“எனக்குப் பாடுவது, ஓவியம் வரைவது மற்றும் படிப்புது ஆகியவை பிடித்தமானவை“ என்று பர்ஷா கூறுகிறார். மேற்கு வங்கத்தில் சிறு பெண் குழந்தைகள் பவுல் இசை பயில்வது இயல்பான ஒன்று கிடையாது. பவுல் பாடும் பெண் கலைஞர்கள் இருந்தாலும் அவர்கள் ஆண்களைவிட குறைந்தளவே உள்ளனர். இந்தச் சிறிய வயதில் பாசுதேபிடம் பயிற்சிபெறும் ஒரே பெண் குழந்தை பர்ஷா மட்டுமே.
பவுல் இசை மயக்கக்கூடிய ஒன்று. இந்த இசை, கலாச்சார பாரம்பரியமிக்கதாகவும், வாழ்க்கையின் தத்துவமாகவும் பார்க்கப்படுகிறது. பவுல் இசைக்கலைஞர்கள் தங்களை, அவர்களின் தூய மென்மையான பிரார்த்தனைகள் மூலம் உள் உண்மைகளை வேண்டுபவர்களாகவும், புனிதமான இயற்கையை மீண்டும் கண்டுபிடிப்பவர்களாகவும் பார்க்கிறார்கள். பவுல் இசை, நிபந்தனையற்ற புனிதமான அன்பு, உணர்ச்சிகளின் வெளிப்பாடு மற்றும் மனம் குறித்து பேசுகிறது. இவை அனைத்தும் குழந்தைகள் புரிந்துகொள்ள முடியாத அளவு ஆழமான விஷயங்களாகும். ஆனால், பர்ஷா இந்த உலகத்தில் அவரது பயணத்தை எப்போதோ துவங்கிவிட்டார்.
தமிழில்: பிரியதர்சினி. R.