"I just heard the call of an Oriental Shama.”
Micah Rai is excited. He describes its call as a melodious series of chirps.
But his excitement is tinged with worry about the tiny black, white and yellow winged creature. “It's usually found below [900 metres], but recently, I've been hearing it up here [2,000 metres]," says the 30-year-old field staffer who has been observing birds for the last decade at the Eaglenest Wildlife Sanctuary in Arunachal Pradesh.
A local, Micah is part of a team of scientists, researchers and field staff who have been studying avian species in the tropical montane (mountain) forests of Arunachal Pradesh's West Kameng district for the last 10 years.
Holding a striking dark blue and black bird with white lines on its tail, Dr. Umesh Srinivasan says, "this is the White-tailed Robin. Its upper limit used to be 1,800 metres, but over the last three to four years, it has been found at 2,000 metres."
An ornithologist, Srinivasan is a Professor at the Indian Institute of Science (IISc) in Bangalore and heads the team working in Arunachal Pradesh. "Over the last 12 years, bird species in the eastern Himalayas have been shifting their ranges," adds Srinivasan.
உள்ளுர்வாசிகளும் குழுவில் இருப்பதால், வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களை குறித்து கவலைப்பட்டு மாற்றங்களை முன்னெடுக்க விரும்பும் குழுவாக அது இருக்கிறது.
மேற்கு கமேங்கில் இருக்கும் குழுவில், ஆறு பேர் இருக்கின்றனர். உள்ளூர்வாசிகளும் அறிவியலாளர்களும் இருக்கும் அக்குழு, சூழல் சீரழிவும் வெப்பநிலை உயர்வும் எப்படி பறவைகளின் இயல்பை மாற்றி, பறக்கும் உயரத்தை கூட்ட வைக்கிறது என்பதை புரிந்து கொள்ள முயற்சிக்கிறது. செம்முதுகு கீச்சன், சுல்தான் சிட்டு, பச்சை மக்பை போன்ற குறைந்த உயரத்தில் பறக்கக் கூடிய பறவைகளும் அதிக உயரங்களுக்கு மாறுகின்றன. இது அவற்றின் உயிர்வாழும் தன்மையையே பாதிக்கும்.
‘இது இடப்பெயர்வு அல்ல,” என்கிறார் பறவையியலாளர். “அதிகரிக்கும் வெப்பநிலையால் இப்பறவைகள் உயரத்தில் பறக்க வேண்டிய கட்டாயத்தை அடைகின்றன.” சிறகுகள் கொண்ட உயிர்கள் மட்டும் இந்தக் காடுகளில் வெப்பத்தை உணரவில்லை. “கடந்த மூன்று-நான்கு வருடங்களில் மலைகள் அதிக வெப்பமாக மாறிவிட்டது,” என்கிறார் ஐதி தபா.
20 வயதாகும் அவர் குழுவுக்கு புதிதாக வந்திருக்கிறார். மேற்கு காமேங் மாவட்டத்தின் சிஞ்சுங் தாலுகாவிலுள்ள ராமலிங்கம் கிராமத்தை சேர்ந்தவர். அவரின் குடும்பம் தக்காளிகள், முட்டைக்கோஸ் மற்றும் பட்டாணி ஆகியவற்றை விளைவிக்கிறது. “நிச்சயமற்ற மழைபொழிவால் இந்தப் பயிர்களை வளர்ப்பது கடினமாக இருக்கிறது. முன்பிருந்தது போல இல்லை,” என்கிறார் அவர்.
இமயமலை வெப்பத்தின் வருட சராசரி 1.5 டிகிரி செல்சியஸ் உயர்ந்திருப்பதாக Widespread Climate Change in the Himalayas and Associated Changes in Local Ecosystems அறிக்கை தெரிவிக்கிறது. “உலக வெப்ப உயர்வு சராசரியை விட, இமயமலையின் வெப்ப உயர்வு அதிகம். காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படக் கூடிய நிலையில் இமயமலை இருப்பதை இது உறுதிப்படுத்துகிறது.” இம்மலைகள்தான் உலகின் 85 சதவிகித உயிர்பன்மையமும் கொண்டிருக்கிறது. எனவே உயிரின பாதுகாப்பு இங்கு மிகவும் முக்கியம்.
