காணொளி: மணிப்பூரி பங்க் இசையில் மூத்தவர் அக்கலையின் தத்துவத்தைப் பற்றிப் பேசுகிறார்

சாருங்பம் கோமேய் பங்க் (மேளத்தை) இசையை ஐந்து வயதில் கற்கத் தொடங்கினார். 35 வயதில் அவர் வித்வான் ஆகிவிட்டார். 76 வயதில் தற்போது அவர் மணிப்பூரின் இம்பாலில் உள்ள ஹவ்ரெய்பி அவாங் லெய்காயில் வசிக்கிறார். பங்க் இசையின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தைப் பற்றி சொல்கிறார்.

இரண்டு தலை கொண்ட பங்க் கருவி, இசைக்கருவிகளின் அரசனாக மெய்டெய் சமூகத்தால் கருதப்படுகிறது. பாடலோ அல்லது பங்க் சொலோம் என்ற தற்காப்புக் கலை நடனமோ, அக்கருவி இன்றி எதுவும் முழுமையடையாது.

தமிழில் : ராஜசங்கீதன்

Anubha Bhonsle & Sunzu Bachaspatimayum

அனுபா போன்ஸ்லே 2015ம் ஆண்டில் PARI மானியப் பணியில் இணைந்தவர். சுயாதீன பத்திரிகையாளர். ICFJ Knight மானியப் பணியாளர். மணிப்பூரின் வரலாறையும் ஆயுதப்படை சிறப்புச் சட்டத்தின் தாக்கத்தையும் கொண்ட ‘Mother, Where’s My Country?’ என்ற புத்தகத்தை எழுதியவர். சுன்சு பச்சஸ்பாடிமயும் ஒரு சுயாதீன பத்திரிகையாளர் மற்றும் தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் ஆவார்.

Other stories by Anubha Bhonsle & Sunzu Bachaspatimayum
Translator : Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.

Other stories by Rajasangeethan