‘காலே கனூன் கோ வாபஸ் லோ, வாபஸ் லோ, வாபஸ் லோ’ [‘இருண்ட சட்டங்களைத் திரும்பப் பெறுங்கள், திரும்பப் பெறுங்கள், திரும்பப் பெறுங்கள்!’]. குடியரசு தினத்திற்கு முந்தைய நாள் மாலை தெற்கு மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் இந்த கோஷங்கள் ஒலிக்கின்றன.
சம்யுக்தா ஷெட்கரி கம்கர் மோர்ச்சா ஏற்பாடு செய்த உள்ளிருப்புப் போராட்டத்தின் மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் உள்ளனர். டெல்லியின் எல்லையில் உள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக, நாசிக்கிலிருந்து இரண்டு நாட்களில் சுமார் 180 கிலோமீட்டர் தூரம் அணிவகுத்துச் சென்ற பின்னர் மகாராஷ்டிராவின் 21 மாவட்டங்களில் இருந்து அவர்கள் வந்துள்ளனர்.
இரண்டு மாதங்களுக்கும் மேலாக, பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியின் வாயில்களில் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 2020ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி மத்திய அரசு முதன்முதலில் அவசர சட்டமாக பிறப்பித்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக அவர்கள் போராடி வருகின்றனர், பின்னர் செப்டம்பர் 14 ஆம் தேதி பாராளுமன்றத்தில் வேளாண் மசோதாக்களாக அறிமுகப்படுத்தப்பட்டு, அந்த மாதம் 20ஆம் தேதிக்குள் சட்டங்களாக மாற விரைந்தனர்.
விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 , விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகியவையே விவசாயிகள் எதிர்க்கும் மூன்று சட்டங்கள். 2020 ஜூன் 5 அன்று அவை ஆணைகளாக்கப்பட்டு செப்டம்பர் 14 அன்று பாராளுமன்றத்தில் மசோதாக்களாக தாக்கல் செய்யப்பட்டு எதிர்ப்பையும் மீறி வேகவேகமாகாக அதே மாத 20ம் தேதி சட்டமாக்கப்பட்டிருக்கின்றன. மேலும் அரசியல் சாசனத்தின் 32ம் பிரிவு வழங்கும் குடிமக்களுக்கான சட்டரீதியான பாதுகாப்பு உரிமை யையும் இச்சட்டங்கள் பாதிப்பதாக விமர்சனம் எழுப்பப்படுகிறது.
ஜனவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ஆசாத் மைதானத்தில் நடந்த இந்த இரண்டு நாட்களின் போராட்டக் கூட்டத்தின் படங்கள் இவை:
![](/media/images/02-IMG_7884-RB.width-1440.jpg)
ஒரு விவசாயிகள் குழு ஜனவரி 24 காலையில் அணிவகுத்துச் செல்கிறார்கள், ஏற்கனவே வந்த மற்றவர்கள் சோர்வான பயணத்திற்குப் பிறகு ஓய்வெடுக்கிறார்கள்.
![](/media/images/03-IMG_7882-RB.width-1440.jpg)
அவுரங்காபாத் மாவட்டத்தின் கன்னத் தொகுதியில் உள்ள சிம்னாபூர் கிராமத்தைச் சேர்ந்த பில் ஆதிவாசி விவசாயிகள் அருணாபாய் சோனவனே (இடது) மற்றும் சஷிகலா கெய்க்வாட். 2006 ஆம் ஆண்டு வன உரிமைகள் சட்டத்தின் கீழ் நில உரிமைகளை கோருவதற்கும், சமீபத்திய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் அவர்கள் வந்துள்ளனர். "நம்மில் அதிகமானோர் [போராட] வந்தால் அதிக அழுத்தம் இருக்கும்", என்று அருணாபாய் கூறுகிறார். "அதனால்தான் நாங்கள் இங்கே இருக்கிறோம்."
![](/media/images/04-IMG_7892-RB.width-1440.jpg)
மைதானம் கோஷங்களுடன் எதிரொலிக்கிறது: ‘காலே கனூன் கோ வாபஸ் லோ, வாபஸ் லோ, வாபஸ் லோ’ [‘இந்த கருப்புச் சட்டங்களைத் திரும்பப் பெறுங்கள், திரும்பப் பெறுங்கள், திரும்பப் பெறுங்கள்’].
