“இந்த விவசாயிகள் இங்கு ஏன் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும்,” என்றார் நாஷிக் சுயோஜித் வளாகத்தில் உள்ள கார்ப்பரேட் நிறுவனத்தின் அலுவலக உதவியாளரான 37 வயது சந்திரகாந்த் படேகர். பிப்ரவரி 20ஆம் தேதி மாலை 6 மணியளவில் மும்பை நாக்கா திடலுக்கு செல்லும் வழியில் உள்ள இக்கட்டடத்தை ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்து சென்றபோது, படேகர் பணிகளை முடித்திருந்தார்.

“கிராமங்களில் ஒவ்வொரு நீர்த் துளியும் கணக்கிடப்படுகிறது. கொஞ்சம் தண்ணீரைப் பெறுவதற்கு மக்கள் பல கிலோமீட்டர்கள் நடக்கின்றனர். நகரில் நாம் குளிப்பதற்கே ஒவ்வொரு முறையும் 25-30 லிட்டர் தண்ணீரை வீணடிக்கிறோம்,” என்கிறார் படேகர். அவர் வேலை செய்யும் நிதிநிறுவனத்தில் கடன் பெற்ற விவசாயிகள் திரும்ப செலுத்த முடியாமல் தவிக்கும் விவசாயிகளின் துயரங்களை அறிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  “எங்களது வாடிக்கையாளர்களில் பலர் விவசாயிகள். விவசாயத்திற்கு நீரில்லை, என்பதால் தவணையை அவர்களால் செலுத்த முடிவதில்லை.”

விவசாயிகள் பேரணியாக சென்றபோது, படேகர் (புகைப்படத்தில் நீல நிற உடையில் சுட்டிகாட்டுபவர், ) மற்றொரு நிதிநிறுவன நண்பருடன் புகைப்படங்கள் எடுத்தனர். அலுவலக கட்டடத்தின் மேல் தளத்திலிருந்து செல்ஃபி எடுத்துக் கொண்டனர். தற்போதைய அரசால் விவசாயிகளை பாதுகாக்க முடியாது என படேகர் நினைக்கிறார். “நான்கு ஆண்டுகளில் அவர்கள் விவசாயிகளை ஆதரிக்கவில்லை. நான்கு மாதங்களில் அவர்கள் எப்படி செய்வார்கள்?” விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக இப்போது அரசு உறுதி அளித்திருப்பதற்கு அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தமிழில்: சவிதா

Rahul M.

ராகுல் M. ஆந்திரப் பிரதேசம் அனந்தபூரிலிருந்து இயங்கும் சுதந்திர ஊடகவியலாளர்.

Other stories by Rahul M.
Translator : Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.

Other stories by Savitha