தசையும், எலும்புமான கட்டுக்கோப்பான உடலோடு இருந்தார் அவர், தொங்கும் ஊளைத்தசை கொஞ்சமும் இல்லாமல். 60 வயதொத்த தோற்றத்தோடு இருக்கும் இந்த உழைப்பாளி, சொற்பக் கூலிக்காக, ஒடிஷாவின் ராயகடா நிலத்தில் கடுமையாக உழைத்துக்கொண்டிருந்தார். 2001-இல், தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் நடைமுறைக்கு வராத நேரத்தில் எடுத்த புகைப்படம் இது. அவருடைய தோரணையும், உழைக்கும்போது வரும் ஒலிச்சந்தமும் அவ்வளவு கவரச் செய்வதாக இருந்தது. எங்களைப் போன்ற பயணிகள் ஓய்வுக்காக நின்றிருந்த இடத்தில், அவரும் அவருடன் பல தொழிலாளர்களும் மரம் நடும் பணிக்காக குழி தோண்டிக்கொண்டிருந்தார்கள்.

தமிழில்: குணவதி

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Other stories by P. Sainath
Translator : Gunavathi

குணவதி, சென்னையில் வாழ்ந்துவரும் பத்திரிக்கையாளர். பெண்கள் முன்னேற்றம், கிராமப்புற பிரச்னைகள் மற்றும் சாதி போன்றவற்றை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Other stories by Gunavathi