ராஜு துமார்கோயின் கன்னங்கள், தர்பி வாசிக்கும்போது உப்புகின்றன. மூங்கில் மற்றும் காய்ந்த சுரைக்காய் கூடு ஆகியவற்றால் செய்யப்பட்ட ஐந்து அடி நீளக் கருவி உடனே உயிர் பெற்று, இசையால் காற்றை நிறைக்கிறது.
மாநில அரசு 27-29 டிசம்பர் 2020-ல், சட்டீஸ்கரின் ராய்ப்பூர் மைதானங்களில் நடத்திய தேசிய பழங்குடி நடன விழாவில் வித்தியாசமான கருவியை கொண்டு வாசிக்கும் இந்த இசைக் கலைஞரை காணாமல் ஒருவர் இருக்க முடியாது.
கா தாகூர் சமூகத்தை சேர்ந்த இசைக் கலைஞரான ராஜு, மகாராஷ்டிராவின் பல்கரிலுள்ள குந்தாச்சா படா கிராமத்தில் தசரா மற்றும் நவராத்திரி போன்ற விழாக்களுக்கு வாசித்ததாக விளக்கினார்.
வாசிக்க: ‘என் தர்பாதான் என் தெய்வம்’
தமிழில் : ராஜசங்கீதன்