இருட்டில் இருக்கும் சுகாதாரம்
ஜம்மு காஷ்மீரின் பந்திப்பூர் மாவட்டத்திலுள்ள தனி கிராமம் ஒன்றின் கர்ப்பிணிப் பெண்கள் நிலையற்ற மின்சார இணைப்பு மற்றும் மோசமான சுகாதார வசதிகள் ஆகியவற்றால் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். கிராமத்தில் இருக்கும் முதிய மருத்துவச்சிதான் ஒரே நம்பிக்கை
நவம்பர் 17, 2022 | ஜிக்யாசா மிஷ்ரா
புகைமயமாகும் பெண் பீடித் தொழிலாளர்களின் ஆரோக்கியம்
முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ஏழைப் பெண்கள்தான் பீடி சுற்றும் வேலை செய்கின்றனர். கடுமையான உழைப்பைக் கோரும் வேலையில் வருமானம் குறைவுதான். புகையிலையுடன் தொடர்ந்து இருக்க வேண்டிய நிலை அவர்களின் ஆரோக்கியத்தையும் இனவிருத்தியையும் ஆபத்தில் நிறுத்துகிறது
அக்டோபர் 31, 2022 | ஸ்மிதா கடோர்
மாதவிடாய் பெண்களுக்கு வாழ்விடம் இல்லை
உத்தரகாண்டின் உத்தம் சிங் நகர் மாவட்டப் பெண்கள், மாதவிடாய் மற்றும் பிரசவ காலங்களில் தம் மீது திணிக்கப்படும் ஆழமான பாரபட்சம் மற்றும் கஷ்டங்களை குறித்து பேசுகின்றனர்
செப்டம்பர் 19, 2022 | க்ரித்தி அகர்வால்
பொலேரோ காரின் பின்சீட்டில் குழந்தை பெறுதல்
இமாச்சலப் பிரதேசத்தின் கிராமப்புறப் பெண்கள் மருத்துவச் சேவைகள் இல்லாததாலும் சமூக சுகாதார மையங்கள் முழுமையாக செயல்படாததாலும் மகப்பேறு கால சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் பேணுவதில் சவால்களை எதிர்கொள்கின்றனர்
ஆகஸ்ட் 31, 2022 | ஜிக்யாசா மிஷ்ரா
அசுந்தியின் தலித் பெண்கள் படும் வேதனை
ஹவேரி மாவட்டத்தின் இந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்களின் ஆரோக்கியத்தை குறைந்த ஊதியமும் ‘பசி கொடுக்கும் உணவுமுறையும்’ தீவிரமாக பாதிக்கின்றன. கழிவறை இல்லாத காலனி, மாதவிடாயில் சிக்கல்கள் இருக்கும் பெண்களுக்கு பெரும் பிரச்சினையாக இருக்கிறது
ஆகஸ்ட் 18, 2022 | எஸ். செந்தளிர்
‘குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சைக்காக தனியாக நடந்து சென்றேன்’
ஆண்கள் புலம்பெயர் தொழிலாளர்களாக சூரத், மும்பை, டெல்லி போன்ற நகரங்களுக்கு வேலைக்குச் சென்றுவிடுவதால், உதய்பூரில் உள்ள இப்பழங்குடியினப் பெண்கள் சுகாதாரம், ஊட்டச்சத்து, கருத்தடை, குழந்தை பராமரிப்பு என அனைத்திலும் தற்சார்பாக வாழக் கற்றுக் கொண்டுள்ளனர்
ஜூலை 27, 2022 | கவிதா ஐயர்
’இன்னொரு குழந்தைப் பெற்றுக் கொள்ள நான் விரும்பவில்லை’
