் கடினமாகிவிட்டதாக கூறுகிறார்கள்

ஏப்ரல் 18, 2024 | ஜெய்தீப் ஹர்திகர்

'விவசாயியை பற்றி யார் கவலைப்படுகிறார்?'

ஜார்கண்டின் பலாமு மாவட்டத்தை சேர்ந்த சிறு, குறு விவசாயிகள் தொடர் வறட்சியால் கடன்களில் உழலுகின்றனர். அவர்களின் வாக்கு நீர்ப்பாசனத்துக்குதான் என்கின்றனர்

ஏப்ரல் 17, 2024 | அஸ்வினி குமார் ஷுக்லா

பண்டாரா இளைஞர்களுக்கு வாக்களிப்பதில் விருப்பமில்லை

இந்தியாவின் 2024 பொதுத் தேர்தலின் முதல் கட்டமாக பண்டாரா-கோண்டியா நாடாளுமன்றத் தொகுதியில் ஏப்ரல் 19 அன்று தேர்தல் நடைபெறுகிறது. அரசு வேலைக்கான பயிற்சியில் சிவாஜி ஸ்டேடியத்தில் மும்முரமாக இருக்கும் கிராமப்புற இளைஞர்கள் மத்தியில் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்த பதற்றமும் நிலவுகிறது. அதுதான் அவர்களுக்கு முதன்மையானது; தேர்தல் வாக்குறுதிகள் பொருட்டாக அவர்களுக்கு இல்லை. இன்றைய கட்டுரை கிராமப்புற வாக்குச்சீட்டு 2024 - என்ற எங்கள் தொடரைத் தொடங்கி வைக்கிறது

ஏப்ரல் 12, 2024 | ஜெய்தீப் ஹர்திகர்

பூசேசாவலியில்: சித்தரிக்கப்பட்ட படங்கள், கொல்லப்பட்ட உயிர்கள்

மகாராஷ்டிராவில், பெரும்பான்மையான இந்துத்துவா கும்பல்கள், வகுப்புவாதக் கொந்தளிப்பைத் தூண்டிவிடுகின்றனர். இவர்களை ஊக்குவிக்க, ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட படங்கள், சித்தரிக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் வதந்திகள் கிடைத்தாலே போதும். முஸ்லிம்கள், தங்களுடைய உயிர்கள் மற்றும் உடைமைகளை இழந்து, இதன் விளைவுகளை சந்திக்க வேண்டியுள்ளது

மார்ச் 27, 2024 | பார்த் எம்.என்.
Translator : PARI Translations, Tamil