ஒப்பீட்டளவில் அதிகம் இடம்பெயரும் குழுவாக இருக்கும் பறவைகள், காலநிலை மாற்றம் வெப்பமண்டல மலைகளின் உயிர்ச்சூழலை எப்படி பாதிக்கிறது என்பதை எடுத்துக் காட்ட உதவும்
“உலகத்தின் மீதான மனித இனத்தின் தாக்கம் இமயமலையின் பன்மையச்சூழலில் தெளிவாக தெரிகிறது,” என்கிறார் உமேஷ். அவரின் வெளிப்புற பரிசோதனை நிலையம், அருணாசல பிரதேசத்தில் 218 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இருக்கும் ஈகிள்நெஸ்ட் வன உயிர் சரணாலயத்தின் போங்பு ப்ளாங்சா தளத்தில் இருக்கிறது.
இந்த சரணாலயத்தின் உயரம் 500 மீட்டரிலிருந்து 3,250 மீட்டர் வரை அமைந்திருக்கிறது. உலகிலேயே இந்த உயரத்தில் யானைகளை கொண்டிருக்கும் ஒரே இடம் இதுதான். படைச்சிறுத்தை, பளிங்கு பூனை, ஆசிய பொன்னிற பூனை மற்றும் சிறுத்தைப் பூனை போன்ற விலங்குகளும் இங்கு இருக்கின்றன. தொப்பித்தலை குரங்கு, சிவப்பு பாண்டா, ஆசிய கருங்கரடி, குல்லாய் குரங்கு, காடெருது போன்ற அருகி வரும் விலங்கினங்களும் இங்கு இருக்கின்றன.
20 வயதுகளில் இருக்கும் ஐதி மற்றும் தெமா தமாங்க் ஆகியோர்தான் ராமலிங்க கிராமத்திலிருந்து பறவைகளை பற்றி ஆராயவும் ஆவணப்படுத்தவும் வரும் முதல் பெண்கள். மாநிலத்திலிருந்தே வரும் முதல் பெண்களாகக் கூட அவர்கள் இருக்கலாம். அவர்களுக்கு வேலை கிடைத்ததும் மூத்தவர்கள் தயங்கினர். “அவர்களை காடுகளுக்கு ஏன் கொண்டு செல்கிறீர்கள்? இவை பெண்களுக்கான வேலைகள் அல்ல,” என்றனர்.
“அதெல்லாம் அந்தக் காலம். இன்று உலகம் வெகுவாக மாறிவிட்டது எனக் கூறினேன்,” என்கிறார் மிகா. அவரும் ராமலிங்கம் கிராமத்தை சேர்ந்தவர்தான். பறவைகளை ஆவணப்படுத்தும் அனுபவத்தை இங்கல்ல, இமாச்சலப் பிரதேசத்திலும் உத்தரகாண்ட் காடுகளிலும் பெற்றவர். “ஆண்களும் பெண்களும் அந்த வேலையை செய்ய முடியும்.”
ஐதி போன்ற கள ஊழியர் மாதத்துக்கு 18,000 ரூபாய் வருமானம் ஈட்டுகிறார். குடும்ப உறுப்பினர்களில் பெரும்பாலானோர் குத்தகை விவசாயிகளாக இருக்கின்றனர். அவரின் வருமானம் குடும்பத்துக்கும் உதவியாக இருக்கிறது.
கடும் வேலையாக இருந்தாலும் சிரித்தபடி ஐதி சொல்கிறார், “பறவைகளின் ஆங்கிலப் பெயர்களை கற்றுக் கொள்வதுதான் கடினமான வேலை,” என.
*****
19ம் நூற்றாண்டில் அகழ்வு செய்பவர்கள் நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரியும் முன், அங்கிருக்கக் கூடிய தீவிர ஆபத்துகளை கண்டறிய கேனரி பறவைகளை பயன்படுத்துவார்கள். இந்த சிறுபறவைகளுக்கு கார்பன் மோனாக்ஸைடு வாயு ஒப்புக் கொள்ளாது. அந்த வாயு மேலே பட்டால் இறந்துவிடும். ஆபத்தின் தொடக்க நிலையை குறிக்க ‘நிலக்கரி சுரங்கத்தில் கேனரி பறவை’ என்கிற சொற்றொடர் இதனால்தான் பிரபலமானது.