அதிக குழந்தைகள் பெறாமல் இருப்பதற்கான சுலபமான பாதுகாப்பான வழியைத்தான் சுனிதா தேவி விரும்பினர். ஆனால் காப்பர் டி பலனளிக்காமல் ஒருமுறை அவர் ஆரம்பச் சுகாதார நிலையத்திலிருந்து தனியார் மையத்துக்கும் தில்லி மற்றும் பிகார் அரசு மருத்துவமனைகளுக்கும் அலைந்து கருக்கலைப்பு செய்ய வேண்டியிருந்தது
ஜூலை 12, 2022 | சன்ஸ்கிருதி தல்வார்
திகாரியின் கதைகள் மற்றும் ரகசியங்களைக் கொண்டவர்
கருத்தடை சாதனங்களையும் ஆணுறைகளையும் ஒரு பையில் வைத்திருக்கும் கலாவதி சோனி, அமேதி மாவட்ட திகாரி கிராமப் பெண்களின் நம்பிக்கைக்குரியத் தோழி. அவரின் இயல்பான உரையாடல்கள் இனப்பெருக்க உரிமைகளை அங்கு உயிர்ப்புடன் வைத்திருக்கிறது
ஜூன் 22, 2022 | அனுபா போன்ஸ்லே
என் கருப்பை அகற்றப்பட்ட பிறகுதான் எல்லாமும் தொடங்கியது
பீட் மாவட்டத்தில், கரும்புத் தொழிலாளிகள் அதிக எண்ணிக்கையில் கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய கவலை, மனச்சோர்வு, உடல் உபாதைகள் மற்றும் திருமண உறவுகளில் ஏற்படும் பிரச்சனைகளை பெண்கள் அமைதியாக சமாளிக்கின்றனர்
மார்ச் 25, 2022 | ஜோதி ஷினோலி
‘கருக்கலைந்த விஷயம் பிறருக்கு தெரிய நான் விரும்பவில்லை’
நதி நீரில் உப்புத்தன்மை அதிகம். கோடையில் அதிக வெப்பம். பொதுச் சுகாதாரம் என்பது தொலைதூரக் கனவு. இக்காரணிகள் ஒன்றாகச் சேர்ந்து சுந்தரவனக் காடுகளில் உள்ள பெண்களை உடல்நலப் பிரச்சினைகளில் சிக்க வைத்துள்ளன
மார்ச் 10, 2022 | ஊர்வசி சர்க்கார்
‘எனக்கான மருந்துகளை தரும்போது என்னைத் தடவுகின்றனர்’
மருத்துவப் பணியாளர்களால் சுரண்டப்பட்டு, ரகசியத்தன்மை மீறப்பட்டு, சுகாதார வசதிகள் பாலியல் தொழிலாளர்களுக்கு தலைநகரத்திலேயே எட்டாத உயரத்தில்தான் இருக்கிறது. இந்த தொற்று காலம் அவர்களை மேலும் விளிம்பு நிலைக்கு தள்ளியது
பிப்ரவரி 21, 2022 | ஷாலினி சிங்
நம்பிக்கையால் நேரும் குணப்படுத்துதல்கள்
பாஷ்சிமி சிங்பூம் மாவட்டத்தின் கிராமங்களில் உள்ள உள்கட்டமைப்பு சவால்களுடன் கூடிய மோசமான சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு, 'கிராமப்புற மருத்துவப் பயிற்சியாளர்களை' இன்றியமையாததாக ஆக்குகிறது. ஆரோக்கியம் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயமாக உள்ளது
பிப்ரவரி 3, 2022 | ஜெசிந்தா கெர்கெட்டா
மெல்காட்டின் கடைசி மருத்துவத் தாய்கள்
மகாராஷ்டிராவின் மெல்காட் புலிகள் காப்பக பழங்குடி வசிப்பிடங்களில் ரோபி மற்றும் சார்க்கு போன்ற மருத்துவச்சிகள் பல பத்தாண்டுகளாக வீட்டுப் பிரசவங்கள் கையாண்டிருக்கின்றனர். அவர்களின் பாரம்பரியத்தைத் தொடர தற்போது யாருமில்லை
ஜனவரி 28, 2022 | கவிதா ஐயர்
உ.பியில்: ஆண்களுக்கான கருத்தடைக்கு வாய்ப்பே இல்லை
உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி மாவட்டத்திலுள்ள முசாகர் பெண்களைப் பொறுத்தவரை, அவர்களின் வாழ்க்கையிலிருக்கும் பற்றாக்குறையை மோசமாக்குவது, சுகாதார சேவைகளுக்கான பற்றாக்குறை மட்டுமல்ல, அவர்களின் விருப்பங்களைக் கட்டுப்படுத்தும் வரலாறும் கூட
ஜனவரி 10, 2022 | ஜிக்யாசா மிஷ்ரா
மதுபானியில் பெண் குழந்தைகளுக்கு சான்றிதழ்கள் இல்லை
பிகாரின் மதுபானி மாவட்டத்தைச் சேர்ந்த ஏழைக் குடும்பங்கள் சுகாதாரச் சேவைகளை எட்டுவதற்கு பல தடைகள் உள்ளன. அவர்களுக்கு உதவும் ஒரு சில அமைப்புகளிலும் ஊழல் நிலவுகையில், அவர்கள் உதவியற்றவர்களாகின்றனர்
அக்டோபர் 27, 2021 | ஜிக்யாசா மிஷ்ரா
‘எங்களின் கிராமம் வேறொரு யுகத்தில் வாழ்கிறது’
கிராமப்புற பிரயாக்ராஜ்ஜின் தலித் குக்கிராமங்களில் வசிக்கும் மாதவிடாய்ச் சிறுமிகளின் கதைகளைப் போன்றதுதான் பதின்வயதுகளை கூட எட்டாத சோனு மற்றும் மீனா ஆகியோரின் கதைகளும்
அக்டோபர் 11, 2021 | ப்ரிதி டேவிட்
மூன்று மகள்கள் என்றால் அதன் பிறகு இரண்டு மகன்களாவது வேண்டும்
பீகாரின் கயா மாவட்டத்தில் பல்வேறு பின்னணிகளைக் கொண்ட பெண்கள் தங்களின் வறுமை, போதிய கல்வி இல்லாமை, வாழ்க்கையின் மீது கட்டுப்பாடின்மையுடன், உடல்நலத்தையும் தொடர் அச்சுறுத்தலில் வைத்துக் கொள்வதை நம்முடன் பகிர்ந்து கொள்கின்றனர்
செப்டம்பர் 29, 2021 | ஜிக்யாசா மிஷ்ரா
’வலி நிற்கவே இல்லை’
குழந்தை பெற்ற பிறகு தில்லி மருத்துவமனையிலிருந்து கிளம்பிய போது தனக்கு காப்பர் டி பொருத்தப்பட்டிருப்பதை தீபா அறிந்திருக்கவில்லை. இரண்டு வருடங்கள் கழித்து வலியும் ரத்தக்கசிவும் தொடங்கியபோது, மருத்துவர்களால் கருத்தடை சாதனத்தை கண்டுபிடிக்க முடியவில்லை
செப்டம்பர் 14, 2021 | சன்ஸ்கிருதி தல்வார்
‘ஆண்கள் எங்களை எப்போதும் பார்த்துக் கொண்டிருப்பதை போலுள்ளது’
பூட்டிய பொதுக் கழிப்பறைகள், தூரமான வீடுகள், திரை போட்ட சிறு அறைகள், ரயில் தண்டவாளங்களுக்கு இரவு செல்லுதல் முதலியவை பாட்னாவின் குப்பங்களில் வசிக்கும் புலம்பெயர் தொழிலாளர் குடும்ப பெண்கள் சந்திக்கும் தினசரி இடர்கள்
ஆகஸ்ட் 31, 2021 | கவிதா ஐயர்
குடிநீரில் புற்றுநோய் இருப்பது தெரிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்
பிகாரின் கிராமங்களின் நிலத்தடி நீரில் ஆர்சினிக் தனிமம் இருப்பதால், ப்ரீத்தியின் குடும்பம் போல் பல குடும்பங்கள் ஆண்களையும் பெண்களையும் இழந்திருக்கின்றன. அவருக்கும் கூட மார்பகத்தில் கட்டி இருக்கிறது. இங்கிருக்கும் பெண்கள் சிகிச்சை பெற பெரும் சவால்களை சந்திக்கின்றனர்
