டும்-டும்-டும்… டும்-டும்-டும்…! தோலக் குகள் தயாரிக்கப்பட்டு, ஸ்ருதி சேர்க்கப்பட்டு, செழுமை செய்யப்படுகையில் எழும் மெய்மறக்கும் சத்தம், சாந்தி நகரின் ஒவ்வொரு சந்திலும் உங்களைத் தொடரும். தோலக் தயாரிக்கும் 37 வயது இர்ஃபான் ஷேக்குடன் நாம் நடந்து கொண்டிருக்கிறோம்.  மும்பையின் வடக்குப்பகுதியில் இருக்கும் புலம்பெயர்ந்தவர்களுக்கான இப்பகுதியில் பிற கலைஞர்களை அறிமுகப்படுத்த நம்மை அழைத்து செல்கிறார்.

இங்குள்ள கலைஞர்கள் பெரும்பாலானோரில் பூர்விகம் உத்தரப்பிரதேசத்தின் பாரபங்கி மாவட்டமாக இருக்கிறது. இந்த தொழிலில் அவர்கள் 50 பேர் இருக்கின்றனர். “எங்கு பார்த்தாலும் எங்களின் பிராதாரி (சமூகத்தினர்), இக்கருவிகளை மும்முரமாக தயாரித்துக் கொண்டிருப்பதை நீங்கள் காணலாம்,” என்கிறார் அவர் பெருமையுடன், இங்கிருந்துதான் தோலக்குகள் மும்பைக்கும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் செல்கின்றன எனக் கூறி. ( பிராதாரி என்றால் எங்களின் ஆட்கள் என மொழிபெயர்க்கலாம். பெரும்பாலும் இச்சொல், குழுவையும் ஒரு கூட்டத்தையும் குறிப்பிட பயன்படுகிறது).

காணொளி: தோலக் பொறியாளர்கள்

சிறு வயதிலிருந்தே இர்ஃபான் இத்தொழிலை செய்து வருகிறார். இரண்டு மேளங்கள் கொண்டிருக்கும் இந்த வாத்தியத்தை தயாரிக்கும் நுட்பம் பல தலைமுறைகளாக தொடர்ந்து அவருக்கு கிடைத்திருக்கிறது. தயாரிக்கும் முறை மிகவும் கஷ்டமானது. இர்ஃபானும் அவரது சமூகத்தினரும் மரக்கட்டை தொடங்கி, கயிறு, பெயிண்ட் வரையிலான பொருட்களை உத்தரப்பிரதேசத்தில் தேர்ந்தெடுத்து வாங்குவார்கள். “நாங்களே இவற்றை செய்வோம். பழுது பார்ப்போம்… நாங்கள்தான் வல்லுநர்கள்,” என சொல்கிறார் பெருமையோடு.

இர்ஃபான் ஒரு புதுமை விரும்பி. கோவாவில் ஒரு ஆப்பிரிக்க நாடகத்தை பார்த்து, ஜெம்பே என்கிற கருவியைக் கண்டறிந்து, அதன் தயாரிப்புக்கும் தன் தொழிலை அவர் விரிவுபடுத்தியிருக்கிறார். “என்னவோர் அற்புதமான இசைக்கருவி. மக்கள் இங்கு அதை பார்த்ததில்லை,” என நினைவுகூருகிறார்.

புதுமை மற்றும் நிபுணத்துவத்தைத் தாண்டி, தன்னுடைய தொழில் தனக்குரிய பெருமையை பெற்று தரவில்லை என அவர் நினைக்கிறார். பெரிய லாபத்தையும் அது ஈட்டித் தரவில்லை. இன்றைய மும்பையில், தோலக் தயாரிப்பாளர்கள், மலிவான இணையவழி விற்பனையில் கடும் போட்டியை எதிர்கொள்கின்றனர். மறுபக்கத்தில், வாடிக்கையாளர்கள் பேரம் பேசுகின்றனர்.

“தோலக் வாசிப்பவர்களுக்கு என பாரம்பரியங்கள் உண்டு. எங்களின் சமூகங்களில் நாங்கள் வாசிப்பதில்லை. விற்க மட்டும்தான் செய்கிறோம்,” என்கிறார் இர்ஃபான். மதக் கட்டுப்பாடுகள் இக்கலைஞர்கள் தயாரிக்கும் வாத்தியங்களை அவர்கள் வாசிப்பதிலிருந்து தடுக்கிறது. எனினும் அவர்கள் இந்த தோலக்குகளை, கணேஷ் மற்றும் துர்கா பூஜா விழாக்களில் வாசிக்கும் வாடிக்கையாளர்களுக்காக தயாரிக்கின்றனர்.

PHOTO • Aayna
PHOTO • Aayna

இர்ஃபான் ஷேக் (இடது) மற்றும் அவரது பகுதியில் வாழும் மக்கள் ஆகியோர் உத்தரப்பிரதேசத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்து, பல தலைமுறைகளாக தோலக்குகளை செய்து வருகின்றனர். சொந்தமாக ஜிம்பே கருவியை தயாரித்து தன் தொழிலில் புதுமையை புகுத்தியிருக்கிறார் இர்ஃபான்

PHOTO • Aayna
PHOTO • Aayna

சிறு வயதிலிருந்து தோலக்குகளை தயாரித்து விற்கும் தொழிலை செய்து வரும் இர்ஃபான் அந்த வேலையை நேசிக்கிறார். ஆனால் அந்த வணிகத்தில் லாபம் இல்லாதது, அவருக்கு துயரத்தையும் மனச்சோர்வையும் கொடுக்கிறது

இந்த வசிப்பிடத்தில் தோலக் வாசித்து பாட விரும்பும் பெண்கள் இருக்கின்றனர். ஆனால அவர்களில் எவரும் மதக் காரணங்களுக்காக தோலக்கை தயாரிப்பதோ விற்பதோ வாசிப்பதோ கிடையாது.

“வேலை நன்றாக இருக்கிறது. ஆனால் வியாபாரம் இல்லாததால் ஆர்வமில்லை. லாபமும் கிடையாது. இன்று எதுவும் இல்லை. நேற்று ஊர் ஊராக சென்றேன். இன்றும் செல்கிறேன்,” என்கிறார் இர்ஃபான்.

தமிழில் : ராஜசங்கீதன்

Aayna is a visual storyteller and a photographer.

Other stories by Aayna
Editor : Pratishtha Pandya

PARI సృజనాత్మక రచన విభాగానికి నాయకత్వం వహిస్తోన్న ప్రతిష్ఠా పాండ్య PARIలో సీనియర్ సంపాదకురాలు. ఆమె PARIభాషా బృందంలో కూడా సభ్యురాలు, గుజరాతీ కథనాలను అనువదిస్తారు, సంపాదకత్వం వహిస్తారు. ప్రతిష్ఠ గుజరాతీ, ఆంగ్ల భాషలలో కవిత్వాన్ని ప్రచురించిన కవయిత్రి.

Other stories by Pratishtha Pandya
Translator : Rajasangeethan

రాజా సంగీతన్ చెన్నైకి చెందిన రచయిత. ఒక ప్రసిద్ధ తమిళ వార్తా చానల్‌లో పాత్రికేయులుగా పనిచేస్తున్నారు.

Other stories by Rajasangeethan