சிறிய பொம்மை குதிரைகள், யானைகள் என எல்லா பொம்மைகளையும் வேகமாகக் கட்டுகிறார் அஷோக் பட். பொம்மலாட்டத்திற்கு பயன்படுத்திய வெள்ளைத் துணியைக் கொண்டு அவற்றை கட்டுகிறார். தெற்கு டெல்லியில் அரசு நடத்தும் தில்லி சந்தைக்கு வெளியே காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தியதால் மற்ற தெருவோரக் கடைக்காரர்களைப் போல அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் அவரும் வேகமாக கிளம்புகிறார்.

தில்லி சந்தை என்பது கைவினைஞர்கள் தங்கள் பொருட்களைக் காட்சிப்படுத்த உள்ளூர் நகராட்சியால் வழங்கப்படும் அரை-திறந்தவெளி. கிளப்பின் சார்பில் குறுகிய காலத்திற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு கடை போட அனுமதிப்பதாக சொல்கிறார் அஷோக். ஆனால் ஒதுக்கப்படும் இடத்திற்காக பிற கைவினைஞர்களைப் போன்று அஷோக்கும் தனது கைவினைப் பொருட்களுடன் வரிசையில் வாய்ப்பிற்கு காத்திருக்க வேண்டும். இது போன்றவர்களை ‘சட்டவிரோதமான’ வியாபாரிகள் என உள்ளூர் காவல்துறையினர் விரட்டுகின்றனர்.

“தில்லி சந்தைக்கு வெளியே இப்படி நடப்பது ஒன்றும் புதிதல்ல,” எனும் அந்த 40 வயதுக்காரர், “இங்கு நான் கட்டாயம் வியாபாரம் [வருமானத்திற்கு] செய்ய வேண்டும்.” காவல்துறையினர் திரும்பியதும், சந்தை நுழைவாயிலில் ஓரிடத்திற்கு திரும்புகிறார் அஷோக். அவர் மீண்டும் நடைபாதையில் வெள்ளை துணியை விரித்து மனைவியின்(பெயர் வெளியிட அவர் விரும்பவில்லை) உதவியோடு கடையை அமைக்கிறார். கண்கவர் சிவப்பு, ஆரஞ்சு நிற பந்தேஜ் அச்சுப் போட்ட ஆடைகள் அணிந்த பொம்மைகளை நேர்த்தியாக அவர்கள் அடுக்கி வைத்தபடி அன்றைய நாளை மீண்டும் தொடங்குகின்றனர்.

*****

“கத்புத்லி காலனிக்கு உலகெங்கிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.”

“இங்கு வேலையில்லாத நாளே கிடையாது,” என்கிறார் டெல்லியைச் சேர்ந்த வயது 20-களில் உள்ள சன்னி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தலைநகரின் அண்டைப் பகுதியில் எல்லா நேரமும் பொம்மலாட்ட நிகழ்ச்சி நடந்ததை பார்த்தபடி வளர்ந்தது அவருக்கு நினைவில் உள்ளது. இப்பகுதியின் பரபரப்பான சூழலால் ஈர்க்கப்பட்ட அவரும் இக்கலையை கற்றார். “மிக தொலைவிலிருந்து இருந்து நிகழ்ச்சிகளை காண வரும் மக்கள் உடனடியாக பணம் கொடுத்துவிடுவார்கள்,” என்கிறார்.

Chamanlal Bhat (left), Ashok Bhat and his wife (right) have made puppets and performed shows with them across the country
PHOTO • Himanshu Pargai
Chamanlal Bhat (left), Ashok Bhat and his wife (right) have made puppets and performed shows with them across the country
PHOTO • Himanshu Pargai

சமன்லால் பட் (இடது), அஷோக் பட், அவரது மனைவி (வலது) ஆகியோர் பொம்மைகள் செய்து நாடெங்கும் நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்

1970-களின் தொடக்கத்தில் மேற்கு டெல்லியின் கத்புத்லி காலனிக்கு தனது குடும்பத்துடன் குடிபெயர்ந்தவர் வயது 60களில் உள்ள கைவினைஞர் சமன்லால் பட். ஷாதிபூரில் இருக்கும் இப்பகுதி எவ்வாறு மெல்ல பொம்மை தயாரிப்பாளர்களுக்கும், கலைஞர்களுக்கும் மையமாக மாறியது என்பதை அவர் நினைவுகூருகிறார். அவரைப் போன்று பல கலைஞர்கள் ராஜஸ்தானிலிருந்து அங்கு புலம் பெயர்ந்தவர்கள்.

