பல கோடி மக்கள் கண்ட கனவுதான் அவருடைய நாடு. அதற்காக உயிர்த்தியாகம் செய்தவர்களும் பலர் உண்டு. கடந்த சில வருடங்களாக அவரும் கனவு காண தொடங்கியிருக்கிறார். திடீரென ஒரு கும்பல் தோன்றி ஒரு மனிதனை உயிருடன் எரிப்பதை அவர் பார்க்கிறார். அவரால் அதை தடுக்க முடியவில்லை. இச்சமயத்தில் அவர் ஒரு தனி வீட்டை பார்க்கிறார். அங்கு முற்றத்தில் கூட்டம் கூடியிருக்கிறது. சில பெண்கள் அழுது கொண்டிருக்கின்றனர். துணி போர்த்தப்பட்ட இரு சடலங்களுக்கு முன் சில ஆண்கள் அசைவின்றி நின்று கொண்டிருந்தனர். சடலத்துக்கருகே ஒரு பெண் மூர்ச்சையாகிக் கிடக்கிறார். சடலங்களை பார்த்தபடி ஒரு சிறுமி அமர்ந்திருந்தாள். அக்கனவை இவ்வளவு தூரம் கண்டதற்கே அவர் குற்றவுணர்வு கொண்டார். வெகுமுன்பே அவர் கனவு காணுவதை முடித்திருக்க வேண்டும். கனவுலகுக்கு வெளியே, நாடு ஒரு சுடுகாடாய் ஆகிவிட்டதை அவர் அறிவார். ஆனால் கனவை எப்படி முடித்து அதிலிருந்து எப்படி வெளியேறுவது என்பது அவருக்கு தெரியவில்லை.

தேவேஷ் இந்தியில் கவிதை வாசிக்கிறார்

பிரதிஷ்தா பாண்டியா ஆங்கிலத்தில் கவிதை வாசிக்கிறார்


तो यह देश नहीं…

1.
एक हाथ उठा
एक नारा लगा
एक भीड़ चली
एक आदमी जला

एक क़ौम ने सिर्फ़ सहा
एक देश ने सिर्फ़ देखा
एक कवि ने सिर्फ़ कहा
कविता ने मृत्यु की कामना की

2.
किसी ने कहा,
मरे हुए इंसान की आंखें
उल्टी हो जाती हैं
कि न देख सको उसका वर्तमान
देखो अतीत

किसी ने पूछा,
इंसान देश होता है क्या?

3.
दिन का सूरज एक गली के मुहाने पर डूब गया था
गली में घूमती फिर रही थी रात की परछाई
एक घर था, जिसके दरवाज़ों पर काई जमी थी
नाक बंद करके भी नहीं जाती थी
जलते बालों, नाखूनों और चमड़ी की बू

बच्ची को उसके पड़ोसियों ने बताया था
उसका अब्बा मर गया
उसकी मां बेहोश पड़ी थी

एक गाय बचाई गई थी
दो लोग जलाए गए थे

4.
अगर घरों को रौंदते फिरना
यहां का प्रावधान है
पीटकर मार डालना
यहां का विधान है
और, किसी को ज़िंदा जला देना
अब संविधान है

तो यह देश नहीं
श्मशान है

5.
रात की सुबह न आए तो हमें बोलना था
ज़ुल्म का ज़ोर बढ़ा जाए हमें बोलना था

क़ातिल
जब कपड़ों से पहचान रहा था
किसी का खाना सूंघ रहा था
चादर खींच रहा था
घर नाप रहा था
हमें बोलना था

उस बच्ची की आंखें, जो पत्थर हो गई हैं
कल जब क़ातिल
उन्हें कश्मीर का पत्थर बताएगा
और
फोड़ देगा
तब भी
कोई लिखेगा
हमें बोलना था

இது நாடல்ல…

1.
ஒரு கை உயர்ந்தது
ஒரு முழக்கம் முழங்கப்பட்டது
ஒரு கூட்டம் அணிவகுத்தது
ஒரு மனிதன் உயிருடன் எரிக்கப்பட்டான்.

ஒரு சமூகம் துயருற்றது.
ஒரு நாடு வெறுமனே வேடிக்கை பார்த்தது.
ஒரு கவிதை அங்கு இறந்ததாக
ஒரு கவிஞர் சொன்னார்.

