கே.நாகம்மா, கழிவுநீர் தொட்டியில் இறந்துபோன துப்புரவு தொழிலாளரின் மனைவி. அவரது குழந்தைகள் ஷைலா மற்றும் ஆனந்தி. மூவரும் தங்களைச் சாக்கடைச் சூழலுக்குள் குறுக்கிவிட்ட இந்தச் சமூகத்தை எதிர்த்து நிகழ்த்தும் போராட்டாத்தைப் பற்றிக் கூறுகிறார்கள்.
பாஷா சிங் தற்சார்புள்ள பத்திரிகையாளர், எழுத்தாளர். மலமள்ளும் துப்புரவு தொழிலாளர்கள் குறித்த அவருடைய ‘Adrishya Bharat’ நூல் இந்தியில் (2012) வெளிவந்தது. அதே நூல் ‘Unseen’ என்கிற தலைப்பில் 2014-ல் ஆங்கிலத்தில் பென்குயின் வெளியீடாக வெளிவந்தது. பாஷா சிங்கின் இதழியல் வட இந்தியாவில் விவசாய துயரங்கள், அணு உலைகளின் அரசியல், கள உண்மைகள், தலித், பாலின, சிறுபான்மை உரிமைகள் சார்ந்து செயல்படுகிறது.