![](/media/images/05-IMG_7943-RB.width-1440.jpg)
மகாராஷ்டிராவின் நந்தேத், நந்தூர்பார், நாசிக் மற்றும் பால்கர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஜனவரி 24 ஆம் தேதி இரவு ஆசாத் மைதானத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றனர்
![](/media/images/06-IMG_8043-RB.width-1440.jpg)
குளிர்கால மாலை வேளையில் மும்பையில் வெப்பநிலை மிகவும் குறைவாக இருக்கிறது. அப்போது, நாசிக் மாவட்டத்தின் சாண்ட்வாட் தாலுகாவில் உள்ள தோதம்பே கிராமத்தைச் சேர்ந்த மதுராபாய் சம்பத்கோதே (இடது), 70, மற்றும் டங்குபாய் சங்கர் அம்பேத்கர் (65) ஆகியோர் இரவு பொழுதை கழிக்க தயாராகியுள்ளனர்
![](/media/images/07-IMG_8078-RB.width-1440.jpg)
பத்து வயதான அனுஷ்கா ஹட்கே (நீல நிற சால்வையில்), குளிர் எடுக்கிறது. அவர் பால்கர் மாவட்டத்தின் கரிவாலி டார்ஃப் கோஹோஜ் கிராமத்திலிருந்து தனது பாட்டி மனிஷா தன்வாவுடன் (ஆரஞ்சு சால்வையில்) வந்துள்ளார். அவர் வயது 40க்கு மேல் இருக்கும். அனுஷ்காவுக்கு தாய் மட்டுமே இருக்கிறார். - அஸ்மிதா (மஞ்சள் சேலையில்) ஒரு விவசாயத் தொழிலாளி. “எங்களிடம் நிலம் இல்லை. நாங்கள் நாள் முழுவதும் உழைக்கிறோம், ”என்கிறார் மனிஷா
![](/media/images/08-IMG_8071-RB.width-1440.jpg)
பால்கர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் அரிசி மாவு கொண்டு செய்யப்பட்ட பக்ரியை அவர்களுடன் கொண்டு வந்துள்ளனர்
![](/media/images/09-IMG_8127-RB.width-1440.jpg)
ஜனவரி 24ம் தேதி நாள் முழுவதும் போராடியவர்களில் சிலர் தூங்கும்போது, பலரும் இரவில் நெடுந்நேரம் வரை கோஷங்களை எழுப்புகிறார்கள்
![](/media/images/10-IMG_8147-RB.width-1440.jpg)
நாசிக் மாவட்டத்தின் சங்கம்னர் கிராமமான டிண்டோரி தாலுகாவைச் சேர்ந்த விவசாயிகள் குழு மேடையில் நிகழ்ச்சிகளைக் கவனமாகக் கேட்கிறது
![](/media/images/11-Screen-Shot-2021-01-26-at-6.42.05-PM-RB.width-1440.jpg)
நாசிக் மாவட்டத்தின் கங்கமாலுங்கி கிராமத்தைச் சேர்ந்த லக்ஷ்மன் புல்ஹா பசாடே, 65, கலைஞர்களுடன் சேர்ந்து நடனமாடுகிறார்
![](/media/images/12-IMG_8351-RB.width-1440.jpg)
தெற்கு மும்பையில் ஆளுநரின் இல்லமான ராஜ் பவனுக்கு முன்மொழியப்பட்ட ஊர்வலத்திற்கு செல்வதற்கு முன் ஜனவரி 25 மதியம் விவசாயிகள் உரைகளைக் கேட்கிறார்கள்
![](/media/images/13-IMG_8429-RB.width-1440.jpg)
தெற்கு மும்பையில் ஆளுநரின் இல்லமான ராஜ் பவனுக்கு முன்மொழியப்பட்ட அணிவகுப்புக்காக ஜனவரி 25 மதியம் ஆசாத் மைதானத்திலிருந்து ராஜ் பவனுக்கு புறப்பட்டது. (நகர அதிகாரிகளால் அனுமதி வழங்கப்படாததால் அணிவகுப்பு பின்னர் ரத்து செய்யப்பட்டது)
![](/media/images/14-IMG_8424-RB.width-1440.jpg)
தெற்கு மும்பையில் ஆளுநரின் இல்லமான ராஜ் பவனுக்கு முன்மொழியப்பட்ட அணிவகுப்புக்காக ஜனவரி 26 மதியம் ஆசாத் மைதானத்திலிருந்து ராஜ் பவனுக்கு புறப்பட்டது. (நகர அதிகாரிகளால் அனுமதி வழங்கப்படாததால் அணிவகுப்பு பின்னர் ரத்து செய்யப்பட்டது)
![](/media/images/15-IMG_8447-RB.width-1440.jpg)
ஜனவரி 25ம் தேதி அன்று, மாலை 4 மணியளவில், தெற்கு மும்பையில் ஆளுநரின் இல்லமான ராஜ் பவனை நோக்கி அணிவகுத்து விவசாயிகள் நடந்து செல்ல ஆயுதமாகின்றனர். ஆனால், அனுமதி மறுக்கப்படுகிறது. அவர்கள் சுமார் 500 மீட்டர் தூரம் நடந்து, மைதானத்திற்குத் திரும்புகிறார்கள்
தமிழில்: ஷோபனா ரூபகுமார்