ஒப்பீட்டளவில் அதிகம் இடம்பெயரும் குழுவாக இருக்கும் பறவைகள், காலநிலை மாற்றம் வெப்பமண்டல மலைகளின் உயிர்ச்சூழலை எப்படி பாதிக்கிறது என்பதை எடுத்துக் காட்ட உதவும். எனவே போங்பு குழுவின் பணி முக்கியமானது.
சரணாலயத்தில் 600 பறவையினங்கள் இருக்கின்றன. “இங்கு நீங்கள் நூற்றுக்கணக்கான ஐரிடிசண்ட் பறவைகளை காண முடியும். 10 கிராம் எடை அல்லது ஒரு தேக்கரண்டி சர்க்கரையின் எடைக்கும் குறைவான எடையை கொண்டவை,” என்கிறார் உமேஷ். அவற்றை தாண்டி, இன்னும் சில அரிய பறவைகள் இந்த காடுகளை இருப்பிடமாகக் கொண்டிருக்கின்றன. கருஞ்சிவப்பு தீக்காக்கை, பெருஞ்செம்போத்து கோழியை போன்ற சாம்பல் வயிற்றுக் கோழி, நீலச்சாம்பல் நிற பசையெடுப்பான் குருவி போன்றவைகளும் அவற்றைக் காட்டிலும் பிரபலமான பூகுன் பாடும்பறவையும் இங்கு இருக்கின்றன.
இந்த சரணாலயத்தில் காணப்படும் பறவைகள், பல நாடுகளிலிருந்து பறவையியலாளர்கள் கடும் வானிலை, சிக்கலான நிலப்பரப்பு போன்றவற்றை கூட பொருட்படுத்தாமல் இங்கு வர வைக்கிறது.
ஆய்வுக் குழு, காட்டின் அடர்பகுதிக்குள் பணிபுரிகிறது. மின்சாரம் இல்லாத ஓரறை வசிப்பிடத்தில் நீரோ நல்ல கூரையோ இன்றி வசிக்கின்றனர். முகாமை நிர்வகிக்க, ஒவ்வொரு உறுப்பினருக்கும் உணவு தயாரிப்பு தொடங்கி, பாத்திரம் கழுவுதல், பக்கத்து ஓடையிலிருந்து நீரெடுத்து வருதல் போன்ற வேலைகளை போங்பு ப்ளாங்சா கொடுக்கிறார். உள்ளூர்வாசிகள் இரண்டு மணி நேரத் தொலைவில் இருக்கும் ராமலிங்கம் கிராமத்திலிருந்து வருகின்றனர். உமேஷும் ஆய்வாளர்களும் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து வருகின்றனர்.
இன்று ஐதி சமைக்கும் நாள். விறகடுப்பின் மீது பெரிய பானையில் வைக்கப்பட்டிருக்கும் பருப்பை அவர் கிண்டுகிறார். “இந்த விலங்குகளை புரிந்து கொள்ள என் வேலை பயன்படுவது எனக்கு சந்தோஷம்.” இரண்டு வருடங்களாக இங்கு அவர் பணிபுரிகிறார்.
குழுவினர் ஒவ்வொரு இரவும் ஒரு விளையாட்டு விளையாடுகின்றனர். பல வருடங்களாக ஒவ்வொருவரும் பிடித்த பறவைகளின் அடிப்படையில் அடுத்த நாள் என்ன பறவையை ஒவ்வொருவரும் பிடிப்பார்கள் என குறிப்பிட்டு பந்தயம் கட்டுகின்றனர். அனைவரும் விளையாட்டில் பங்கேற்கின்றனர். தார்ப்பாய் கூரையை மழை அடித்துக் கொண்டிருக்க விளக்குகள் கொண்ட தலைக்கவசங்களை அணிந்து கொண்டு விளையாடுகின்றனர்.
“நாளை காலையில் எந்த பறவை முதலில் வலையில் சிக்கும்?” ஐதி கேட்கிறார்.
“பொன்னிற மார்பு கொண்ட ஃபுல்வெட்டா என நினைக்கிறேன்,” என்கிறார் அவர் உறுதியாக.
“வெள்ளைக்கண் கதிர்க்குருவி,” என வேகமாக மிகா சொல்கிறார். தம்பர் திடமான “இல்லை” சொல்லி அவரை மறுக்கிறார். “மஞ்சள் கழுத்து ஃபுல்வெட்டா,” என்கிறார்.
