இந்த படம் சிறந்த ப்ரமோஷனல் படம் என்ற பிரிவில் 2016ம் ஆண்டு 63வது தேசிய திரைப்பட விருது விழாவில் சில்வர் லோட்டஸ் (ரஜத் கமல்) விருதை பெற்றது.
மத்தியப்பிரதேச ஆற்றை ஒட்டி அமைந்து, வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் அழகிய ஊர்தான் மகேஷ்வர். 18ம் நூற்றாண்டில் இந்தூரை ஆட்சி செய்த அஹில்யாபாய் ஹோல்கர்தான் இங்கு கைத்தறி நெசவை ஊக்குவித்தவர். இரண்டு நூற்றாண்டுகள் கழித்தும் இந்த ஊர் அதன் மஹேஸ்வரி புடவைகளுக்கு பிரபலமாக விளங்கி வருகிறது. 2012 மற்றும் 2015ம் ஆண்டுகளுக்கு இடையில் கைத்தறி துறையில் வளர்ந்து வரும் வேலைவாய்ப்புகளின் காரணமாக 200க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் மகேஷ்வருக்கு புலம்பெயர்ந்தனர். அதில் பலரும் உத்திரபிரதேசத்தில் உள்ள பரபங்கியை சேர்ந்தவர்கள். கடும் வீழ்ச்சி கண்டுகொண்டிருக்கும் ஒரு துறையில் இது வழக்கத்திற்கு மாறானது மற்றும் முரணானது. அது மட்டுமின்றி இந்த நெசவாளர்களுக்கு மத்தியில் கலையை மீட்டெடுக்க முக்கிய பங்காற்றுவது இளைஞர்கள் என்பதும் கூட வழக்கத்திற்கு மாறானது. இந்த வரலாற்று நகரத்தின் நெசவாளர்களுக்கு அந்த இளைஞர்களே உந்து சக்தி.
இந்த காணொளியில், இளம் நெசவாளர்கள் தங்களது வாழ்க்கைகளை கூறியுள்ளார்கள்.
தமிழாக்கம்: சுபாஷ் சந்திர போஸ்