ஆகஸ்ட் 31, 2021 | கவிதா ஐயர்
வீட்டிலேயே ஏழு குழந்தை பெற்று 36 வயதில் பாட்டி ஆனவர்
ஷாந்தி மஞ்சி ஏழு குழந்தைகளை முசாகர் கிராமத்தில் பெற்றெடுத்திருக்கிறார். இங்கிருக்கும் சிலர் மட்டுமே சுகாதார வசதிகள் பெறுகின்றனர். பலருக்கு பிரசவத்துக்கு உதவும் சுகாதார மையம் இருப்பது கூட தெரியாது
ஆகஸ்ட் 18, 2021 | கவிதா ஐயர்
’என்னுடைய மகள்களும் என்னை போல் ஆகிவிடக் கூடாது’
பிகாரின் பட்னாவில் இருக்கும் குழந்தை மற்றும் இளம் மணமகள்கள், ஆண் குழந்தை பெறும் வரை குழந்தை பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். அவர்களுக்கு சட்டத்தை விட சமூக சடங்குகளே முக்கியம்
ஜூலை 23, 2021 | ஜிக்யாசா மிஷ்ரா
ஒவ்வொரு மாதமும் தனிமை சிகிச்சைக்கு செல்லும் காடுகொல்லா பெண்கள்
கடவுளின் கோபத்துக்கு பயந்து மாதவிடாய் காலத்திலும் பிரசவத்துக்கு பின்னான காலத்திலும் கர்நாடகாவின் காடுகொல்லா சமூக பெண்கள் மரத்தடிகளிலும் கொட்டகைகளிலும் தனிமையில் இருக்க வேண்டியிருக்கிறது
ஜூலை 5, 2021 | தமன்னா நசீர்
‘நான் திருமணம் செய்துகொள்ளக் கூடிய பெண்ணல்ல’
பீகாரின் முசாஃபர்பூர் மாவட்டம் சதுர்புஜ் ஸ்தான் விபச்சார விடுதியில், நிரந்தர வாடிக்கையாளர்களை மகிழ்வித்து அடிக்கடி கருத்தரிக்கும் பாலியல் தொழிலாளர்கள் கோவிட்-19 பொதுமுடக்கத்தினால் மோசமாக பாதிக்கப்பட்டனர்
ஜூன் 15, 2021 | ஜிக்யாசா மிஷ்ரா
மிருத்யுஞ்சய் குழந்தை எப்படி மல்கங்கிரியில் பிறந்தது?
அரசுக்கும் போராளிகளுக்கும் மோதல்கள் நடக்கும் ஒடிசாவின் உயர்ந்த மலையின் அடர்காடுகளின் நடுவே இருக்கும் மல்கங்கிரியின் பழங்குடி கிராமங்களிலிருந்து சுகாதார நிலையங்களுக்கு செல்ல உடைந்த சாலைகளும் அரிதான படகுச் சேவைகள் மட்டுமே வழிகள்
ஜூன் 4, 2021 | ஜெயந்தி பருடா
பீகாரில்: 'கொரோனாவின் போது நான் திருமணம் செய்து கொண்டேன்'
பீகார் கிராமங்களில், கடந்த ஆண்டு ஊரடங்கின்போது, வீடு திரும்பிய புலம்பெயர்ந்த இளம் ஆண் தொழிலாளர்களுடன் பதின்பருவப் பெண்கள் திருமணம் செய்து வைத்துவிட்டனர். பலர் இப்போது கர்ப்பமாக இருக்கின்றனர், அடுத்து என்ன என்றும் கவலைப்படுகின்றனர்
மே 7, 2021 | கவிதா ஐயர்
மதுபானியில் மறைமுகமாக மாற்றத்தை தேடும் மக்கள்
கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர், பிஹாரின் ஹசான்பூர் கிராமத்தில் பெரும்பாலும் குடும்ப கட்டுப்பாட்டை புறக்கணித்தார்கள். தற்போது பெண்கள் அடிக்கடி சுகாதார தன்னார்வலர்களான சாலா மற்றும் ஷாமா அவர்களை கருத்தடை ஊசிக்காக அணுகிவருகின்றனர். இந்த மாற்றத்தை கொண்டு வந்தது எது?