முதன்முதலாக உமேஷால் பணிக்கு சேர்க்கப்பட்டதால் மிகாவும் தம்பரும் அதிக அனுபவம் நிறைந்தவர்கள். போங்க்பு முகாமில் அவர்களின் இருபது வயதுகளிலேயே சேர்ந்து விட்டனர். இருவரும் ராமலிங்க கிராமத்திலிருக்கும் உள்ளூர் அரசாங்கப் பள்ள்யில் படித்தனர். தம்பர் 11ம் வகுப்பு வரை படித்தார். ஆனால் மிகா 5ம் வகுப்புடன் படிப்பை இடைநிறுத்தினார். “படிப்பதை பற்றி பெரிதாக நான் பொருட்படுத்திக் கொள்ளவில்லை,” என்கிறார் அவர் வருத்தமாக.
பறவைகளை பிடிப்பதும் முக்கியமான தரவுகளை பதிவு செய்வதும் காலையில் செய்வது நல்லது என்பதால் அவர்கள் வேகமாக உறங்க சென்றுவிட்டனர். “கணக்கெடுக்கப்படும் அளவை பொறுத்து நாங்கள் அதிகாலை 3.30 மணிக்கு கூட எழுவோம்,” என்கிறார் கலிங் தங்கென். IISc-ன் 27 வயது ஆய்வறிஞரான அவர், பறவைகளின் அழுத்த உடலியல் படிக்கிறார். விடியற்காலை வெளிச்சத்தில் அவரும் கணக்கெடுக்க சீக்கிரமே சென்றுவிடுவார்.
*****
கிழக்கு இமயமலையின் இப்பகுதி தூரமாகவும் உயரமாகவும் இருந்தாலும் இங்கிருக்கும் காடுகள் மரம் வெட்டப்படுவது போன்ற சூழல் சீர்கேடுகளால் அழுத்தம் பெற்று வருகிறது. முப்பது வருடங்களுக்கு முன்பே உச்சநீதிமன்றம் மரம் வெட்டுவதை தடை செய்துவிட்டது. எனினும் சூழல் சமநிலையில் பாதிப்பு ஏற்பட்டுவிட்டதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
“மரங்கள் வெட்டப்பட்ட காடுகள் காலநிலை மாற்ற விளைவுகளை அதிகப்படுத்துகிறது. வெயில் நேராக உள்ளிறங்குகிறது. காடுகளை வெட்டினால், நீங்கள் ஆட்டத்தை மாற்றுகிறீர்கள்,” என்கிறார் ஆய்வாளரான காலிங். வெட்டப்படும் காடுகளால் 6 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர்கிறது.
“வெப்பம் அதிகமாக இருப்பதால், பறவைகள் அதிகமாக நிழலில் நேரம் கழிக்கின்றன. உண்ண குறைவான நேரம் எடுத்துக் கொள்கின்றன. எனவே உடல்நிலை, உயிர் வாழுதல் மற்றும் ஆயுள் ஆகியவை பாதிப்படைகிறது. அவை விரும்பும் உணவு வெட்டப்படும் காடுகளில் குறைவாக இருப்பதும் முக்கிய காரணமாகிறது,” என்கிறார் காலிங். காலநிலை மாற்றத்தால் பறவைகள் அனுபவிக்கும் அழுத்தத்தை கணிக்க, கழிவுகளில் இருக்கும் ரத்தம், சிறகடிக்கும் கால அளவு மற்றும் எடை ஆகியவற்றின் தரவுகளை ஆய்வு செய்கிறார்.
“வெள்ளைவால் ராபின்கள், உண்மையான பூச்சிகள் என நாம் அழைக்கும் கம்பளிப்பூச்சிகளை உண்ணும். ஆனால் அவை இந்த வகையான (வெட்டப்பட்ட) காடுகளில் கடும் வீழ்ச்சியை சந்தித்திருக்கின்றன,” என்கிறார் உமேஷ். வெள்ளைவால் ராபின்களின் எண்ணிக்கை குறைந்ததை, மரங்கள் வெட்டப்பட்டதன் விளைவுடன் பொருத்திக் கொள்ளலாம். “அது பறவைக்கான நேரடி உடலியல் பாதிப்பை, அதிக வெப்பத்தை ஏற்படுத்தி கொடுக்கும்.”
