நாட்டுக்கே உணவு தானியத்தை அளிக்கும் முக்கியமான மாநிலமான உத்தரப்பிரதேசம் பல ஆண்டுகளாக வறட்சியை பெருமளவில் சந்தித்து வருவதாக உத்தரப்பிதேச மாநிலப் பேரிடர் ஆணையம் ஒப்புக் கொண்டிருக்கிறது. மத்தியப்பிரதேசத்தின் சில பகுதிகளும் வறட்சி பாதிப்புகளை கொண்டிருக்கின்றன. இப்பகுதியின் 51 மாவட்டங்கள் கடந்த 29 வருடங்களாக கடும் வறட்சிகள் பலவற்றை சந்தித்து வருகிறது. இந்த மாநிலங்களின் பெரும்பாலான மக்கள், வாழ்வாதாரத்துக்கு மானாவாரி விவசாயத்தை நம்பியிருக்கின்றனர். எனவே தொடர் வெப்ப அலைகள், சுருங்கி வரும் நிலத்தடி நீர், குறைந்த மழைப்பொழிவு பெரும் அழிவை இம்மாநிலத்தில் தருகிறது.

வறட்சியை அனுபவித்தவர்களுக்கு மட்டும்தான் அதன் கொடுமைகள் தெரியும். நகரவாசிகளுக்கு அது வெறும் செய்திதான். ஆனால் வறட்சியை வருடந்தோறும் எதிர்கொள்ளும் விவசாயிகளுக்கு அது எமன் வருவது போன்ற நிச்சயமான தன்மை. பாறைகளும் மழைகளை எதிர்நோக்கிக் காத்திருக்கும் கண்களும் வறண்டு விரிசல் விட்டு நெருப்பு உமிழும் நிலமும் பசியால் சுருங்கிய வயிறுகளை கொண்ட குழந்தைகளும் கால்நடை எலும்புக் குவியலும் நீர் தேடி அலையும் பெண்களும் அம்மாநிலத்தில் வழக்கமாக தென்படும் காட்சிகள்.

மத்திய இந்திய பீடபூமியின் வறட்சியுடனான என்னுடைய அனுபவத்தில் இக்கவிதை எழுதப்பட்டிருக்கிறது

சையது மெராஜுதீன் இந்தியில் கவிதை பாடுகிறார்

பிரதிஷ்தா பாண்டியா கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பை பாடுகிறார்

सूखा

रोज़ बरसता नैनों का जल
रोज़ उठा सरका देता हल
रूठ गए जब सूखे बादल
क्या जोते क्या बोवे पागल

सागर ताल बला से सूखे
हार न जीते प्यासे सूखे
दान दिया परसाद चढ़ाया
फिर काहे चौमासे सूखे

धूप ताप से बर गई धरती
अबके सूखे मर गई धरती
एक बाल ना एक कनूका
आग लगी परती की परती

भूखी आंखें मोटी मोटी
हाड़ से चिपकी सूखी बोटी
सूखी साखी उंगलियों में
सूखी चमड़ी सूखी रोटी

सूख गई है अमराई भी
सूख गई है अंगनाई भी
तीर सी लगती है छाती में
सूख गई है पुरवाई भी

गड्डे गिर्री डोरी सूखी
गगरी मटकी मोरी सूखी
पनघट पर क्या लेने जाए
इंतज़ार में गोरी सूखी

मावर लाली बिंदिया सूखी
धीरे धीरे निंदिया सूखी
आंचल में पलने वाली फिर
आशा चिंदिया चिंदिया सूखी

सूख चुके सब ज्वारों के तन
सूख चुके सब गायों के थन
काहे का घी कैसा मक्खन
सूख चुके सब हांडी बर्तन

फूलों के परखच्चे सूखे
पके नहीं फल कच्चे सूखे
जो बिरवान नहीं सूखे थे
सूखे अच्छे अच्छे सूखे

जातें, मेले, झांकी सूखी
दीवाली बैसाखी सूखी
चौथ मनी ना होली भीगी
चन्दन रोली राखी सूखी

बस कोयल की कूक न सूखी
घड़ी घड़ी की हूक न सूखी
सूखे चेहरे सूखे पंजर
लेकिन पेट की भूक न सूखी

வறட்சி

இந்த கண்கள் தினமும் நீர் சொரிகிறது
கலப்பையை கை தவறவிடுகிறது.
மேகங்கள் காய்ந்து தினசரி கோபம் கொள்கிறது.
முட்டாளே! இப்போது நீ உழுவாயா அல்லது விதைப்பாயா?

காய்ந்திருக்கின்றன கடல்களும் ஏரிகளும்
காய்ந்து வறண்டு இறந்திருக்கிறது நிலம்.
கடவுளருக்கு வேண்டுதலும் வைக்கிறோம்.
ஆனாலும் மழை இல்லை, ஏன்?