ஏப்ரல் 13, 2021 | கவிதா ஐயர்
பணிச் சுமையால் சலிப்படையும் பீகாரின் பெண் மருத்துவர்கள்
பீகாரின் கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் பணியாற்றும் மகப்பேறு மருத்துவர்களுக்கு பகல் முழுவதும் பணிச்சுமை, குறைவான மருந்து கையிருப்பு, அடிக்கடி கருவுறும் பெண்கள், கருத்தடைக்கு தயங்கும் பெண்கள் போன்றவற்றைக் கையாள்வது மிகப்பெரிய சவால் நிறைந்த விஷயம்
ஏப்ரல் 7, 2021 | அனுபா போன்ஸ்லே
‘எனக்கு ஒன்பது பெண் குழந்தைகள். பத்தாவது ஒரு ஆண் குழந்தை’
குஜராத்தில் உள்ள தொல்கா தாலுகாவில் வாழும் பார்வாத் மேய்ச்சல் சமூகத்தை சேர்ந்த பெண்கள், ஆண் குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகிறார்கள். குடும்பக் கட்டுப்பாடுக்கான கருத்தடை மற்றும் இனப்பெருக்க உரிமை யாவும் வெறும் வார்த்தைகள் மட்டுமே
ஏப்ரல் 1, 2021 | பிரதிஷ்தா பாண்டியா
‘படித்துக்கொண்டே இருந்தால் யார் கட்டுவார் என கேட்கிறார்?’
பிகாரின் சமஸ்டிப்பூர் மாவட்டத்தில், மகாதலித் சமூகத்தின் பதின்வயது பெண்கள் கல்வியை நிறுத்தி கனவுகளை இழந்து திருமணம் செய்து கொள்ள சமூகரீதியாகவும் உடல்ரீதியாகவும் ஒடுக்குமுறைகளை சந்திக்கின்றனர்
மார்ச் 29, 2021 | அம்ருதா ப்யாட்னல்
'நாங்கள் தூங்கும் இடமும் அலுவலகமும் ஒன்றே'
பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள ஓர் ஆரம்ப சுகாதார மையத்தில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் இடப் பற்றாகுறை மற்றும் போதுமான வசதிகள் இல்லாததால், அலுவலகத்தில், வார்டு படுக்கைகளில், சில சமயங்களில் தரையில்கூட தூங்கும் நிலைக்கு தள்ளப்படுக்கின்றனர்
மார்ச் 26, 2021 | ஜிக்யாசா மிஷ்ரா
கருவில் இறந்த குழந்தைக்கு, மறுநாள் அளிக்கப்பட்ட பிறப்பு சான்றிதழ்
பீகாரின் வைஷாலி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில், அல்ட்ராசவுண்ட் இயந்திரம் சிலந்திகளுக்கு வீடாகியிருந்தது. ஊழியர்கள் பணம் கேட்கின்றனர். அவர்கள் ஒரு குடும்பத்திற்கு அவர்களின் பிறக்காத குழந்தை இறந்துவிட்டதாகக் கூறுகின்றனர் - அது அவர்களை ஒரு தனியார் கிளினிக்கிற்கு பெரும் செலவில் அழைத்துச் செல்கிறது
பிப்ரவரி 22, 2021 | ஜிக்யாசா மிஷ்ரா
சிதைந்துப்போன சுகாதார மையங்கள், உருவாகும் பட்டம் பெறா மருத்துவர்கள்