2.
யாரோ சொன்னார்
இறந்த மனிதனின் கண்கள்
மேலிருந்து கீழாக திரும்பியதென.
அப்போதுதான் அவனால் நிகழ்காலத்தை பார்க்க முடியாது
கடந்தவற்றை மட்டும் பார்த்திருக்க முடியும்.
யாரோ கேட்டார்,
ஒரு மனிதன் நாடாகக் முடியுமா என

3.
அந்த நாளில் சூரியன் தெருமுனையில் மறைந்தது
இரவின் நிழல் தெருக்களில் அலைந்தது.
ஒரு வீட்டுக் கதவுகளில் பாசி வளர்ந்து கொண்டிருக்கிறது.
வீட்டை தாண்டி ஒருவர் போக முடியாது
கறி எரியும் வீச்சம்
நுரையீரலை நிறைக்க மறுத்து
நீங்கள் மூக்கைப் பொத்தி சென்றாலும் அதை கடக்க முடியாது.

பக்கத்து வீட்டுக்காரர்கள் அப்பெண்ணிடம்
தகப்பன் செத்த விஷயத்தையும்
தாய் மயங்கிக் கிடப்பதையும்
ஒரு பசு காக்கப்பட்டதையும்
இருவர் உயிருடன் எரிக்கப்பட்டதையும் சொல்கின்றனர்.

4.
வீடுகளை அழிப்பதற்கு
இங்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது.
மனிதரை கொல்ல இங்கு
சட்டம் இருக்கிறது
சட்டப்பூர்வமாக நீங்கள்
மக்களை உயிருடன் எரித்துக் கொல்லவும் முடியும்.

இதை நாடென யார் சொன்னார்?
இது ஒரு சுடுகாடு.

5.
இரவுக்கு பின் காலை புலராதபோது
நாம் பேசத் தொடங்க வேண்டும்
அதிகாரம் ஒடுக்குமுறையாகும்போது
நாம் பேசத் தொடங்க வேண்டும்.

கொலைகாரன்
அவரின் உடைகளை ஆராயும்போது
அவரின் உணவை முகரும்போது
கூரையை இழுத்து போடும்போது
வீட்டின் பரப்பை அளக்கும்போது
நாம் பேசத் தொடங்க வேண்டும்.

அந்த சிறுமி
இப்போது பார்வை நிலைகுத்தி அமர்ந்திருக்கிறாள்
நாளை அவர்கள் சொல்வார்கள்
காஷ்மீரிய கற்களை கண்களில்
அவள் மறைத்து வைத்திருந்தாளென.
அவற்றை நாம் வெடிக்க விடுவோம்.
அப்போதும் ஒருவேளை
யாரேனும் சொல்வார்
ஓ நாம் பேசத் தொடங்க வேண்டுமென!

தமிழில்: ராஜசங்கீதன்

Poem and Text : Devesh

தேவேஷ் ஒரு கவிஞரும் பத்திரிகையாளரும் ஆவணப்பட இயக்குநரும் மொழிபெயர்ப்பாளரும் ஆவார். இந்தி மொழிபெயர்ப்பு ஆசிரியராக அவர் பாரியில் இருக்கிறார்.

Other stories by Devesh
Editor : Pratishtha Pandya

பிரதிஷ்தா பாண்டியா பாரியின் மூத்த ஆசிரியர் ஆவார். இலக்கிய எழுத்துப் பிரிவுக்கு அவர் தலைமை தாங்குகிறார். பாரிபாஷா குழுவில் இருக்கும் அவர், குஜராத்தி மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார். கவிதை புத்தகம் பிரசுரித்திருக்கும் பிரதிஷ்தா குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பணியாற்றுகிறார்.

Other stories by Pratishtha Pandya
Painting : Labani Jangi

லபானி ஜங்கி 2020ம் ஆண்டில் PARI மானியப் பணியில் இணைந்தவர். மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். சுயாதீன ஓவியர். தொழிலாளர் இடப்பெயர்வுகள் பற்றிய ஆய்வுப்படிப்பை கொல்கத்தாவின் சமூக அறிவியல்களுக்கான கல்வி மையத்தில் படித்துக் கொண்டிருப்பவர்.

Other stories by Labani Jangi
Translator : Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.

Other stories by Rajasangeethan