நிலம் காய்கிறது (சூரியனால்)
இனி அது பிழைக்காது, இதுதான் வறட்சி.
சோளமும் இல்லை தானியமும் இல்லை.
பொய்த்து போனது நாசமாய்ப் போன தரிசு நிலம்

பசியால் வெளியில் தள்ளியிருக்கும் கண்கள்
எலும்பின் காய்ந்த சதைகள் வெளியே தெரிகிறது.
காய்ந்த தோல், ஏ வறட்சியே!
காய்ந்த விரல்கள் காய்ந்த ரொட்டிகளை எடு.

காய்ந்த பழத்தோட்டம்
முற்றமும் காய்ந்திருக்கிறது.
ஈட்டி நெஞ்சை துளைத்தது போல்
காற்றும் காய்ந்திருக்கிறது.

காய்ந்திருக்கின்றன நீர்நிலைகளும் பானைகளும்
மரக்கழிகளும் கிணறு இறைக்கும் இடமும் கயிறும்
எங்கு சென்று நீரெடுப்பேன்?
தொடர்ந்து காத்திருக்கிறாள் காயும் நம்பிக்கையோடு.

சிவப்பு கன்னங்கள் முதலில் போனது, பிறகு அவளின் பொட்டு
அடுத்த அவளது தூக்கம், அவளும் வறட்சிக்கு தொலைந்து போனாள்
பிறகு ஒரு நம்பிக்கை அவளின் மடியில் வந்து பூத்தது
அதுவும் பிறகு தொலைந்து துளித்துளியாக

காய்ந்து கிடக்கின்றன மாடுகளின் உடல்கள்
காய்ந்து கிடக்கின்றன அவற்றின் பால்மடிகள்.
எங்கே நெய்? எங்கே வெண்ணெய்?
வீட்டு பாத்திரங்களும் காய்ந்து கிடக்கின்றன.

காலத்துக்கு முன்பே பழங்கள் காய்ந்து விட்டன.
பூவிதழ்கள் காய்ந்து விட்டன.
பசிய மரங்கள் காய்ந்து விட்டன.
நேரமும் காலமும் கூட காய்ந்து விட்டன.

விழாக்கள், பொருட்காட்சிகள், ஊர்வலங்கள்
தீபாவளி, பைசாகி, சைளத், ஹோலி,
சந்தனம் பூசவில்லை, குங்குமம் இடவில்லை
ராக்கியும் இந்த வருடம் காய்ந்துதான் இருக்கிறது.

ஆனால் உயிரோடிருக்கிறது குயிலின் பாட்டு இன்னும்
வேதனையும் துயரமும் நெஞ்சில் உயிரோடிருக்கிறது.
உயிரற்ற முகங்களுக்கும் எலும்புக்கூடுகளுக்கும் பின்னால்,
பசியின் தீ மட்டும் கொளுந்து விட்டு எரிகிறது


தமிழில் : ராஜசங்கீதன்

Syed Merajuddin

சையது மெராஜுதீன் ஒரு கவிஞரும் ஆசிரியரும் ஆவார். மத்தியப்பிரதேச அகாராவில் வசிக்கும் அவர், ஆதர்ஷிலா ஷிக்‌ஷா சமிதி அமைப்பின் செயலாளராகவும் இணை நிறுவனரும் ஆவார். இடம்பெயர்த்தப்பட்டு, குனோ தேசியப் பூங்காவின் விளிம்பில் வாழும் பழங்குடி மற்றும் தலித் சமூகத்தினரின் குழந்தைகளுக்கான உயர்நிலை பள்ளியை அந்த அமைப்பு நடத்துகிறது.

Other stories by Syed Merajuddin
Illustration : Manita Kumari Oraon

மனிதா குமாரி ஒராவோன் ஜார்கண்ட்டை சேர்ந்தவர். சிற்பங்கள் மற்றும் பழங்குடி சமூகங்களின் சமூகப் பண்பாட்டு முக்கியத்துவம் சார்ந்த பிரச்சினைகள் பற்றிய ஓவியங்களும் வரையும் கலைஞர் ஆவார்.

Other stories by Manita Kumari Oraon
Editor : Pratishtha Pandya

பிரதிஷ்தா பாண்டியா பாரியின் மூத்த ஆசிரியர் ஆவார். இலக்கிய எழுத்துப் பிரிவுக்கு அவர் தலைமை தாங்குகிறார். பாரிபாஷா குழுவில் இருக்கும் அவர், குஜராத்தி மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார். கவிதை புத்தகம் பிரசுரித்திருக்கும் பிரதிஷ்தா குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பணியாற்றுகிறார்.

Other stories by Pratishtha Pandya
Translator : Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.

Other stories by Rajasangeethan