இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் வாழும் கிராமத்து பெண்களின் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தை இத்தொடர் பேசுகிறது. கருவுறாமையினால் சுமத்தப்படும் பழி, பெண்ணுக்கான கட்டாய குடும்ப கட்டுப்பாடு, குடும்பக் கட்டுப்பாட்டில் ஆணின் பங்குபெறாத தன்மை மற்றும் பலருக்கு எட்டாத தூரத்தில் இருக்கும் கிராமப்புற சுகாதார அமைப்புகளின் போதாமை போன்றவற்றின் மீது இத்தொடரின் பல கட்டுரைகள் வெளிச்சம் பாய்ச்சுகிறது. தகுதி பெறாத மருத்துவ அலுவலர்கள், ஆபத்தான பிரசவங்கள், மாதவிடாயால் காண்பிக்கப்படும் பாரபட்சம், மகன்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் போன்றவற்றை பேசும் கட்டுரைகளும் உண்டு.

இக்கட்டுரைகளில் பல அன்றாடப் போராட்டங்களை பற்றி இருந்தாலும் கிராமப்புற இந்தியாவில் பெண்களுக்கு அவ்வப்போது கிடைக்கும் சிறு வெற்றிகளும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது.

இத்தொடரை பற்றி மேலும் தெரிந்து கொள்ள, பின்வரும் காணொளியை பார்க்கவும். முழுத் தொடரை இங்கு படிக்கவும்.

காணொளி: இந்திய கிராமப்புற பெண்களின் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம்

கிராமப்புற பதின்வயது பெண்கள் மற்றும் இளம்பெண்கள் பற்றிய PARI மற்றும் CounterMedia அறக்கட்டளையின்  தேசிய அளவில் செய்தியளிக்கும் திட்டம், விளிம்புநிலையில் வாழும் முக்கியமான குழுக்களின் வாழ்க்கைகளை அவர்களின் அனுபவங்கள் கொண்டே ஆராயும் இந்திய மக்கள்தொகை அறக்கட்டளையின் முன்னெடுப்பின் ஒரு பகுதியாகும்.

தமிழில் : ராஜசங்கீதன்

Translator : Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.

Other stories by Rajasangeethan