காட்டு விலங்குகள் அலைந்து திரியும் ஆரம்ப சுகாதார மையத்தில் இருக்கும் குறைவான ஊழியர்கள், மருத்துவமனைகளைப் பற்றிய அச்சங்கள், மோசமான தொலைபேசி இணைப்பு - இவை அனைத்தும் பீகாரின் பராகான் குர்த் கிராமத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு தொடர்ந்து வீட்டிலேயே பிரசவம் நடக்க உறுதி செய்கின்றன
பிப்ரவரி 15, 2021 | அனுபா போன்ஸ்லே மற்றும் விஷ்ணு சிங்
அல்மோராவில் துயரம் - மகப்பேறுக்காக மலைகளை கடக்கும் கர்ப்பிணிகள்
கடந்தாண்டு, உத்ரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தின் ரனோ சிங், மருத்துவமனைக்குச் செல்வதற்கு மலையேறிக்கொண்டிருக்கும் பாதி வழியில் சாலையிலேயே பிரசவித்தார். அங்குள்ள நிலப்பரப்பு மற்றும் செலவுகளாலும் மலையில் குடியிருக்கும் பெரும்பாலானோர் வீடுகளிலேயே பிரசவிக்கச் செய்கின்றனர்
பிப்ரவரி 11, 2021 | ஜிக்யாசா மிஷ்ரா
ஒரு கட்டாயக் கருத்தடையும், அலட்சிய மரணமும்
கடந்தாண்டு விதிகளை பின்பற்றாமலும், வேறு வாய்ப்புகள் குறித்து யோசிக்க நேரம் கொடுக்காமலும், ‘முகாம்’ ஒன்றில் செய்யப்பட்ட கருத்தடை அறுவை சிகிச்சையில் ராஜஸ்தானின் பன்சி கிராமத்தைச் சேர்ந்த பாவ்னா சுதார் உயிரிழந்தார். அவரது கணவர் தினேஷ் இப்போதும் நீதிகேட்டு போராடி வருகிறார்
நவம்பர் 20, 2020 | அனுபா போன்ஸ்லே
ஒன்பதாவது மாதத்திலும் வரும் வாடிக்கையாளர்கள்
நான்கு கருச்சிதைவுகளும் குடிகார கணவனுடனான வாழ்க்கையும் வேலையிழப்பும் ஹனியை பாலியல் தொழிலாளியாக்கி ஐந்தாவது முறை கர்ப்பமுமாக்கி பாலியல் நோய்க்கும் உள்ளாக்கியிருக்கின்றன. ஊரடங்கினால் சம்பாதிக்க முடியவில்லை
அக்டோபர் 15, 2020 | ஜிக்யாசா மிஷ்ரா
'என் மனைவிக்கு எப்படி தொற்று ஏற்பட்டது?'
ராஜஸ்தானின் தெளசா மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதாகும் சுஷிலா தேவிக்கு கருத்தடை செய்து கொண்ட பிறகு தொற்று ஏற்பட்டு மூன்றாண்டுகள் வலியில் கழிந்தன. மருத்துவமனைகளில் நாட்கள் கழிந்த பிறகு கடன்சுமையும் அதிகமானது. இறுதியாக கர்ப்பப்பையும் நீக்கப்பட்டது
செப்டம்பர் 3, 2020 | அனுபா போன்ஸ்லே மற்றும் சன்ஸ்கிருதி தல்வார்
‘என் எலும்புகள் ஓட்டையாகி விட்டதாக மருத்துவர் சொல்கிறார்‘
நீண்டகால உடல் தொந்தரவு, அறுவை சிகிச்சை, கர்ப்பப்பை அகற்றம் ஆகியவற்றிற்குப் பிறகு, புனே மாவட்டம் ஹதாஷி கிராமத்தைச் சேர்ந்த பிபாபாய் லோயாரியின் உடல் வளைந்து, கூன் விழுந்துவிட்டது. இருந்தும் அவர் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட கணவருக்காக விவசாய வேலைகளைச் செய்து வருகிறார்
ஜூலை 2, 2020 | மேதா கலே