இமயமலையின் செடிகளும் கூட வெப்பநிலை காரணமாக மேல்பரப்பு நோக்கி நகரத் தொடங்கி விட்டது. இந்த நகர்வை தொடர்ந்து பறவைகளும் அப்பகுதிகளுக்கு நகர்வதாக நம்பப்படுகிறது. "1,000 - 2,000 மீட்டர் உயரத்தில் காணப்பட்டு உயிர்கள் எல்லாம் இப்போது 1,200-2,200 மீட்டர் உயரத்தில் இருக்கின்றன," என்கிறார் உமேஷ். அதிக உயரங்களுக்கு பறவைகள் இடம்பெயரும் போக்கு, பப்புவா நியு கினியா மற்றும் அண்டெஸ் போன்ற வெப்பமண்டல பகுதிகளிலும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆனால் அறிவியலாளர்களுக்கு ஒரு கவலை இருக்கிறது. உயிர்கள் உயரமான இடங்களை தேடி செல்லத் தொடங்குகையில், மலை உச்சிகளுக்கு அவை போகும் ஆபத்து இருக்கிறது. அப்படி செல்கையில், வசிக்க இடம் குறைந்துபோய், அதற்கு மேலும் உயர முடியாமல் அவை அருகிப் போய் விடும்.
ஈகிள்நெஸ்ட்டில் வெப்பமண்டல பசுமைக் காடுகள் குறைந்த மட்டங்களில் இருக்கின்றன. ஓரளவுக்கு பெரிய இலைகளை கொண்ட மரங்கள் நிறைந்த காடுகள் மத்தியிலும் ஊசியிலை மரங்களும் பெரிய மலர்களை கொண்ட மரங்களும் மலை உச்சிகளில் இருக்கின்றன. இவை எல்லாவற்றினூடாகவும்,” காலநிலை தொடர்பு நமக்கு தேவை. ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு உயிர்கள் நகர்ந்து செல்லும் வாய்ப்பு இருக்க வேண்டும்,” என்கிறார் பயிற்சி பெற்ற மருத்துவரான உமேஷ். பறவைகளின்பால் கொண்ட நேசத்தால் அவர் பணியை மாற்றிக் கொண்டார்.
”மலைகளுக்கு நடுவே நகரங்களோ விவசாயமோ இருந்தால், அது நடக்காது,” என்கிறார் அவர். நீண்ட உயரத்துக்கு செல்லக் கூடிய பெரும் பாதைகள் நமக்கு வேண்டும். அப்போதுதான் இந்த உயிர்களை பாதுகாக்க முடியும்,” என்கிறார் அவர்.
*****
மிகா, தம்பர், ஐதி மற்றும் தெமா போன்ற உள்ளூர் களப் பணியாளர்கள் இந்த ஆய்வுக்கு முக்கியமானவர்கள். அவர்கள் முக்கியமான தரவுகளை சேகரிக்கின்றனர். பல ஆய்வுகளில் இணை ஆய்வாளராக குறிப்பிடப்படுகின்றனர்.
களப்பணியாளர்களுக்கு வலைகள் கொடுக்கப்படும். பறவைகள் வசிக்கும் பகுதியில் அடர்ந்த பகுதியில் இரண்டு கம்பங்களுக்கு இடையே, பறவைகளுக்கு தெரியா வண்ணம் குறுக்கே வலைகளை கட்டி அவர்கள் பறவைகளை பிடிப்பார்கள்.
“எங்கள் ஒவ்வொருவருக்கும் 8-10 வலைகள் கொடுக்கப்படும்,” என்கிறார் 28 வயது தம்பர். பசுமையான சரிவில் இறங்கி அவரது வலை ஒன்றை நோக்கி வருகிறார். அங்கு வந்ததும் வேகமாகவும் எச்சரிக்கையாகவும் வலைகளில் சிக்கியிருக்கும் சிறு பறவைகளை பிரித்து எடுக்கிறார். பச்சை பருத்தி துணிப்பைகளில் வைக்கிறார்.
15 நிமிடங்களுக்கு மேல் பறவைகள் வலைகளில் வைக்கப்படுவதில்லை. லேசான மழைக்கான சாத்தியம் இருந்தாலும் கூட, குழு உறுப்பினர்கள் உடனே அவரவர் வலைக்கு சென்று பறவைகளை உடனடியாக விடுவித்து, அழுத்தத்தை குறைப்பார்கள்.
