காணொளி: பகுரூபி கலைஞர்கள் பலவிதக் கதாபாத்திரங்களாக உருமாறுகின்றனர்

“வாழ்வதற்கு நாம் பகுருபியைப் பிடித்துக் கொள்ள வேண்டும். விவசாயம் செய்ய எங்களிடம் விவசாய நிலம் எதுவும் இல்லை,” என்கிறார் ராஜு சவுத்ரி. அவரைப் போன்ற பகுருபி கலைஞர்கள், மத மற்றும் புராண பாத்திரங்களைச் செய்யும் கலைஞர்கள் ஆவர்.

பிர்பூம் மாவட்டத்தில் உள்ள பிஷாய்பூர் கிராமத்தைச் சேர்ந்த சௌத்ரி குடும்பம் - பெற்றோர் மற்றும் குழந்தைகள் அனைவரும் பஹுரூபி - பல நாட்கள் பல கிராமங்கள் மற்றும் நகரங்களுக்குச் சென்று நடத்தும் ஒரு தொடர் நிகழ்வுகளை இந்த திரைப்படம் கொண்டுள்ளது.

ஒரு காலத்தில் பிரபலமான இந்த நாட்டுப்புறக் கலை வடிவம் இப்போது மேற்கு வங்கத்தின் கிராமப்புறங்களில் மறைந்து வருகிறது. அதன் பயிற்சியாளர்கள் பல தலைமுறைகளாக தங்கள் செயல்பாட்டிலிருந்து சுமாரான தொகையை சம்பாதித்துள்ளனர். ஆனால் பார்வையாளர்கள் இப்போது மற்ற வகையான பொழுதுபோக்குகளை விரும்புவதால், பகுரூபி குடும்பத்தைச் சேர்ந்த இளைய தலைமுறையினர் தொழிலில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள். பலருக்கு, சவுத்ரிகளைப் போல, வேறு எந்த வழியும் இல்லை.

PHOTO • Ankan Roy & Sagarika Basu

சிதம்பரம் சவுத்ரி தனது தந்தை ராஜுவின் உதவியுடன் ஒரு பகுரூபி கலைஞரின் விரிவான ஒப்பனையை அணிந்துள்ளார்

PHOTO • Ankan Roy & Sagarika Basu

மாலா சவுத்ரி, இந்தக் கலை வடிவத்தை வாழ்வாதாரத்திற்காக இன்னும் நம்பியிருக்கும் ஒரு குடும்பத்தின் நட்சத்திர நடிகை ஆவார்

இங்கு இடம்பெற்றுள்ள படத்தின் ஒரு பதிப்பு அங்கன் ராய் (கேமரா) மற்றும் சகரிகா பாசு (எடிட்டிங்) ஆகியோரால் 2015-ல் சாந்திநிகேதனில் உள்ள விஸ்வ-பாரதி பல்கலைக்கழகத்தில் ஆவணத் திட்டமாக தயாரிக்கப்பட்டது.

தமிழில் : ராஜசங்கீதன்

Ankan Roy & Sagarika Basu

Ankan Roy has a master’s degree in Journalism and Mass Communication from Visva-Bharati University, Santiniketan. Sagarika Basu, a 2016 PARI intern, is also a former student of Visva-Bharati University, Santiniketan. She is now an editorial intern at 24 Ghanta, a Kolkata-based news channel.

Other stories by Ankan Roy & Sagarika Basu
Translator : Rajasangeethan

రాజా సంగీతన్ చెన్నైకి చెందిన రచయిత. ఒక ప్రసిద్ధ తమిళ వార్తా చానల్‌లో పాత్రికేయులుగా పనిచేస్తున్నారు.

Other stories by Rajasangeethan