பொம்மைகள் தயாரிப்பது, பொம்மலாட்டம் நடத்துவது போன்ற திறமைகளை அஷோக் தனது தந்தையிடமிருந்து கற்றுள்ளார். பரம்பரையாக இக்கலையை தொடர்வதாகவும் அவர் சொல்கிறார். ராஜஸ்தானி நாட்டுப்புற கதைகளின் அடிப்படையில் பொம்மலாட்ட காட்சிகளை அவர் உருவாக்குகிறார். வாடிக்கையாளர்களின் கோரிக்கைக்கு ஏற்பவும் சில கதைகளின் அடிப்படையிலும் அவர் நிகழ்ச்சி நடத்துகிறார். பொம்மைகளை செய்து, காட்சிகளுக்கு கதைகளை எழுதி அவற்றை நிகழ்த்த, “உடலுழைப்பு மட்டுமல்ல, சிந்தனையும் தேவைப்படுகிறது,” என அவர் குறிப்பிடுகிறார்.

இக்கைவினையை அவர் விளக்கி பேசுகையில், “பொம்மைகளை தயாரிப்பதற்கு அதிக நேரம் ஆகும். முதலில் மரச்சட்டகங்களை தயாரித்து பல நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும், வழுவழுப்பாக்கிவிட்டு வண்ணம் பூச வேண்டும்.”

“மர பொம்மையின் சட்டகத்தில் நான்கு அல்லது ஐந்து முறை வண்ணம் பூச வேண்டும். பிறகு ஊசி நூலை கையில் எடுக்க வேண்டும்,” என்கிறார்.  பொம்மையின் ஒவ்வொரு கூறையும் வெவ்வேறு கருவிகள் கொண்டு வடிவமைக்க பல ஆண்டு பயிற்சி இருக்க வேண்டும். “நாங்கள் பொம்மைகளுக்கு அணிவிக்க ஆடைகளும் தைக்கிறோம். அவற்றின் மீது ஜரிகை வேலைப்பாடுகளை செய்து கம்பி கொண்டு இணைத்து ஆட வைக்கிறோம்.”

“முன்பெல்லாம் மேலாக்கள் [திருவிழாக்கள்], திருமணங்கள் போன்ற நிகழ்வுகளில் நாங்கள் நிகழ்ச்சி நடத்துவோம்,” என அஷோக் நினைவுகூருகிறார். “எங்கள் வேலையை நேசித்து இப்போதும் அழைப்பவர்கள் உள்ளனர், ஆனால் அவர்கள் மிக குறைவே.”

Puppets made by Ashok and his family for sale outside Dilli Haat in New Delhi
PHOTO • Himanshu Pargai

புதுடெல்லியின் தில்லி சந்தைக்கு வெளியே அஷோக் மற்றும் குடும்பத்தினர் செய்த பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன

பொம்மைகளை விற்று வரும் வருவாயில்தான் இத்தம்பதி பள்ளிச் செல்லும் இரு பிள்ளைகளையும் வளர்த்து வருகின்றனர். “கத்புத்லி கலை என்றும் பசுமையானது. தந்தை எனக்கு கற்பித்ததை போல என் பிள்ளைகளுக்கு நான் கற்றுத் தருகிறேன்,” என அவர் புன்னகைத்தபடி சொல்கிறார்.

*****

அனந்த் பர்பாத் தொழிற்பேட்டையில் தற்காலிக முகாமில் அமர்ந்திருக்கும் வயது 20களில் உள்ள சன்னி, குடியிருப்பு பகுதியை மாற்றியதால்தான் பொம்மலாட்டகாரர்கள் வாய்ப்புகளை இழந்ததாக குற்றஞ்சாட்டுகிறார்.

அவர் மேற்கு டெல்லியின் ஷாதிபூரில் கத்புத்லி அமைந்திருந்தது என்கிறார். 2017ஆம் ஆண்டு டெல்லி வளர்ச்சிக் கழகத்தின் (DDA) ‘குடிசைவாழ் மக்களின் மறுவாழ்வு திட்டத்தின்’ கீழ் அங்கிருந்து இந்த முகாமிற்கு மாற்றப்பட்டோம்.  ‘மேம்படுத்தப்பட்ட வீடுகள்’ எனும் திட்டத்தின் கீழ் அவர்களின் வீடுகளை கட்டமைத்து மீண்டும் குடியமர்த்த DDA திட்டமிட்டது. ஆறாண்டுகள் ஆகியும் பொம்மலாட்டக்காரர்கள் ‘தற்காலிக முகாமில்’ தான் உள்ளனர்.

ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த தற்காலிக முகாம் பொம்மலாட்ட கைவினைஞர்கள், கலைஞர்களின் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் மோசமாக பாதித்துவிட்டதாக அவர் நம்புகிறார்.

“முன்பு எங்கள் காலனி பிரதான சாலையில் இருந்தது. எளிதில் வந்துவிட முடியும்,” எனும் அவர், “தற்காலிக முகாம் பற்றி யாருக்கும் தெரியாது, யாரும் இங்கு வர விரும்பவில்லை. டாக்சி ஓட்டுநர்கள் கூட அனந்த் பர்பாத் பகுதியை [பெருமையை] அறிந்து, பயணத்திற்கு அழைத்தால் வருவதில்லை.”