பறவையின் மார்பில் லேசாக பிடிக்கப்படும் பிடி, பறவையை பையிலிருந்து விடுவிக்கும். கொஞ்சம் அழுத்தம் கூடினாலும் சிறு உயிருக்கு பாதிப்பு ஏற்படும் என்கிற எச்சரிக்கை வேண்டும். பிறகு பறவைகள் எடை பார்க்கப்பட்டு, அளவு பார்க்கப்பட்டு அடையாளம் வைக்கப்படும்.
“இந்த பணியை அலட்சியமாக நான் செய்வதில்லை,” என்கிறார் தெமா. “எனக்கு பறவைகள் பிடிக்கும். உலகின் பல பகுதிகளிலிருந்து மக்கள் இங்கு வருகின்றனர். பைனாகுலர்களின் வழியாக பறவைகளை தூரத்திலிருந்து பார்ப்பார்கள். நான் அவற்றை பிடிக்க முடிகிறது.”
10ம் வகுப்போடு பள்ளியை நிறுத்திய ஐதி சொல்கையில், “2021ம் ஆண்டில் இப்பணி செய்யவென இக்குழுவில் சேராமல் இருந்திருந்தால், என் குடும்பத்துடன் குத்தகை விவசாய நிலத்தில் வேலை பார்த்திருந்திருப்பேன்.” தெமா மற்றும் ஐதி போன்றோர் மிகாவின் பணியில் ஊக்கம் பெற்றவர்கள். வன பாதுகாப்புக்கு பறவைகளின் வழியாக அவர்கள் ஈடுபடுவதால், வேட்டைகளுக்கு எதிராகவும் அவர்களது பணி இருக்கிறது.
பறவைகளின் வழியாக அவர்கள் ஈடுபடும் வன பாதுகாப்பு பணியால் வேட்டை மரபுக்கும் சவால் விடுக்கப்படுகிறது.”சிறுவர்கள் உண்டிவில் கொண்டு பறவைகளை அடிக்க பார்ப்பார்கள். பள்ளி முடிந்தபிறகு அவர்கள் காடுகளுக்குள் சென்று பொழுது போக்காக இந்த வேலையை செய்வார்கள்.” ஆனால் உமேஷால் மிகா இந்த பறவைகளை ஆவணப்படுத்தும் வேலைக்கு அமர்த்தப்பட்ட பிறகு, ராமலிங்கம் கிராமத்து குழந்தைகளுக்கு காடுகள் மற்றும் அதில் இருக்கும் வன உயிரின் புகைப்படங்களை அவர் காட்ட முடிந்தது. “என் இளம் உறவினர்களும் நண்பர்களும் வேட்டையையும் பாதுகாப்பையும் வேறு விதங்களில் பார்க்கத் தொடங்கி விட்டனர்,” என்கிறார் அவர்.
மனித GPS என உடன் பணிபுரிபவர்களால் அழைக்கப்படும் அளவுக்கு ஈகிள்நெஸ்ட்டின் எந்தப் பகுதிக்கும் பயணிக்கும் திறன் பெற்ற மிகா சொல்கையில், “இளம்வயதில் நான் நகரத்தில் வாழவே விரும்பியிருக்கிறேன். ஒரு புதிய பறவையை பார்க்க விரும்பும் பறவையியலாளரின் ஆர்வத்தை போன்றது அது. ஆனால் இந்தியாவின் பிற பகுதிகளுக்கு பயணித்த பிறகு, அருணாசலப் பிரதேச காடுகளுக்குதான் திரும்ப நான் விரும்பினேன்,” என்கிறார்.
பள்ளத்தாக்குகளில் இருக்கும் வலைகளை அடைந்ததும் அவர் சொல்கிறார், “இங்கு எத்தனை தடவை நான் வந்தாலும் காட்டின் மீதுதான் ஆர்வம் கொண்டிருக்கிறேன்,” என.
உள்ளூர் மக்கள் காலநிலை மாற்றத்தை தணிப்பதற்காக எடுக்கும் முயற்சிகளை விரைவில் வெளிவரவிருக்கும் 2ம் பகுதி விரைவில் விளக்கும்
தமிழில்: ராஜசங்கீதன்