வீடியோவைப்பாருங்கள்

பாவாரி என்பது, குஜராத் மாநில டாங் மாவட்டத்தில் உள்ள ஆதிவாசி சமூகத்தின் பாரம்பரிய இசைக்ககருவி. வழக்கமாக கொண்டாட்டங்களின்போதும், திருவிழாக்களின்போதும் இது வாசிக்கப்படுகிறது. உள்ளூரில் கிடைக்கும் மரங்களிலிருந்து இந்தக்கருவி செய்யப்படுகிறது. கொம்பு போன்ற இணைப்பு பொருத்தப்பட்டு, அடர் நீல நிறம் மற்றும் வெளிர் சாம்பல் நிற கலவையில் வர்ணம் பூசப்படுகிறது. மஹாராஷ்ட்ராவில் உள்ள துலே மாவட்டத்திலும் பாவாரி இசைக்கப்படுகிறது. அங்கு திருமண விழாக்களின்போது வாசிக்கப்படுகிறது. டாங்கில் இது அடிக்கடி இசைக்கப்படுகிறது. குறிப்பாக டாங் தர்பார் எனப்படும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படும் வாரத்தில் மூன்று நாட்கள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் விழாவில் வாசிக்கப்படுகிறது. தற்போது, வெகு சிலரே பாவாரி வாசிக்கிறார்கள்.

தமிழில்: பிரியதர்சினி. R.

Translator : Priyadarshini R.

பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.

Other stories by Priyadarshini R.