சன்னி மேலும் கூறுகையில், “முகாமிற்கு வெளியே முறையான சாலை வசதி கிடையாது. இங்கு நடப்பதே சிரமம். நேரத்திற்கு எங்கும் செல்ல வேண்டி வந்தால், இரண்டு மணி நேரம் முன்பே புறப்பட வேண்டும்.”

Puppet-makers blame the fall in the fortunes of puppet makers to a shift in residence to a transit camp in Anand Parbat Industrial Area. Residents say the area is poorly maintained and they often fall ill
PHOTO • Himanshu Pargai
Puppet-makers blame the fall in the fortunes of puppet makers to a shift in residence to a transit camp in Anand Parbat Industrial Area. Residents say the area is poorly maintained and they often fall ill
PHOTO • Himanshu Pargai

தங்களை இடம் மாற்றி அனந்த் பர்பாத் தொழிற்பேட்டையில் தற்காலிக முகாமில் தங்க வைத்ததே துரதிஷ்டவசத்திற்கு காரணம் என பொம்மலாட்டகாரர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அப்பகுதி மோசமாக பராமரிக்கப்படுவதால் அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்

தகரக்கூரையுடன் கண்ணாடியிழை சுவர்களால் கட்டப்பட்ட தற்காலிக குடியிருப்பில் 2,800 குடும்பங்கள் வசிக்கின்றன. ஒவ்வொரு சந்தின் முடிவிலும் DDA, பொதுக் குளியலறை மற்றும் கழிப்பறை வசதிகளை அளித்துள்ளது என்கிறார் சமன்லால் . ஆனால் அவை பராமரிப்பின்றி, தண்ணீர் வசதி ஏதுமின்றி மோசமாக உள்ளது. “முகாமில் சுகாதாரம், தூய்மைக்கு இடமில்லை. தண்ணீரும் தரமின்றி இருப்பதால் எல்லோரும் நோயுறுகின்றனர். நாங்கள் பெரும்பாலான கைவினைஞர்களை நோய்களில் இழந்துவிட்டோம், ” என்கிறார் அவர்.

பல பொம்மலாட்டக்காரர்களும், கைவினைஞர்களும் பிற தொழில்கள் மற்றும் கலைவடிவங்களை நோக்கி செல்கின்றனர். “இப்போது டோல் வாசிப்பது பிரபலமடைந்து வருகிறது,” என்கிறார் சமன்லால். 29 வயதாகும் மற்றொரு கைவினைஞரான அஜய் பட் சொல்கிறார், டோல் வாசித்து ஒருநாளுக்கு ரூ.20,000 வரை சம்பாதித்துவிடலாம் என. “பொம்மலாட்டங்களை நடத்த நாங்கள் விரும்பவில்லை என்று அர்த்தம் கிடையாது. குடும்பத்தை நடத்த வருவாய் ஈட்ட வேண்டி உள்ளது,” என்கிறார் அவர்.

டெல்லியின் குளிர்கால லேசான வெயில்பொழுதில், வீட்டிற்கு வெளியே அமர்ந்தபடி, தலைநகருக்கு வருவதற்கு முன்பு இருந்த வாழ்க்கையை நினைத்து பார்க்கிறார் சமன்லால். உத்தரப்பிரதேசம், ராஜஸ்தானின் பல்வேறு கிராமங்களில் தனது குடும்பத்துடன் பொம்மலாட்டங்களை நடத்தி குழந்தைப் பருவத்தை அவர் கழித்தார்.

“நிகழ்ச்சி நடத்த ஊர்த்தலைவர் எங்களுக்கு இடமளிப்பார்,” எனும் அவர்,“எல்லோரும் மகிழ்ச்சியுடன் வந்து பார்த்து எங்களை வரவேற்பார்கள்.”

தமிழில்: சவிதா

Student Reporter : Himanshu Pargai

Himanshu Pargai is a final year MA Development student at Azim Premji University, Bengaluru.

Other stories by Himanshu Pargai
Editor : Riya Behl

రియా బెహల్ జెండర్, విద్యా సంబంధిత విషయాలపై రచనలు చేసే ఒక మల్టీమీడియా జర్నలిస్ట్. పీపుల్స్ ఆర్కైవ్ ఆఫ్ రూరల్ ఇండియా (PARI)లో మాజీ సీనియర్ అసిస్టెంట్ ఎడిటర్ అయిన రియా, PARIని తరగతి గదిలోకి తీసుకువెళ్ళడం కోసం విద్యార్థులతోనూ, అధ్యాపకులతోనూ కలిసి పనిచేశారు.

Other stories by Riya Behl
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

Other stories by Savitha