ஆசிரியர் குறிப்பு :
இந்தப்பாடல் (மற்றும் வீடியோ), பெல்லா சியோ (அழகே, விடைபெறுகிறேன்) என்கிற பாடல் வகையின் பஞ்சாபி தழுவல். பெல்லா சியோ, 19ஆம் நூற்றண்டின் இறுதியில் வடக்கு இத்தாலியின் போ பள்ளத்தாக்கின் பெண் விவசாயிகள் பாடிய பாடல். பின்னாளில் அந்தப்பாடலை இத்தாலியின் பாசிச எதிர்ப்பாளர்கள் வரிகளை மாற்றி, முசோலியின் சர்வாதிகாரத்திற்கு எதிரான தங்களின் போராட்டத்திற்கு பயன்படுத்திக்கொண்டனர். உலகம் முழுவதும் பாசிசத்திற்கு எதிராகவும், சுதந்திரம் மற்றும் எதிர்ப்பை வெளிப்படுத்தவும் இந்தப்பாடல் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப மாற்றப்பட்டு பாடப்பட்டு வருகிறது.
பஞ்சாபி மொழியில் உள்ள இந்த பாடலை பூஜா சாஹில் பிரமாதமாக பாடியிருக்கிறார். மிக அழகாக படமாக்கபட்டிருக்கும் இந்த வீடியோ நேர்த்தியாக தயாரிக்கப்பட்டிருக்கிறது. தயாரிப்பில் ஈடுப்பட்டிருப்பவர்கள் ஹர்ஷ் மந்தர் தலைமையில் கர்வான் இ மொஹபத் என்கிற பிரச்சாரத்தின் ஊடக குழு. இந்த பிரச்சாரம், ஒருமைப்பாடு, சமத்துவம், சுதந்திரம் நீதி என்று இந்திய அரசியல் சாசனத்தில் உள்ள விழுமியங்களுக்கான தளம்.
கடந்த பல வாரங்களாக தில்லி-ஹரியானா தொடங்கி நாட்டின் பல பகுதிகளுக்கும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் வேகமாக பரவி வருகின்றன. இந்த மூன்று புதிய வேளான் சட்டங்களும் நாடாளுமன்றத்தில் கடந்த செப்டம்பரில் மத்திய அரசால் அதிரடியாக இயற்றப்பட்டது. விவசாயம் மாநிலம் சார்ந்த விஷயம் என்றாலும் இந்த சட்டங்கள் விவசாயிகளை கடுமையாக பாதித்திருக்கின்றன. கீழே இணைக்கப்பட்டுள்ள இந்த பாடலும் வீடியோவும் அந்த போராட்டங்கள் போலவே சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
தமிழில்: பிரியதர்சினி. R.