காணொளி: ‘எனக்கு சேரே தில்லே ஷோனார் கவுர் பாடுவது மிகவும் விருப்பமான ஒன்று’, என்று பர்ஷா கூறுகிறார்

பர்ஷா கராய், பவுல் பாடல்களை தனது 4 வயதில் இருந்து பாடி வருகிறார். அவரை நாம் 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சந்தித்தபோது அவருக்கு 7 வயது (அவருக்கு இப்போது எட்டரை வயது இருக்கும்). அவர் பாசுதேப் தாசிடம் பயிற்சி பெறுகிறார். தாஸ் புகழ்பெற்ற பவுல் பாடகர்.. அவர் போல்பூர் பகுதியில் உள்ள சாந்தினிகேதனில் வசிக்கிறார் . (பார்க்க: Basudeb Baul: singing the ballads of Bengal )

மேற்கு வங்கத்தின் பிர்பும் மாவட்டபோல்பூரின் ஷியாம்பதி கிராமத்திலிருந்து பர்ஷா வருகிறார். அவரது ஆசிரியரின் வீட்டிலிருந்து  சில நிமிட நடை தூரத்தில் அவரின் வீடு உள்ளது. அவர் தனது குடும்பத்தினருடன் வசிக்கிறார். மூத்த சகோதரர், தந்தை, செல்லப்பிராணி பூனை மினியுடன் உள்ளார். அவரது தாய் கிருஷ்ணா 2016ம் ஆண்டு இறந்துவிட்டார். அவரது தந்தை, கவுர்சந்திர கராயும் பவுல் இசைக்கலைஞர்தான். அவருக்கு டோலக், தப்லா, மஞ்சிரா மற்றும் டோதரா ஆகியவையும் இசைக்க தெரியும். அவர் எப்போதும் பாசுதேப் பவுலுடன் சேர்ந்து பவுல் இசை நிகழ்ச்சிகள் மற்றும் மேற்குவங்கம் முழுவதும் நடைபெறும் கண்காட்சிளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் கலந்துகொள்கிறார். அவரது தந்தை மற்றும் பாசுதேப் தாஸ் ஆகியவர்களின் நிகழ்ச்சிகளை பார்த்து பர்ஷாவுக்கு இந்த இசையில் ஆர்வம் ஏற்பட்டது.

PHOTO • Ananya Chakroborty

பர்ஷா தனது தந்தை கவுர்சரண் கராயுடன், ஷியாபதியில் உள்ள தனது வீட்டில்

“எனக்குப் பாடுவது, ஓவியம் வரைவது மற்றும் படிப்புது ஆகியவை பிடித்தமானவை“ என்று பர்ஷா கூறுகிறார். மேற்கு வங்கத்தில் சிறு பெண் குழந்தைகள் பவுல் இசை பயில்வது இயல்பான ஒன்று கிடையாது. பவுல் பாடும் பெண் கலைஞர்கள் இருந்தாலும் அவர்கள் ஆண்களைவிட குறைந்தளவே உள்ளனர். இந்தச் சிறிய வயதில் பாசுதேபிடம் பயிற்சிபெறும் ஒரே பெண் குழந்தை பர்ஷா மட்டுமே.

பவுல் இசை மயக்கக்கூடிய ஒன்று. இந்த இசை, கலாச்சார பாரம்பரியமிக்கதாகவும், வாழ்க்கையின் தத்துவமாகவும் பார்க்கப்படுகிறது. பவுல் இசைக்கலைஞர்கள் தங்களை, அவர்களின் தூய மென்மையான பிரார்த்தனைகள் மூலம் உள் உண்மைகளை வேண்டுபவர்களாகவும், புனிதமான இயற்கையை மீண்டும் கண்டுபிடிப்பவர்களாகவும் பார்க்கிறார்கள். பவுல் இசை, நிபந்தனையற்ற புனிதமான அன்பு, உணர்ச்சிகளின் வெளிப்பாடு மற்றும் மனம் குறித்து பேசுகிறது. இவை அனைத்தும் குழந்தைகள் புரிந்துகொள்ள முடியாத அளவு ஆழமான விஷயங்களாகும். ஆனால், பர்ஷா இந்த உலகத்தில் அவரது பயணத்தை எப்போதோ துவங்கிவிட்டார்.

தமிழில்: பிரியதர்சினி. R.

Ananya Chakroborty

அனன்யா சக்ரபோர்த்தி, விஷ்வா பாரதி பல்கலைக்கழகத்தில் முதுநிலை இதழியல் மற்றும் வெகுஜன தொடர்பியல் முடித்துள்ளார். தற்போது அவர் சுதந்திர பணியாளராக உள்ளார்.

Other stories by Ananya Chakroborty
Translator : Priyadarshini R.

பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.

Other stories by Priyadarshini R.