நெற்கதிர்கள் பொன்னிறம் தரிக்க பல நாட்களிருக்கும் நிலையில் பசிய நெல் வயலில் நின்று கொண்டு நொரென் ஹசாரிகா பாடுகிறார். 70 வயதாகும் அவர், துள் வாசிக்கும் 82 வயது ஜிதேன் ஹசாரிகா மற்றும் தாள் வாசிக்கும் 60 வயது ராபின் ஹசாரிகா ஆகியோருடன் இருக்கிறார். மூவரும் திதாபார் துணைப்பிரிவின் பலிஜான் கிராமத்தில் வாழும் வறிய விவசாயிகள். இளைஞர்களாக இருந்தபோது திறன் கொண்ட பிகுவாக்களாக (பிகு கலைஞர்களாக) இருந்தவர்கள்.

”தொடர்ந்து நீங்கள் பேசலாம், ரொங்காலியான (வசந்த காலம்) பிகு பற்றிய கதைகளுக்கு முடிவு கிடையாது!”

ரொங்கோலி பிகு பற்றிய பாடலை பாருங்கள்: திக்கோர் கோபி லோகா டோலோங்

அறுவடைக் காலம் (நவம்பர் - டிசம்பர்) நெருங்குகையில் நெற்கதிர் பொன்னிறமாகும். உள்ளூர் களஞ்சியங்கள் மீண்டும் போரா, ஜோஹா மற்றும் அய்ஜுங் (உள்ளூர் அரிசி வகைகள்) ஆகியவற்றால் நிறையும். சுட்டியா சமூகம் கொள்ளும் அறுவடைக் காலத்தின் முழு திருப்தியை பிகு பாடல்களில் கேட்க முடியும். அஸ்ஸாமின் ஜோர்ஹாட் மாவட்டத்தின் இப்பகுதியில் பல தலைமுறைகளுக்கு அப்பாடல்கள் கையளிக்கப்பட்டு தொடர்கின்றன. பழங்குடியினமான சுட்டியா, பெரியளவில் விவசாயம் செய்யும் சமூகம் ஆகும். அஸ்ஸாமின் மேற்கில் வசிக்கிறது.

அஸ்ஸாமிய வார்த்தை துக் என்பதற்கு வெற்றிலை கொத்து, தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றின் அதிக விளைச்சல் என பொருள். பாடல்களில் இடம்பெறும் ‘மொரொமொர் துக் மற்றும் மொரொம் என்றால் அன்பு என அர்த்தம். அன்பின் விளைச்சல். அந்த விவசாய சமூகத்துக்கு அன்பின் அதிக விளைச்சலும் மிகவும் மதிப்பு கொண்டது. இசைஞர்களின் குரல்கள் வயல்களிலிருந்து மேலெழுகிறது.

“என் பாடல் குறையாக இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்”

இக்கலை அழியாமல் இளைஞர்களும் இதை தொடர வேண்டுமென அவர்கள் விரும்புகின்றனர்.

”ஓ ஹுன்மொய்னா,
சூரியன் பயணத்தை தொடங்கத் தயாராகி விட்டது…”

ஓ ஹுன்மொய்னா (இளம்பெண்) பாடலைக் காணுங்கள்

நெல் அறுவடையைப் பற்றிய ஜோபோண்டாய் பிகு பாடலை காணுங்கள்

தமிழில் : ராஜசங்கீதன்

Himanshu Chutia Saikia

இமான்சு சுட்டியா சைக்கியா, மும்பை, டாட்டா சமூக அறிவியல் கல்விக்கழகத்தின் முதுநிலைப் பட்ட மாணவர். மாணவர் செயற்பாட்டாளரான இவர், இசை தயாரிப்பாளர், ஒளிப்படைக்கலைஞரும் ஆவார்.

Other stories by Himanshu Chutia Saikia
Editor : PARI Desk

பாரி டெஸ்க், எங்களின் ஆசிரியப் பணிக்கு மையமாக இருக்கிறது. இக்குழு, நாடு முழுவதும் இருக்கிற செய்தியாளர்கள், ஆய்வாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், பட இயக்குநர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களுடன் இணைந்து இயங்குகிறது. பாரி பதிப்பிக்கும் எழுத்துகள், காணொளி, ஒலி மற்றும் ஆய்வு அறிக்கைகள் ஆகியவற்றை அது மேற்பார்வையிட்டு கையாளுகிறது.

Other stories by PARI Desk
Translator : Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.

Other stories by Rajasangeethan