'என்னுடைய கருப்பை வெளியே வருகிறது'
இடம் மாறிய கருப்பையை கொண்டிருக்கும் பில் பெண்கள் மகாராஷ்டிராவின் நந்துர்பர் மாவட்டத்தின் மருத்துவ வசதிகள் பெற முடியவில்லை. சாலை கிடையாது. மொபைல் நெட்வொர்க் இல்லை. இடையறாத வேலைகளிலும் துன்புறுத்தும் வலியிலும் அவர்கள் உழலுகிறார்கள்
ஜூன் 17, 2020 | ஜோதி ஷினோலி
மருத்துவர்கள் கருப்பையை நீக்கச் சொன்னார்கள்‘
கட்டாயப்படுத்தி கர்ப்பப்பையை அகற்றுவது என்பது மனவளர்ச்சி குன்றிய பெண்களின் பாலியல், இனப்பெருக்க உரிமைகளை மீறும் செயலாகும். ஆனால் மகாராஷ்டிராவின் வாடி கிராமத்தில், மலன் மோருக்கு அதிர்ஷ்டவசமாக அவரது தாயின் ஆதரவு கிடைத்தது
ஜூன் 09, 2020 | மேதா கலே
12 பிள்ளைகளுக்கு பிறகு தானாகவே நின்றுவிட்டது
ஹரியாணாவின் பிவான் கிராமத்தில் வாழும் மியோ இஸ்லாமியர்களிடம் கலாச்சார காரணிகளால் கருத்தடை, சுகாதார சேவைகள் சென்று சேர்வதில்லை. அப்பெண்கள் குழந்தைகளை பெற்றெடுக்கும் சுழற்சியில் சிக்கியுள்ளனர்
மே 20, 2020 | அனுபா போன்ஸ்லே மற்றும் சன்ஸ்கிருதி தல்வார்
மாதவிடாய் வசதிகளின்றி முடக்கப்பட்டிருக்கும் பள்ளி மாணவிகள்
உத்தரப்பிரதேசத்தின் சித்ரக்கூட் மாவட்டத்திலுள்ள பள்ளிகள் அடைக்கப்பட்டிருப்பதால் ஏழைக் குடும்பத்தின் இளம்பெண்கள், இலவச மாதவிடாய் நேப்கின்கள் கிடைக்கும் வழியின்றி ஆபத்தான வழிகளுக்கு தள்ளப்படுகின்றனர். உத்தரப்பிரதேசத்தில் மட்டும் மாதவிடாய் நேப்கின்கள் கிடைக்காத பெண்களின் எண்ணிக்கை பல லட்சங்களில் இருக்கிறது
மே 12, 2020 | ஜிக்யாசா மிஷ்ரா
பசுக்களை கணக்கெடுப்பது, கிராமப்புற சுகாதாரம் ஆகிவிடாது
குறைவான ஊதியம், எண்ணற்ற கணக்கெடுப்பு பணிச் சுமை, அறிக்கைகள் தயாரித்தல், பணிகளுக்கு நடுவில் கிராமப்புற குடும்பங்களின் குழந்தைப் பேறு தொடர்புடைய சுகாதாரத் தேவைகளையும் தீர்ப்பதற்கு ஹரியாணாவின் சோனிபட் மாவட்ட சுனிதா ராணி போன்ற ஆஷா பணியாளர்கள் போராடி வருகின்றனர்
மே 8, 2020 | அனுபா போன்ஸ்லே மற்றும் பல்லவி பிரசாத்
நீலகிரியில் ஊட்டச்சத்து குறைபாடு என்பது பிறப்புரிமை
ஹீமோகுளோபினே இல்லாத தாய்மார்கள், 7 கிலோ எடையுள்ள இரண்டு-வயது குழந்தைகள், குடிப்பழக்கம், குறைந்த வருமானம், காடுகளில் வசிப்பது போன்ற காரணங்களால், தமிழ்நாட்டின் கூடலூரில் உள்ள பழங்குடியினப் பெண்கள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்
மே 1, 2020 | ப்ரிதி டேவிட்
ஒரு பேரன் வேண்டும் என்பதற்காக நான்கு பிள்ளைகளை பெற்றோம்'
