வங்காள விரிகுடாவின் பக்கத்தில் உள்ள மகாபலிபுரத்தில் ஒரு சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் மீனவர்கள் கடலுக்குள் செல்வதிலிருந்து சிறிது ஓய்வு எடுப்பதற்காக சீட்டு விளையாடுகிறார்கள்
அவர்களின் ஒரு நாள் என்பது அதிகாலையில் சூரிய உதயத்துக்கு முன்பாகவே தொடங்குகிறது. அதிகாலையில் அவர்கள் கடலுக்குள் போவார்கள். மீன் கிடைக்கும் பருவ காலத்தைப் பொறுத்து, அவர்கள் சில மணி நேரங்களில் கரைக்குத் திரும்பும்போது, வழக்கமாக இன்னும் காலை நேரமாகத்தான் இருக்கும். கரைக்கு வரும்போது அவர்கள் பிடித்து கொண்டு வந்த மீன்கள், மீன் வியாபாரிகளால் ஏலம் விடப்படும். பின்னர் மீனவர்கள் வீட்டுக்குப் போவார்கள். சாப்பிட்டு, தூங்கி, களைப்பு போவதற்காகத் தூங்குவார்கள். பின்னர், அவர்கள் மீண்டும் கடற்கரைக்குத் திரும்பி வந்து தங்கள் வலைகளைச் சரி பார்த்து ஏதேனும் பழுது இருந்தால் சரி செய்வார்கள். அவர்களது ஒரு நாள் வேலை முடிந்ததும், அவர்கள் கடற்கரையில் அமர்ந்து சீட்டுக் கட்டு விளையாடி, ஓய்வெடுக்கிறார்கள்.