ஒன்று பெரிதாகவும் மற்றொன்று சிறியதாகவும் ஆக  இரண்டு பக்கங்களுடன் பீப்பாய் வடிவம் கொண்ட இசைக்கருவி தென்னிந்திய கர்நாடக இசையில் உபயோகப்படுத்தப்படும் மிருதங்கம் ஆகும்.


பெரும்பாலும் பெண்கள் இந்த மிருதங்கம்  வசிப்பதைக் காண்பது அரிது.ஆனால் தமிழ்நாடு கிராமத்தைச் சேர்ந்த கட்டைக்கூத்து குருகுலத்தில் 14 வயது பெண்கள் இருவர் இந்த மிருதங்கத்தை எளிதாகவும் திறமையாகவும் வாசிக்கிறார்கள். A சங்கீதா  இந்த வாசிப்பை முன்னின்று  நடத்த A ஸ்ரீமதி  அதே லாவகத்துடன் வாசிப்பைப் பின் தொடர்கிறார்.

இந்த குடியிருப்பு வகை சேர்ந்த குருகுலப் பள்ளி காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த புஞ்சரசாந்தங்கல் எனும் கிராமத்தில் உள்ளது.  இங்கு 12 ம் வகுப்பு வரை வழக்கமாகப் பயிலும் கல்வியுடன்  மாணவர்கள் மாநில அளவில் கட்டைக்கூத்து எனும் கிராமியக்  கலையில் பயிற்சி பெறுகிறார்கள்.. கட்டைக்கூத்தில்  பாட்டைத் தவிர , நடிப்பு, ஒப்பனைக் கலை , நாட்டியம் மற்றும் ஏதாவதொரு இசைக்க கருவி ஆகியவைகள் பயில்விக்கப்படுகின்றன .

நமீதா வாய்கர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். PARI-யின் நிர்வாக ஆசிரியர். அவர் வேதியியல் தரவு மையமொன்றில் பங்குதாரர். இதற்கு முன்னால் உயிரிவேதியியல் வல்லுனராக, மென்பொருள் திட்டப்பணி மேலாளராக பணியாற்றினார்.

Other stories by Namita Waikar
Translator : Subramanian Sundararaman

சுப்ரமணியன் சுந்தரராமன் கோவையில் பயின்ற ஒரு வேளாண் பட்டதாரி. உர நிறுவனத்தில் விற்பனைத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். வேண்டுகோளின் பேரில் ஆங்கிலக் கட்டுரைகளை தமிழில் மொழி பெயர்க்கிறார்.

Other stories by Subramanian Sundararaman