டெல்லியிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஹரியானா மாநிலத்தின் ஹர்சனா கலன் கிராமம். இங்குள்ள பெண்கள் ஆண்களின் ஆதிக்க மனோபாவம் காரணமாக, தங்களின் சொந்த வாழ்க்கையையும், பிள்ளை பெற்றுக் கொள்ளும் விருப்பத்தையும் தீர்மானிக்க முடியாமல் தவிக்கின்றனர்
ஏப்ரல் 21, 2020 | அனுபா போன்ஸ்லே மற்றும் சன்ஸ்கிருதி தல்வார்
'இப்போது ஆடுகள் என் குழந்தைகளைப் போன்றவை'
மகாராஷ்டிராவின் நந்துர்பர் மாவட்டம் தாத்கான் பகுதியைச் சேர்ந்த பில் பெண்கள், அவமானம், சமூக புறக்கணிப்பு, குழந்தையின்மைக்கு போதிய சிகிச்சை அளிக்கத் தவறிய கிராமப்புற சுகாதார அமைப்பு ஆகியவற்றுடன் போராடி வருகின்றனர்
ஏப்ரல் 13, 2020 | ஜோதி ஷினோலி
’சென்ற ஆண்டில் ஒரே ஆண்தான் கருத்தடைக்கு ஒப்புக்கொண்டார்’
குடும்பக் கட்டுப்பாட்டை 'ஆண்களுக்குச் செய்யவைப்பது’என்பது பரபரப்பாக பேசப்படுவது. ஆனால், பீகாரின் விகாஸ்மித்ராகள் மற்றும் ஆசா பணியாளர்களுக்கோ, ஆண்களைக் கருத்தடை செய்யவைப்பதில் உருப்படியான பலன் கிடைத்தபாடில்லை. வழக்கம்போல பெண்களே அதைச் செய்துகொள்ள நிர்பந்திக்கப்படுகிறார்கள்
மார்ச் 18, 2020 | அம்ருதா ப்யாட்னல்
‘மாத்திரையை மட்டும் கொடுத்து அனுப்பிவிட்டார்கள்’
சட்டிஸ்கரின் நாராயனபூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் எல்லா வசதியும் இருந்தும், பல ஆதிவாசி பெண்கள் அங்கு செல்லாமல் ஆபத்தான கருக்கலைப்புக்கும் பிரசவத்திற்கும் தகுதியற்ற பயிற்சியாளர்களை நாடுகிறார்கள்
மார்ச் 11, 2020 | ப்ரிதி டேவிட்
‘முடிவுக்கு வந்த தொந்தரவு’ – கருத்தடை செய்துகொண்ட நேகா
2016-ம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குப் பிறகு கருத்தடை முகாம்கள் ‘கருத்தடை நாளாக’ மாற்றம் அடைந்தன. ஆனால் இன்றும் பெண்களே பெரும்பாலும் இந்த அறுவை சிகிச்சைகளுக்கு உள்ளாகிறார்கள். அதுவும் உத்தரபிரதேசத்தில் உள்ள பலர், நவீன கருத்தடை முறைகளை பயன்படுத்தும் வாய்ப்பின்றி இந்த அறுவை சிகிச்சையை செய்கிறார்கள்
பிப்ரவரி 28, 2020 | அனுபா போன்ஸ்லே
கூவலபுரத்தின் வித்தியாசமான ‘கெஸ்ட் ஹவுஸ்’
மதுரை மாவட்டத்தில் உள்ள கூவலபுரம் உள்ளிட்ட ஐந்து கிராமங்களில் மாதவிலக்காகும் பெண்கள் தனியாக “கெஸ்ட் ஹவுஸ்களில்” ஒதுக்கிவைக்கப்படுகிறார்கள். கடவுள் மற்றும் மனிதர்களின் கோபத்திற்கு பயந்து இந்த பாகுபாட்டை யாரும் எதிர்ப்பதில்லை
பிப்ரவரி 20, 2020 | கவிதா முரளிதரன்